“தோல்வி பயத்தில் பழனிசாமியை பற்றியே முதல்வர் ஸ்டாலின் சிந்திக்கிறார்” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “மக்களுக்கான நலனை பற்றி சிந்திக்காமல் தோல்வி பயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: “தமிழகத்தில் மக்கள் விரோத மன்னராட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முழு வன்மத்தையும் அதிமுக மீதும், பொதுச் செயலாளர் பழனிசாமி மீதும் முதல்வர் ஸ்டாலின் கொட்டிக் கொண்டிருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்பை, குறைகளை எடுத்துச் சொல்வதுதான் எதிர்க்கட்சியின் … Read more

கஜுராஹோ கோயில் விவகாரத்தில் நெட்டிசன்கள் விமர்சனம் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

புதுடெல்லி: கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை பி.ஆர்.கவாய் வெளியிட்ட கருத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, “அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரி … Read more

2026-ல் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம்: செந்தில் பாலாஜி நம்பிக்கை

கரூர்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம் என திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தெரிவித்தார். கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ வரவேற்றுப் பேசியது: 2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு முதல்வரின் வருகை கட்டியம் கூறும். 2026 தேர்தல் வெற்றிக் கணக்கை கரூரில் இருந்து தொடங்குவோம். வரும் தேர்தலில் நாம் தான் வெற்றிபெறுவோம். … Read more

பிஹாரில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், பட்டப்படிப்பை முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பிஹாரில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், ‘சார்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் இந்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கிடையே, பிஹாரில் எப்படியாவது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து … Read more

அதிமுக உள்கட்சி விவகாரங்களால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது: ஹெச்.ராஜா

திருச்சி: அதிமுக உள்கட்சி விவகாரங்களால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: செப்.22-ம் தேதி ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் அமலுக்கு வருகிறது. இது வரிவிகித மாற்றம் மட்டுமல்ல, பொருளாதார மாற்றத்தை கொண்டு வரும் திட்டம். இதனால், 2027-ல் பொருளாதாரத்தில் உலகிலேயே 3-வது இடத்துக்கு இந்தியா வரும். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்தபோது அவர் … Read more

வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்களை பாதுகாக்க ராகுல் காந்தி முயற்சி: அமித் ஷா குற்றச்சாட்டு

ரோட்டாஸ்(பிஹார்): வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரின் ரோட்டாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “அவர்கள் (காங்கிரஸ்) ஒவ்வொரு முறையும் தவறான கதையை பரப்புகிறார்கள். ராகுல் காந்தி பிஹாரில் ஒரு யாத்திரை மேற்கொண்டார். அந்த யாத்திரையின் தலைப்பு வாக்கு திருட்டு அல்ல. நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, மின்சார வசதி, சாலை வசதி … Read more

தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை எதிர்கொள்ள முடியாமல் பழனிசாமி திணறுகிறார்: கிருஷ்ணசாமி

திண்டுக்கல்: தினகரன், ஓபிஎஸ், சசிகலா பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறுகிறார். தங்களுடைய அரசியல் சிக்கலை தீர்க்க மறைந்த தலைவர்களை பலிகடா ஆக்க வேண்டாம், என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பலரும் இந்திய சுதந்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதில் தவறில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் மறைந்த தலைவர்களின் பெயரை பயன்படுத்தி அரசியல் … Read more

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவர் கூறுவது போல எந்த ஒரு வாக்கையும் ஆன்லைனில் நீக்க முடியாது என கூறியுள்ளது. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான வார்த்தைகளில் பதில் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை. இந்திய தேர்தல் ஆணையத்தின் உண்மை சரிபார்க்கும் குழு இதனை உறுதிப்படுத்துகிறது. ராகுல் காந்தி கருதுவதைப் போல, எந்த ஒரு வாக்காளரையும் எவர் ஒருவரும் ஆன்லைனில் நீக்க … Read more

“தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்” – ராமதாஸ்

சென்னை: தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஒன்றரை லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கொண்டு வரப்பட்டது. 2012-ஆம் ஆண்டு அச் சட்டத்தில், ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஆசிரியர் … Read more

நேபாள அமைதியை மீட்கும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு: பிரதமர் சுசீலாவிடம் மோடி உறுதி

புதுடெல்லி: நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவரது முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நேபாள பிரதமர் சுசீலா கார்கி உடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் சுசீலா கார்கி உடன் ஒரு அன்பான உரையாடல் நிகழ்த்தினேன். சமீபத்திய … Read more