மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளை திருடுகிறார்கள் – பிஹாரில் ராகுல் குற்றச்சாட்டு

புர்னியா: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரின் புர்னியாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அதற்காக அவர்களின் முழு முயற்சிகளும் … Read more

தமிழ்நாட்டில் 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் … Read more

பிஹாரில் ஊடுருவல்காரர்களுக்கான வழித்தடத்தை அமைக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன: அமித் ஷா

சசாரம்: பிஹாரில் தொழில்துறைக்கான வழித்தடம் அமைக்க விரும்பிய பிரதமர் மோடியைப் போலல்லாமல், இண்டியா கூட்டணி ஊடுருவல்காரர்களுக்கான வழித்தடம் அமைக்க முயற்சிக்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். பிஹார் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தலின் இறுதி நாள் பிரச்சாரத்துக்காக சசாரத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பாகிஸ்தான் மீது வீசப்படும் மோர்டார் குண்டுகள் இந்த மாநிலத்தில் உள்ள ஒரு ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். சமீபத்தில், ராகுல் மற்றும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் ‘வாக்காளர் … Read more

பூண்டி ஏரியில் இருந்து 2,000 கனஅடி நீர் திறப்பு!

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 2,000 கனஅடி நீர் திறக்கப் படுகிறது. மதுராந்தகம் ஏரியில் இருந்து 300 கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 500 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 300 கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப் படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட் டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட் டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி சத் தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத் … Read more

ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படவில்லை? – மோகன் பகவத் விளக்கம்

மும்பை: பதிவு இல்லாமல் செயல்படுவதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்த நிலையில், ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் மோகன் பகவத் கூறினார். மேலும், அவர் இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பிரியங்க் கார்கே, தேசத்திற்கு சேவை செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படாத அமைப்பாக உள்ளது என்று கேள்வி எழுப்பினார். பிரியங்க் கார்கேவின் கருத்துகளுக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் … Read more

இந்திய பயனர்களுக்காக கூகுள் மேப்ஸில் புதிய அப்டேட்கள் அறிமுகம்!

சென்னை: அண்மையில் இந்திய கூகுள் மேப்ஸ் பயனர்களுக்காக முக்கிய அப்டேட்களை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது பயனர்களின் பயண திட்டத்தை சிறப்பாக அமைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏதேனும் ஒரு புதிய இடத்துக்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் அட்ரஸ் இல்லா தெருக்களை கூட கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பிரபலம். இந்தியாவில் தினந்தோறும் … Read more

எஸ்ஐஆர்-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் குழப்பங்கள் – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நம்முடைய தொடர் எதிர்ப்புகளையும் மீறி சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. பெரும்பாலான மக்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பற்றி இன்னமும் முழுதாக தெரியவில்லை. சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக … Read more

எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: தேஜ் பிரதாப் யாதவ்

பாட்னா: தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். பொறுப்பற்ற நடத்தை காரணமாக தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்குவதாக அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து கொள்வதாக அப்போது தெரிவித்தார். இதன் பின்னர் ஜன் சக்தி ஜனதா தளம் … Read more

கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் – செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர்: கரூரில் சிஐஐ, யங் இன்டியன்ஸின் சார்பில் நடைபெற்ற மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கரூர் சிஐஐ மற்றும் யங் இன்டியன்ஸ் இணைந்து கரூர் விஷன் 2030 நான்காம் பதிப்பு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று (நவ.9ம் தேதி) நடைபெற்றது. பங்கேற்பாளர்களை சிஐஐ தலைவர் பிரபு வரவேற்றார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தேசிய கொடியை ஏற்றிவைத்து ஆற்றிய சிறப்புரையில், “கரூரின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டில் … Read more

பிஹார் மக்கள் 2-ம் கட்ட தேர்தலிலும் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: “பிஹார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள்” என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “இன்று தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள். சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. பிஹார் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதியும் அவர்கள் அதையே செய்வார்கள். பிரதமராக இருந்தாலும் சரி, வேறு … Read more