டெல்லி குண்டுவெடிப்பு சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்: பிரதமர் மோடி

திம்பு (பூட்டான்): டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இரண்டு நாள் அரசு பயணமாக பூடான் நாட்டுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கே திம்புவில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் பேசுகையில், “இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். … Read more

கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதி

கல்பாக்கம்: டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் நேற்று உயிரிழந்த நிலையில், கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, மத்திய அரசின் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு … Read more

பழைய கழிவுகள் விற்பனையின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்

புதுடெல்லி: மத்​திய அரசின் அலு​வல​கங்​களில் இருந்த பழைய கழி​வு​களை விற்​பனை செய்​ததன் மூலம் ரூ.800 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இதைக் கொண்டு 7 வந்தே பாரத் ரயில்​களை வாங்க முடி​யும். இதுகுறித்து மத்​திய பணி​யாளர் நலத் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங், எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2021-ம் ஆண்​டில் அக்​டோபர் 2-லிருந்து 31-ம் தேதி வரை சிறப்பு தூய்மை இந்​தியா திட்​டத்தை மேற்​கொள்​வது என மத்​திய அரசு முடி​வெடுத்​தது. நிர்​வாக சீர்​திருத்​தங்​கள் மற்​றும் பொது குறைதீர்ப்​புத் … Read more

அமெரிக்கர்களுக்கு வரி வருவாயிலிருந்து ரூ.1.77 லட்சம் டிவிடெண்ட் வழங்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்​கர்​களுக்கு வரி வரு​வாயி​லிருந்து டிவிடெண்​டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்​கப்​படும் என அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிப​ராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், இறக்​கும​தி​யாகும் பொருட்​களுக்கு அதை உற்​பத்தி செய்​யும் நாட்​டைப் பொறுத்து 10 முதல் 50% வரை வரி விதித்​தார். நீண்​ட​கால​மாக நில​வும் வர்த்தக பற்​றாக்​குறையை சரி செய்​யவே இந்த நடவடிக்கை என அவர் தெரி​வித்​தார். நாடாளு​மன்ற ஒப்​புதலைப் பெறாமல் மேற்​கொண்ட இந்த நடவடிக்​கையை எதிர்த்து அந்​நாட்டு உச்ச நீதி​மன்​றத்​தில் … Read more

பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரளா​வுக்கு சென்ற 30க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை அம்​மாநில போக்​கு​வரத்து துறை சிறைபிடித்து ரூ.70 லட்​சத்​துக்​கும் மேல் அபராதம் விதித்​தது. இதே​போல், கடந்த 7 நாட்​களாக கர்​நாடக போக்​கு​வரத்து துறை​யும் தமிழக பதிவெண் கொண்ட 60-க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகளை தடுத்து ஒவ்​வொரு பேருந்​துக்​கும் ரூ. 2.20 லட்​சம் வரை அபராதம் விதித்​தது. இதுகுறித்து பேருந்து உரிமை​யாளர்​கள் கேட்​ட​போது, ‘‘2021-ம் ஆண்டு மத்​திய அரசால் உரு​வாக்​கப்​பட்ட ‘ஆல் இந்​தியா … Read more

பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவு

புதுடெல்லி: பிஹாரின் 243 தொகு​தி​களில் முதல்​கட்​ட​மாக 121 தொகு​தி​களுக்கு கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்​ற நிலையில் மீதமுள்ள 122 தொகு​தி​களுக்​கான 2-வது மற்றும் இறு​திக்​கட்ட வாக்குப்​பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடை​பெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 14.55% வாக்குப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பிஹாரின் புர்னியா மாவட்டத்தில் 15.54% வாக்குப்பதிவாகியுள்ளது. முதல்​கட்ட தேர்​தலில் பிஹார் வரலாற்​றில் முதல்​முறை​யாக சுமார் 7 சதவீத வாக்​கு​கள் கூடு​தலாகப் பதிவாகின. பிஹாரில் இரண்​டாம் கட்ட … Read more

ரஷ்யாவுக்கு வருகை தந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு

மாஸ்கோ: நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. அதன்​படி, 2025 முதல் அரை​யாண்​டில் 40,800 பயணி​கள் இந்​தி​யா​விலிருந்து மாஸ்​கோவுக்கு சுற்​றுலா சென்​றுள்​ளனர். காமன்​வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடு​களின் பயணி​கள் மாஸ்​கோவுக்கு சுற்​றுலா செல்​வ​தில் இந்​தியா இரண்​டாவது இடத்​தில் உள்​ளது. 2025 ஜனவரி முதல் ஜூன் வரையி​லான கால​கட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக சிஐஎஸ் நாடு​களுக்கு வெளி​யில் இருந்து 5 லட்​சத்​துக்​கும் … Read more

எல்பிஜி ஆலையில் வேலை நிறுத்தம் இல்லை: சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஐஓசி விளக்கம்

சென்னை: சென்னை பிராந்​தி​யத்​தில் உள்ள எந்த ஓர் இந்​தி​யன் ஆயில் எல்​பிஜி பாட்​டிலிங் ஆலை​யிலும் வேலை நிறுத்​தம் இல்​லை. சிலிண்​டர் தடை​யின்றி விநி​யோகம் செய்​யப்​படு​வ​தாக இந்​தி​யன் ஆயில் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ஐஓசி நிறுவனம் வெளியிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை பிராந்​தி​யத்​தில் உள்ள எந்த ஓர் இந்​தி​யன் ஆயில் எல்​பிஜி பாட்​டிலிங் ஆலை​யிலும் வேலை நிறுத்​தம் இல்லை. அனைத்து எல்​பிஜி பாட்​டிலிங் ஆலைகளும் சீராக இயங்​கு​கின்​றன. இண்​டேன் விநி​யோகஸ்​தர்​களுக்கு சிலிண்​டர்​களை நிரப்​புதல் மற்​றும் அனுப்​புதலில் எந்த ஓர் இடையூறும் இல்​லை. … Read more

திருப்பதி மலைப்பாதையில் மாமிசம் உண்ட தேவஸ்தான ஊழியர்கள் பணி நீக்கம்

திருப்பதி: திருப்பதியில் இருந்து திருமலைக்கு மாமிசம், மதுபானம், சிகரெட், போதைப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் திருப்பதி அலிபிரி பாதாலு மண்டபம் அருகே, தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான ராமசாமி, சரசம்மாள் ஆகியோர் துப்புரவு தொழிலாளர்களுடன் அமர்ந்து மாமிச உணவை சாப்பிட்டுள்ளனர். இதனை அப்பக்கம் நடந்து செல்லும் பக்தர் கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களை கண்டித்தனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டதால், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது … Read more

திமுகவுக்கு ‘செக்’ வைக்கவே அதிமுக வழக்கு: பழனிசாமி விளக்கம்

எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக தவறான தகவலை பதிய வைத்​தால் அதை சரிசெய்​யவே அதி​முக வழக்​கில் இணைந்​துள்​ளது என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். கோவை விமான நிலை​யத்​தில் பழனி​சாமி நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: கோவை​யில் மக்​கள் நடமாட்​டம் உள்ள பகு​தி​யில் மாணவி கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டுள்​ளார். திமுக ஆட்​சி​யில் பெண்​கள், மாணவி​கள், சிறுமிகளுக்கு பாது​காப்பு இல்​லை. திமுக ஆட்​சி​யில் பாலியல் வன்​கொடுமை​கள் சர்​வ​சா​தா​ரண​மாக நடக்​கின்​றன. சட்​டம் ஒழுங்கு … Read more