ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல்நிலையத்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 10-ம் தேதி டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வெடிபொருட்கள் ஆய்வுக்காக ஜம்மு காஷ்மீர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவை வெடித்துள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோ் காவலர்கள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் என்றும் இருவர் ஸ்ரீநகர் நிர்வாகத்தைச் … Read more