கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஒன்றியமாக 'அஞ்செட்டி' உதயம்: முதல்வர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 11வது ஊராட்சி ஒன்றியமாக அஞ்செட்டியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.270 கோடியே 75 லட்சம் மதிப்பிலான 193 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.562 கோடியே 14 லட்சம் மதிப்பிலான 1,114 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதே போல பல்வேறு துறைகளின் சார்பில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 13 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 52 … Read more

அசாமில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: பூடானில் நில அதிர்வு

கவுகாத்தி: அசாமின் உடல்குரியில் இன்று மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.41 மணியளவில் உடல்குரியில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் உடல்குரி மாவட்டத்தின் மையப்பகுதியில் இருந்தது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி.மீ ஆக இருந்தது” என தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் நில அதிர்வு வடக்கு வங்கத்திலும், அண்டை நாடான … Read more

''ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்'' – நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி

காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார். நேபாள நாட்​டில் ‘ஜென் ஸி’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலை​மையி​லான கம்​யூனிஸ்ட் அரசு கவிழ்ந்​தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்து ’ஜென் ஸி’ இளைஞர்களின் ஆதரவுடன், நாட்டின் இடைக்​கால பிரதமராக நேபாள உச்ச நீதி​மன்​றத்​தின் முன்​னாள் … Read more

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு திருமணம் – உதயநிதி நேரில் வாழ்த்து

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்த ஓராண்டில் மட்டும் அறநிலையத்துறை சார்பாக 1000 இணையர்களுக்கு … Read more

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

டார்ரங்: பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். அசாமின் டார்ரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நமது துணிச்சலான ராணுவ வீரர்களுடன் நிற்பதற்குப் பதிலாக, ஊடுருவல்காரர்களையும் இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் தேசவிரோத சக்திகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்குப் … Read more

'குடியேறிகளே வெளியேறுங்கள்' – லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?

லண்டன்: சனிக்கிழமை அன்று பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். அப்போது பேரணியில் பங்கேற்ற ஒரு குழுவினர் போலீஸார் உடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த பேரணி லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை நடைபெற்றது. இந்த பேரணிக்கு ஆதரவு அளித்து, அதில் பங்கேற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், … Read more

திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டில் இருக்கிறது – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மலிவான அரசியல் செய்கின்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உண்டு என்பதை நான் உணர்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: … Read more

இந்தி, இந்திய மொழிகளின் நண்பன்; போட்டி அல்ல: அமித் ஷா

புதுடெல்லி: இந்தி, இந்திய மொழிகளின் நண்பன் என்றும் போட்டி அல்ல என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தி தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தி தினத்தில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நமது இந்தியா அடிப்படையில் மொழி சார்ந்த நாடு. நமது மொழிகள் கலாச்சாரம், வரலாறு, மரபுகள், அறிவு, அறிவியல், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றை தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்வதற்கான சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகின்றன. … Read more

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சென்னை: முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய நவீன மருத்துவ துறையில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதன் தன்மையை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவது உண்டு. சில நேரங்களில் அறுவை சிகிச்சை மூலம் முறிந்த எலும்புகளை சேர்க்க/கூட்ட உலோகத்தை பயன்படுத்துவது உண்டு. எலும்பு கூடிய பிறகு பொருத்தப்பட்ட உலோகத்தை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது உண்டு. சிலருக்கு அந்த உலோகம் உடலில் … Read more

‘அன்புக் கரங்கள் திட்டம்’ : நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் முதல்வர் ஸ்டாலினால் நாளை தொடங்கி வைக்கப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது. மிகவும் … Read more