பாகிஸ்தான் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

டார்ரங்: பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். அசாமின் டார்ரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நமது துணிச்சலான ராணுவ வீரர்களுடன் நிற்பதற்குப் பதிலாக, ஊடுருவல்காரர்களையும் இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் தேசவிரோத சக்திகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்குப் … Read more

'குடியேறிகளே வெளியேறுங்கள்' – லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?

லண்டன்: சனிக்கிழமை அன்று பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். அப்போது பேரணியில் பங்கேற்ற ஒரு குழுவினர் போலீஸார் உடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த பேரணி லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை நடைபெற்றது. இந்த பேரணிக்கு ஆதரவு அளித்து, அதில் பங்கேற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், … Read more

திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டில் இருக்கிறது – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மலிவான அரசியல் செய்கின்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உண்டு என்பதை நான் உணர்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: … Read more

இந்தி, இந்திய மொழிகளின் நண்பன்; போட்டி அல்ல: அமித் ஷா

புதுடெல்லி: இந்தி, இந்திய மொழிகளின் நண்பன் என்றும் போட்டி அல்ல என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தி தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தி தினத்தில் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நமது இந்தியா அடிப்படையில் மொழி சார்ந்த நாடு. நமது மொழிகள் கலாச்சாரம், வரலாறு, மரபுகள், அறிவு, அறிவியல், தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றை தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்வதற்கான சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகின்றன. … Read more

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சென்னை: முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய நவீன மருத்துவ துறையில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதன் தன்மையை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவது உண்டு. சில நேரங்களில் அறுவை சிகிச்சை மூலம் முறிந்த எலும்புகளை சேர்க்க/கூட்ட உலோகத்தை பயன்படுத்துவது உண்டு. எலும்பு கூடிய பிறகு பொருத்தப்பட்ட உலோகத்தை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது உண்டு. சிலருக்கு அந்த உலோகம் உடலில் … Read more

‘அன்புக் கரங்கள் திட்டம்’ : நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் முதல்வர் ஸ்டாலினால் நாளை தொடங்கி வைக்கப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது. மிகவும் … Read more

டெல்லி – மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில் 160 கி.மீ வேகத்தில் பயணம்

புதுடெல்லி: டெல்​லியி​லிருந்து மீரட்​டுக்கு 84 கி.மீ தூரத்​துக்கு ரூ.30,274 கோடி செல​வில் ரயில் பாதை அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் 55 கி.மீ தூரத்​துக்கு விரைவு ரயில் பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் நமோ பாரத் ரயில் 160 கி.மீ வேகத்​தில் இயக்​கப்​பட்​டது. கிழக்கு டெல்​லி​யில் நியூ அசோக் நகரிலிருந்து உத்தர பிரதேசத்​தில் தெற்கு மீரட் இடையே 15 நிமிட இடைவெளி​யில் 30 நமோ பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. ஒவ்​வொன்​றி​லும் 6 பெட்​டிகள் உள்​ளன. இந்த வழித்​தடத்​தில் 11 ரயில் … Read more

போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் – சீனா

லுப்லியானா [ஸ்லோவேனியா]: மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், பொருளாதார தடைகள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் என்றும் கூறினார். ஸ்லோவேனியாவின் துணைப் பிரதமரும் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சருமான டான்ஜா ஃபாஜோனை சந்தித்த பிறகு, நேற்று லுப்லியானாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வாங் யி, ” சீனா போர்களில் பங்கேற்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை. … Read more

பெரம்பலூர் வர இயலாததற்கு வருந்துகிறேன் – விஜய்

சென்னை: பெரம்பலூர் வர இயலாததற்கு வருத்தம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், இன்னொரு நாள் நிச்சயம் வருவதாக உறுதி அளித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியட்டிருந்த விஜய், முதல் கட்டமாக நேற்று திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். நேற்று அரியலூர், குன்னம், பெரம்பலூர் நகரங்களில் நேற்று அவர் பிரச்சாரத்துக்குச் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அதிக அளவில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூடியதால் பெரம்பலூர் பயணம் கைவிடப்பட்டது. இந்நிலையில், … Read more

மகாராஷ்டிராவின் கல்யாண், டோம்பிவலி நகரங்களில் ஒரே நாளில் 67 பேர் நாய்க்கடியால் பாதிப்பு

தானே: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் மற்றும் டோம்பிவலி நகரங்களில் நேற்று ஒரே நாளில் 67 தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் தெருநாய்க் கடி பாதிப்பு மக்களுக்கு பெரும் தொந்தரவாக மாறியுள்ளது. இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தானே மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக, தெருநாய்க்கடி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 13), கல்யாண் மற்றும் டோம்பிவிலி நகரங்களில் 67 பேர் … Read more