வக்பு சட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: வக்பு (திருத்த) சட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும் அச்சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த … Read more

பிரச்சினையை பேசிதான் தீர்க்க முடியும்: அமெரிக்காவின் 100% வரி எச்சரிக்கை பற்றி சீனா கருத்து

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை​தளத்​தில் நேற்று முன்​தினம் வெளி​யிட்ட பதி​வில், “நேட்டோ நாடு​கள் குழு​வாக இணைந்து சீன பொருட்​கள் இறக்​குமதி மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்க வேண்​டும். அப்​படிச் செய்​தால்​தான் ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அபாயகர​மான போரை முடிவுக்​குக் கொண்​டுவர முடி​யும் என நான் நம்​பு​கிறேன். ரஷ்​யா​விட​மிருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்​ணெய் வாங்​கு​கிறது. இதன் மூலம் கிடைக்​கும் பணத்​தில் ரஷ்யா, உக்​ரைன் … Read more

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஏற்க வாய்ப்பே இல்லை – டிடிவி தினகரன்

சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை, அமமுக அதை ஏற்க வாய்ப்பே இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். அதன் அர்தத்தை வரும் மே மாதம் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். 75 ஆண்டு காலம், 50 ஆண்டு காலம் வளர்ந்த கட்சிகளின் கட்டமைப்புக்கு … Read more

மகாராஷ்டிரா ஆளுநராக ஆச்சார்ய தேவ்விரத் பதவியேற்பு

மும்பை: மகாராஷ்டிர ஆளுநராக ஆச்சார்ய தேவ்விரத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத்துக்கு மகாராஷ்டிராவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், ஆச்சார்ய தேவ்விரத் மகாராஷ்டிர ஆளுநராக பதவியேற்கும் விழா மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் … Read more

நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் மூவர் அமைச்சர்களாக பதவியேற்பு!

காத்மாண்டு: நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். நேபாள பிரதமர் சுசீலா கார்க்கி, எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக குல்மான் கிசிங்கையும், உள்துறை மற்றும் சட்ட அமைச்சராக ஓம் பிரகாஷ் ஆர்யலையும், நிதி அமைச்சராக ரமேஷோர் கானலையும் நியமித்து தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார். இந்த மூன்று அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர். புதிய அமைச்சராக பொறுப்பேற்ற குல்மான் கிசிங் முன்பு நேபாள மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக … Read more

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்களிடம் வரவேற்பு: செங்கோட்டையன்

ஈரோடு: “அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது,” என முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணா பிறந்தநாளை ஒட்டி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அண்ணா உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை ஒட்டி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே … Read more

ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 3 பேர் சுட்டுக் கொலை!

ஹசாரிபாக்: ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று (செப்.5) காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் தலைவர் சஹ்தேவ் சோரன் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கோர்ஹார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டித்ரி வனப் பகுதியில் காலை 6 மணியளவில் மாவோயிஸ்ட் அமைப்பின் சஹ்தேவ் சோரனின் படையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த நடவடிக்கையின் போது ரூ.1 கோடி வெகுமானம் அறிவிக்கப்பட்டிருந்த சஹ்தேவ் சோரன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மாவோயிஸ்ட் … Read more

வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி; 1.5 லட்சம் பேர் பங்கேற்பு

லண்டன்: இங்​கிலாந்​தில் வெளி​நாட்​டினர் அதி​கள​வில் குடியேறு​வதை கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்​வலர் டாமி ராபின்​சன் தலை​மை​யில் நேற்று முன்​தினம் லண்​டனில் “யுனைட் தி கிங்​டம்” பிரம்​மாண்ட பேரணி நடை​பெற்​றது. இதில், 1.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர். அப்​போது அவர்​களது போ​ராட்​டத்​துக்கு போட்​டி​யாக சட்​டப்​பூர்வ குடியேறிகளுக்கு ஆதரவு தெரி​வித்து “பாசிசத்​துக்கு எதி​ரான பேரணி”க்கு ஸ்டாண்ட் அப் டு ரேசிசம் என்ற அமைப்பு ஏற்​பாடு செய்​திருந்​தது. இதில், 5,000-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர். … Read more

தமிழகத்தில் நாளை முதல் செப்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஒடிசா கடலோரப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி, வடக்கு தெலங்​கானா மற்​றும் அதையொட்டிய விதர்பா பகு​தி​களில் நில​வியது. இது, மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, மத்​திய விதர்பா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களை நோக்கி நகரக்​கூடும். தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் … Read more

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

சண்டிகர்: பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டம், கதூர் சாஹிப் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் லால்புரா. கடந்த 2013-ல் 19 வயது தலித் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தாக்கப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மஞ்சிந்தர் சிங் லால்புரா உள்ளிட்டோருக்கு எதிராக பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்ட நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் உள்ளிட்ட 7 பேருக்கு 4 … Read more