இந்திரா காந்தி படுகொலையை சித்தரித்து கனடாவில் கொண்டாட்ட ஊர்வலம்: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: கனடாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை சித்தரிக்கும் வகையில் நடந்த ஊர்வலக் காட்சி வெட்கக்கேடானது என்று காங்கிரஸின் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து, கனடா தூதரக அதிகாரிகளிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கண்டனத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வீடியோ காட்சி: சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ காட்சி ஒன்றில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை சித்தரிக்கப்பட்ட ஊர்வலக் … Read more

தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் சீரமைப்பு: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

சென்னை: தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பழங்குடியினர் நலனைக் காக்க தமிழகத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பகுதிகள் இல்லாத போதிலும் பழங்குடியினர்களின் நலன் மற்றும் அவர்களது முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்க தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் (Tamil Nadu Tribes Advisory Council) அரசாணை (நிலை) எண். 3042, உள்துறை, நாள் 04.09.1961-இல் ஏற்படுத்தப்பட்டது. இம்மன்றம் 1978, … Read more

ஆப்கன் மக்களுக்கு இந்தியா உதவுவது ஏன்? – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

புதுடெல்லி: ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டிற்கான இந்தியாவின் கொள்கை என்பது அந்நாட்டு மக்களுக்கு உதவுவதுதான் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டு கால சாதனையை விவரிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஜெய்சங்கரிடம், ஆப்கனுக்கான இந்தியாவின் கொள்கை மற்றும் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்சங்கர், “ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்குள்ள நமது தூதரகத்தில் இருந்த … Read more

குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைவாக உயர்த்தி விவசாயிகளை வஞ்சிக்கிறது மத்திய அரசு: முத்தரசன்

சென்னை: மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைவாக உயர்த்தி விவசாயிகளை வஞ்சிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடப்பாண்டு கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த தொகை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வுகளை கருத்தில் கொண்டால் விலை உயர்வு அர்த்தமற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் … Read more

கருணைக் கொலைக்கு அனுமதியுங்கள்: குடியரசுத் தலைவருக்கு கியான்வாபி மசூதி வழக்கு முன்னாள் மனுதாரர் கோரிக்கை

வாரணாசி: கியான்வாபி மசூதி வழக்கைத் தொடர்ந்த ஐந்து இந்துப் பெண்களில் ஒருவரான ராக்கி சிங், அதிலிருந்து விலகிய நிலையில், தற்போது தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப் மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் … Read more

தமிழக சுகாதாரத் துறையின் 800 ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக சுகாதார துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட 65 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “கரோனா பேரிடர் காலங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு … Read more

“உ.பி.யில் தொடரும் படுகொலைகள் கவலை தரவில்லையா?” – அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

புதுடெல்லி: “உத்தரப் பிரதேசத்தில் தொடரும் படுகொலைகள் உங்களுக்கு கவலை தரவில்லையா?” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக போலீசாரால் அழைத்து வரப்பட்ட ரவுடி சஞ்சீவ் ஜீவா, நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் … Read more

நியூயார்க் நகரத்தை சூழ்ந்த ஆரஞ்சு புகை; அச்சமடைந்த மக்கள்: பின்னணி என்ன?

வாஷிங்டன்: நியூயார்க் நகரம் சில மணி நேரங்கள் ஆரஞ்சு நிற புகையால் மூடப்பட்டதால் மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர். கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் தாக்கத்தினால் உருவான நச்சுப் புகைகள்தான் வட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கிய நிலையில் மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர். இந்தப் புகையினால் நியூயார்க்கில் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது, அதனால் அன்றைய நாளில் உலகளவிலான காற்றின் தரத்தின் … Read more

உலகின் முதல் சோடியம் பேட்டரி: சாதனை முயற்சியில் மதுரை லாரி ஓட்டுநரின் மகள்

மதுரை: தூங்கா நகரமான மதுரை சினிமாவுக்கும், ஆன்மிக, கலாச்சார திருவிழாக்களுக்கு மட்டுமே அடையாளம் காட்டப்படுகிறது. மதுரையில் வசிக்கும் எளிய மக்களின் சாதனைகள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. மதுரையில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவரான சுபத்ரா தனது படிப்பால் புதிய கண்டுபிடிப்பின் வெற்றி இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான ராஜேந்திரன் மகள்தான் சுபத்ரா. தனது படிப்பு மூலம் இஸ்ரோவில் 2005-2006-ம் ஆண்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு செயல்முறை வடிவமைப்பின் பொறியியல் பிரிவில் சுபத்ரா விஞ்ஞானியாகப் … Read more

கடலூர் | 50 ஆண்டுகளாக கேட்கிறோம்… சுடுகாட்டுக்குச் செல்ல சிறு பாலம் வேண்டும் 

கடலூர்: குறிஞ்சிபாடி அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கான உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்கும் சுடுகாடு கே.கே. நகர் மேற்கு பகுதியில் உள்ளது இந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் வாய்க்கால் ஒன்று உள்ளது. ஒவ்வொரு முறையும் உயிரிழந்தவரின் உடலைச் சுமந்து செல்லும் போது, இந்த வாய்க்காலில் இறங்கி, உடலை எடுத்துச் செல்கின்றனர். சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாலம் கட்டித் தர கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும், மனு அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் … Read more