தமிழகத்தில் நாளை முதல் செப்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஒடிசா கடலோரப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி, வடக்கு தெலங்​கானா மற்​றும் அதையொட்டிய விதர்பா பகு​தி​களில் நில​வியது. இது, மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, மத்​திய விதர்பா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களை நோக்கி நகரக்​கூடும். தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் … Read more

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

சண்டிகர்: பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டம், கதூர் சாஹிப் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் லால்புரா. கடந்த 2013-ல் 19 வயது தலித் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தாக்கப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மஞ்சிந்தர் சிங் லால்புரா உள்ளிட்டோருக்கு எதிராக பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்ட நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் உள்ளிட்ட 7 பேருக்கு 4 … Read more

வடபழனி முருகன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அக்.13-ம் தேதி கடைசி நாள்

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் ஓது​வார் பயிற்​சிப் பள்​ளி​யில் பகு​திநேர வகுப்​புக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது. இதற்கு அக்​.13-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. முரு​கன் கோயில்​களில் தொன்​மை​யான தென்​பழனிக்கு நிக​ராக சென்னை வடபழனி​யில் அமைந்​துள்ள முரு​கன் கோயில் புகழ்​பெற்று விளங்​கு​கிறது. இக்​கோயி​லில் தினசரி ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசித்து வரு​கின்​றனர். ஏராள​மான பக்​தர்​கள் காவடி எடுத்​து, அலகு குத்தி வேண்​டு​தல் நிறைவேற்​றும் தலமாக​வும் திகழ்​கிறது.அறநிலை​யத்​துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள இக்​கோ​யில் சட்​டப்​பிரிவு, 46(3)ன் கீழ் … Read more

சிறிய பிரச்சினை பெரிதாக வெடிக்கும்: ஆதித்யநாத் எச்சரிக்கை

புதுடெல்லி: உத்தர பிரதேசம் லக்​னோ​வில் ராம் மனோகர் லோகியா மருத்​துவ அறி​வியல் மையத்​தின் நிறுவன தின நிகழ்ச்​சி​யில் உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்​டார். அப்​போது அவர் பேசுகை​யில், ‘‘மருத்​து​வ​மனை​களில் ஆம்புலன்ஸ் வாக​னங்கள் கிடைப்பது, ரத்தம் கிடைப்​பது போன்றவை சின்ன சின்ன விஷ​யங்​கள் தான். இதற்​கெல்​லாம் சரி​யான நேரத்​தில் தீர்வு காண​வில்லை என்​றால் பெரிய பிரச்​சினை​களாக வெடிக்​கும். நேபாளத்​தில் சமீபத்​தில் என்ன நடந்​தது என்​பதை நீங்​கள் பார்த்​திருப்​பீர்​கள்’’ என்று தெரிவித்தார். Source link

இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்

காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார். நேபாளத்தில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், தொழிலதிபர்கள், பணக்காரர்களின் வாரிசுகள் பணத்தை தண்ணீர்போல செலவழிப்பது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வது, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சந்தோஷமாக இருப்பது பொதுமக்களை எரிச்சலடைய செய்தது. இந்த செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதையடுத்து, நேபாளம் முழுவதும் … Read more

“எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் முன்னேறிச் செல்வோம்” – முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி

சென்னை: யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நமது மதுரை மாநாட்டில் அறிவித்ததைப் போலவே. “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் நேற்று (13.09.2025) தொடங்கினோம். எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட மக்கள் … Read more

பஹல்காமில் பலியான 26 பேரை விட பணம் முக்கியமா? – இந்தியா-பாக். கிரிக்கெட் போட்டி குறித்து ஒவைசி விமர்சனம்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நடத்த மத்திய பாஜக அரசு எடுத்த முடிவை ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடுமையாக சாடினார். மேலும், 26 பேரின் உயிரை விட பணம் முக்கியமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். துபாயில் இன்று பாகிஸ்தானுடன் இந்தியா மோதும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஒவைசி, “அசாம் முதல்வர், … Read more

நாளையுடன் முடிவடையும் கெடு – செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் என ஓபிஎஸ் பேட்டி

திண்டுக்கல்: “சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன், செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார். டெல்லி செல்லும் எண்ணம் எனக்கு இல்லை” என திண்டுக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனியில் இருந்து சென்னை செல்ல திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகைதந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் கொடுத்த கெடு முடிவடையும் நிலையில், அவர் திரும்பவும் ஒரு நல்லசெய்தி சொல்வார். சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளது. உரியநேரத்தில் சந்திப்பேன். கூடிய விரைவில் சந்திப்பேன். உங்களிடம் … Read more

''நயன்தாரா வந்தால் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும்'' – விஜய்யை சீண்டிய சீமான்

கோவை: ரஜினி, அஜித் வந்திருந்தால் இதைவிடவும் கூட்டம் வரும். நயன்தாரா வந்தால் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் வரும். நீங்கள் கூட்டத்தை பார்க்காதீர்கள்; கொள்கையை பாருங்கள் என விஜய்க்கு திரண்ட கூட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஜய் பரப்புரையை ஆரம்பித்துள்ளார், மக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். திரையில் பார்த்த கலைஞர் தெருவுக்கு வருகிறார் என்பதால் விஜய்யை பார்க்க மக்கள் வந்துள்ளனர். நாங்கள் சின்ன … Read more

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

காத்மாண்டு: நே​பாளம் முழு​வதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்​பட்​டது. நேபாளத்​தில் அரசி​யல் தலை​வர்​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களது ஆடம்பர வாழ்க்​கையை சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வந்​தனர். இதை இளம் தலை​முறை​யினர் மிகக் கடுமை​யாக விமர்​சித்​தனர். இதனால் கடந்த 4-ம் தேதி நேபாளம் முழு​வதும் 26 சமூக வலை​தளங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து அரசுக்கு எதி​ராக இளம் தலை​முறை​யினர் தலைநகர் காத்​மாண்​டு​வில் குவிந்து பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தினர். இந்த போராட்​டம் கலவர​மாக மாறியது. இதில் 51 … Read more