மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்குகிறது ஆர்ஜேடி; மடிக்கணினி வழங்குகிறது என்டிஏ: பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம்
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சீதாமரி, பெத்தியா நகரங்களில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 6-ம் தேதி நடைபெற்ற பிஹார் முதல்கட்ட தேர்தலில் பெண்கள், இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களித்தனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவாக அவர்கள் வாக்களித்து இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. இதன்மூலம் காட்டாட்சி (ஆர்ஜேடி) நபர்களுக்கு 65 வால்ட் மின் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆர்ஜேடி தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். … Read more