Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்திய அமேசான்: மஸ்க் உடன் மோதும் பெசோஸ்

புளோரிடா: சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கும் நோக்கில் Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை விண்ணில் செலுத்தி உள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவைக்கு சவால் விடுத்துள்ளது ஜெஃப் பெசோஸின் அமேசான் நிறுவனம். உலக அளவில் இதன் மூலம் வேகமான மற்றும் மலிவு விலையில் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அதற்கான தொடக்க புள்ளியாக 27 Kuiper இன்டர்நெட் சாட்டிலைட்டை ‘அட்லாஸ்’ ராக்கெட் மூலம் விண்ணில் … Read more

பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்: தமிழக விவசாயிகள் கண்டனம்

குமுளி: முல்லை பெரியாறு அணை பலவீனமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்ச நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கேரள … Read more

‘பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடியில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்’ – பிரதமர் மோடி

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் செவ்வாய்க்கிழமை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, … Read more

சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2 முதல் மாற்றம்!

சென்னை: பயணிகளின் கோரிக்கைகள் அடிப்படையில், சென்னையில் ஏசி மின்சார ரயில் கால அட்டவணை மே 2-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்: சென்னையில் கடந்த 19-ம் தேதி முதல் , 12 பெட்டிகளுடன் கூடிய ‘ஏசி’மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா இரண்டு சேவையும், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் … Read more

மார்க் கார்னேக்கு பிரதமர் மோடி வாழ்த்து: கனடா – இந்தியா உறவு இனி?

புதுடெல்லி: கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்திய அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, இந்தியா – கனடா இடையிலான உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “கனடாவின் பிரதமராக நீங்கள் (மார்க் கார்னே) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. … Read more

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு: மதுரை மழலையர் பள்ளிக்கு சீல் வைப்பு

மதுரை: மதுரையில் மழலையர் பள்ளி வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 7 பேரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை கேகே.நகர் விநாயகா நகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (சீடு கிண்டர் கார்டன்) கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிரிகேஜி, யூகேஜி, எல்கேஜி வகுப்புகளுடன் குழந்தைகளை பகல் நேரங்களில் பராமரிக்கும் மையமும் … Read more

“பஹல்காமில் நடந்தது மத ரீதியிலான தாக்குதல் தான்…” – காங். மாநில தலைவருக்கு கணவரை இழந்த பெண் பதில்

மும்பை: “பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களைத்தான் குறி வைத்தனர், நாங்கள் அதைப் பார்த்தோம். எங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். இதை அரசியலாக்க வேண்டாம்” என அந்தத் தாக்குதலில் கணவரை இழந்த பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவார், “பயங்கரவாதிகள் மதத்தைக் கண்டறிந்து பின்னர் மக்களைக் கொன்றதாக சொல்லப்படுகிறது. யாரையாவது நெருங்கிச் சென்று அவர்களிடம் அது குறித்து கேட்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா? … Read more

‘நம்பவைத்து ஏமாற்றப்பட்டோம்’ – பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் அரசு மீது குற்றச்சாட்டு

விழுப்புரம்: திமுக ஆட்சியின் இந்த கூட்டத்தொடரை உறுதியாக நம்பி இருந்த பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 2023-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர் ரூ.2,500 சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு 10 லட்சம் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் 2024-ம் ஆண்டு சம்பள உயர்வு 2,500 … Read more

இந்திய ராணுவத்தின் சைபர்ஸ்பேஸை தாக்க முயன்று பாகிஸ்தான் தோல்வி!

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் சைபர்ஸ்பேஸைத் தாக்க முயன்ற பாகிஸ்தான் ஹேக்கர்கள், அதில் தோல்வி அடைந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தது வெளிப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அது இந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 4 வலைதளங்களை ஹேக் செய்ய முயன்றது கண்டறியப்பட்டுள்ளது. ‘IOK ஹேக்கர்’ – கிலாஃபாவின் இணையம் என்ற புனைப்பெயரின் கீழ் செயல்படும் இந்தக் குழு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இணைய பக்கங்களை சிதைக்கவும், ஆன்லைன் சேவைகளை சீர்குலைக்கவும் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பெறவும் … Read more

‘வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்’ – அமெரிக்கா

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்காட் பெசென்ட், “எங்கள் ஆசிய வர்த்தக கூட்டாளிகளுடனான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் கடந்த வாரம் இந்தியாவில் இருந்தார். கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்துப் பேசினார். … Read more