நேபாளத்தில் சிக்கிய 240 பேரை மீட்க தனி விமானம்: ஆந்திர அமைச்சர் லோகேஷ் நடவடிக்கை

புதுடெல்லி: நே​பாளத்​தில் சிக்​கி​யுள்ள ஆந்​தி​ராவை சேர்ந்த 240 பேரை அங்​கிருந்து மீட்டு தனி விமானம் மூலம் விசாகப்​பட்​டினம் அழைத்​துவர ஆந்​திர அமைச்​சர் நாரா லோகேஷ் நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கிறார். நேபாளத்​தில் உள்​நாட்டு கலவரம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் அங்கு சுற்​றுலா சென்ற இந்​தி​யர்​கள் பலர் சிக்​கி​யுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இவர்​களில் ஆந்​தி​ராவை சேர்ந்​தவர்​களும் உள்​ளனர். இவர்​களில் சிலர் அமராவ​தி​யில் உள்ள ஆந்​திர அதி​காரி​களை தொடர்​பு​கொண்டு தங்​களை பத்​திர​மாக மீட்க வேண்​டும் என கோரிக்கை விடுத்​தனர். இதையடுத்து ஆந்​திர முதல்​வர் … Read more

இந்தியாவிடம் திடீரென இறங்கி வரும் ட்ரம்ப் – பின்னணியில் அச்சமா, ராஜதந்திரமா?

“வரி விவகாரத்தில் இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் 50% வரி விதித்த பின்னர் அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா ஜீரோ வரி என்கிறது. காலம் கடந்த அறிவிப்பு இது” என்றெல்லாம் கூறிவந்த ட்ரமப் திடீரென ஞானோதயம் பிறந்ததுபோல் ஒரு ‘பல்டி’ பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான மோடியுடன் … Read more

அரியலூரில் இருந்து சென்னைக்கு 3 புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (செப்.11) தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிஐடியு தொழிற்சங்கம் நீண்ட காலமாக போராட்டத்தில் உள்ளது. அவர்களை அழைத்துப் பேசி உள்ளோம். தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத வகையில் 3 ஆண்டுகளில் 2 முறை ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்து உள்ளோம். கடந்த அதிமுக ஆட்சியில் 1 ஊதிய … Read more

பாஜகவுக்கு வாக்களிப்பது கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும்: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் கேரளாவின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்தார். ஓணம் மரபுகளை மாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார் எர்ணாகுளத்தில் மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சமீபத்திய கேரள வருகையின் போது, ​​வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத வாக்கினை பெறுவதையும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதையும் … Read more

நேபாளத்தில் வன்முறை ஓயாததால் பதற்றம் நீடிப்பு: அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்

காத்மாண்டு: நே​பாளத்​தில் அரசுக்கு எதி​ராக வெடித்த கலவரத்​தால் பதற்​றம் நீடிக்​கும் நிலை​யில், அரசி​யல்​வா​தி​களை குறி​வைத்து தாக்​குதல்​கள் நடக்​கின்​றன. அங்​குள்ள வணிக வளாகங்​களை இளைஞர்​கள் கும்​பலாகச் சென்று கொள்​ளை​யடித்து வரு​கின்​றனர். பொதுச் சொத்​துகளுக்கு சேதம் விளை​வித்​தது தொடர்​பாக இது​வரை 26 பேரை ராணுவம் கைது செய்​துள்​ளது. 2008-ல் அண்டை நாடான நேபாளத்​தில் மன்​ன​ராட்சி முடிவுக்கு கொண்​டு​வரப்​பட்​டு, கம்​யூனிஸ்ட் அரசு ஆட்சி அதி​காரத்​தில் இருந்​தது. இந்​நிலை​யில், நேபாளத்​தில் சமூக ஊடகங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்த விவ​காரத்​தால் நேபாளத்​தில் அரசி​யல் நெருக்​கடி … Read more

பாஜகவால்தான் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை

பரமக்குடி: பாஜகவால்தான் தமிழகத்தில் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது, பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது, என தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பரமக்குடியில் இன்று தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் மற்றும் கட்சியினர் மரியாதை செய்தனர். பின்னர் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: காங்கிரஸ் … Read more

ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் ரத யாத்திரையை தொடங்கி வைத்த கர்நாடக உள்துறை அமைச்சர்: காங்கிரஸில் சர்ச்சை

பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி ஏற்பாடு செய்த ரத யாத்திரையை கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தொடங்கி வைத்தது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. துமகுரு மாவட்டத்தின் திப்தூரில் ஏபிவிபி அமைப்பு ஏற்பாடு செய்த ராணி அபக்கா சவுதா ரத யாத்திரை மற்றும் ஜோதி ஊர்வலம் ஆகியவற்றை கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தொடங்கி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் அதன் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மீது காங்கிரஸ் கட்சி அடிக்கடி … Read more

யார் இந்த சுசீலா கார்கி? – நேபாள ‘ஜென் ஸீ’ போராட்டக்கார்கள் ‘டிக்’ செய்த இடைக்கால பிரதமர்!

ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதி​ராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது. நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்​து, நாட்​டின் அதிப​ராக இருந்த ராம்​சந்​திர பவுடேலும் ராஜி​னாமா செய்​தார். இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்​தில் நிலவி வரும் அரசி​யல் பதற்​ற​மான சூழ்​நிலை காரண​மாக … Read more

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம்: பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இனி அன்புமணி தனது இனிஷியலை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம், பெயருக்குப் பின்னால் ராமதாஸ் என்றுகூட எழுதக்கூடாது என்று ஆவேசமாகக் கூறினார். கடந்த சில மாதங்களாகவே, ராமதாஸுக்கும் – அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. … Read more

‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நடந்து முடிந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பியும், மக்களவையின் காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார். நேற்று முன் தினம் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 767 பேர் வாக்களித்தனர், இதில் 752 வாக்குகள் செல்லுபடியானவை. 15 வாக்குகள் செல்லாதவை. இதில் 452 வாக்குகள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், 300 வாக்குகள் சுதர்சன் ரெட்டிக்கும் கிடைத்தன. இந்த தேர்தலில் 7 பிஜேடி எம்.பி.க்கள், 4 பிஆர்எஸ் … Read more