நவ.12-ல் டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வரும் நவ.12-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (நவ.9), நாளை மறுதினமும் … Read more

வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்காக பொய் சொல்வதா? – ராகுல் காந்தி மீது ராஜ்நாத் சிங் காட்டம்

ரோஹ்தாஸ் (பிஹார்): வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்காக வாக்கு திருட்டு நடப்பதாக பொய் சொல்வதா என ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரின் ரோஹ்தாஸில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “பிஹார் தேர்தலை முன்னிட்டு வாக்கு திருட்டு குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைக்கிறார். இதன்மூலம், தேர்தலுக்கு முன்னதாக அவர் வாக்காளர்களை தவறாக வழிநடத்துகிறார். பிஹார் மக்களின் வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி உண்மையிலேயே நம்பினால், தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் … Read more

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் கூட்ட உயிரிழப்பு தொடர்பாக தவெக பிரச்சார வாகன சிசிடிவி கேமரா பதிவு கேட்டு சிபிஐ சம்மன் வழங்கிய நிலையில், கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் வீடியோ, ஆவணங்களை ஒப்படைக்க தவெக வழக்கறிஞர் மற்றும் நிர்வாகிகள் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு … Read more

பிஹாரில் இருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்: அமித் ஷா

பூர்னியா (பிஹார்): சீமாஞ்சல் பகுதியில் இருந்தும், பிஹாரில் இருந்தும் ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பூர்னியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு குழுக்களாக கட்சிகள் பிரிந்துள்ளன. ஒருபக்கம், குண்டர்களின் கூட்டணி. மறுபக்கம், பஞ்சபாண்டவர்களைப் போல 5 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி. பிஹார் முதற்கட்டத் தேர்தல் நடந்து … Read more

“தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுகவை வீழ்த்த முயற்சி” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார் (SIR)” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, “ திமுகவின் 75 ஆண்டுகள் … Read more

மகாத்மா காந்தி அன்று எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது: பிரியங்கா காந்தி

கட்டிஹார் (பிஹார்): ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இனறு காங்கிரஸ் எதிர்கொள்கிறது என பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்டிஹார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, “பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை. ஒருபக்கம் அவர், அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம், நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார். ஒரு காலத்தில் … Read more

எஸ்ஐஆர் பற்றி விவாதம்: ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை: ஸ்டாலின் தலைமையில் நாளை (நவ. 9) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் … Read more

‘பிஹார் முதல்கட்ட தேர்தலில் காட்டாட்சியை வழங்கியவர்களுக்கு 65 வோல்ட் மின் அதிர்ச்சி’ – பிரதமர் மோடி

சீதாமர்ஹி(பிஹார்): பிஹாரில் காட்டாட்சி வழங்கிய ஆர்ஜேடிக்கு முதற்கட்டத் தேர்தலில் மக்கள் 65 வோல்ட் மின் அதிர்ச்சியை அளித்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பகவான் ராமரின் மனைவி சீதாதேவியின் பிறந்த ஊராகக் கருதப்படும் சீதாமர்ஹி-யில் நடைபெற்ற தேர்தல் … Read more

மாலியில் இந்தியர்கள் 5 பேர் கடத்தல்: ஆட்டிப்படைக்கும் ஆயுதக் குழுக்களின் கைவரிசை

பமாகோ: ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் வேலை செய்துவந்த தனியார் மின்சார நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க அங்கு அல்குவைதா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் அட்டாகசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலியின் கோர்பி எனும் பகுதியில் இந்தியர்கள் சிலர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அது … Read more

பொய்யான தகவல்களைக் கூறி முதல்வர் ஸ்டாலினை விமர்சிப்பதா? – அன்புமணி, ஆதவ் அர்ஜுனாவுக்கு காசிமுத்து மாணிக்கம் கண்டனம்

சென்னை: திமுக வர்த்தக அணி செய​லா​ளர் காசி​முத்து மாணிக்​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேம்​பால வழக்​கில் பெங்​களூரு​வில் இருந்து நேராக நீதிபதி அசோக்​கு​மார் வீட்​டுக்கே காலை 11 மணிக்கு சென்று சரண்​டர் ஆனார் தற்போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். பின்​னர் சிறைக்​குச் சென்​று, விடு​தலை​யும் ஆனார். அந்த வழக்கு என்ன ஆனது? 2011 முதல் 2021 வரை அதி​முக​வினர் என்ன செய்​தார்​கள்? சிறை என்​றவுடன் ஓடிப்​போனவர் இல்லை ஸ்டா​லின். சிறை என்​றதும் ஓடோடி வந்​தவர் அவர். கரூரில் உங்​கள் … Read more