திருப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முன்னேற்பாடுகள் இல்லாததால் நெரிசல் – பொதுமக்கள் அவதி

திருப்பூர்: திருப்பூர் நல்லூர் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடந்தது. அதில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ 2-ம் கட்ட முகாம், பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. திருப்பூர் மாநகரில் 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 46, 47 மற்றும் 48-வது வார்டுகளுக்கு, திருப்பூர் கூலிபாளையம் சாலை ஆர்.கே.ஜி. மண்டபத்தில் இன்று (செப்.9) நடைபெற்றது. இதில் அளவுக்கதிகமான பொதுமக்கள் திரண்டதால் கடும் நெரிசல் மற்றும் லேசான தள்ளு முள்ளு … Read more

“ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக வருவார்” – டி.கே.சிவகுமார் நம்பிக்கை

பெங்களூரு: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2029-ஆம் ஆண்டு பிரதமராவார் என்றும், நாடு ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “2029-ஆம் ஆண்டு ராகுல் காந்தி இந்த நாட்டின் அடுத்த பிரதமராக வருவார் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவை. இந்த நாட்டை சுற்றிலும் நமக்கு எந்த நண்பர்களும் இல்லை” என்றார். … Read more

நேபாள பிரதமரின் ராஜினாமா ஏற்பு – போராடும் இளைஞர்களின் கோரிக்கை என்ன?

காத்மாண்டு: இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினமா செய்வதாக நேபாள பிரதமர் சர்மா ஒலி அறிவித்த நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ராமச்சந்திர பவுடல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் … Read more

அமமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15-ம் தேதி தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாயம் தொகுதி, செப்டம்பர் 18-ம் தேதி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி … Read more

ஜம்மு காஷ்மீரில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு: 2 வீரர்கள் உயிரிழப்பு, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

குல்காம்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் 2வது நாளாக நடத்திய துப்பாக்கிச் சண்டையில், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குல்காமின் குடார் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இரு தரப்புக்குமான கடுமையான மோதல் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்த நிலையில், பாகிஸ்தானியர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் உட்பட இரண்டு பயங்கரவாதிகளும், இரண்டு வீரர்களும் உயிரிழந்தனர். … Read more

தொடர் போராட்டம் எதிரொலி – நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார். பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் நேற்று தலைநகர் காத்மாண்டுவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய … Read more

தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யக்கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி: ஐகோர்ட்

சென்னை: வாக்காளர் பட்டியல் மோசடி புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் என மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். இந்த … Read more

கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டர் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்வு – தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டரின் பயணக் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்கிறது. அதேநேரத்தில், விபத்து நேராமல் தடுப்பதற்கான தொழில்நுட்ப பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இமயமலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது உத்தராகண்ட் மாநிலம். இதில் உள்ள புனிதத்தலமான கேதார்நாத்திற்கு மூன்று இடங்களிலிருந்து ஹெலிகாப்டர் பயண வசதி உள்ளது. இந்த ஹெலிகாப்டர் வசதி அளிப்பதில் இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம்(யுசிஏடிஏ) கட்டணத்தை 49 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. புதிய கட்டணங்களின் … Read more

ஜெருசலேமில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம்: இஸ்​ரேலில் தீவிர​வா​தி​கள் நடத்​திய திடீர் தாக்​குதலில் 6 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து இஸ்​ரேல் காவல் துறை​யினர் நேற்று கூறிய​தாவது: கிழக்கு ஜெருசலேமில் யிகல் யாடின் தெரு​வில் உள்ள ரமோத்சந்​திப்​பில் இந்த சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. பேருந்​தில் பயணம் செய்த, பேருந்​துக்கு காத்​திருந்த பயணி​கள் மீது காரில் வந்த பயங்​கர​வா​தி​கள் கண்​மூடித்​தன​மாக இந்த துப்​பாக்​கிச்​சூட்டை நடத்​தி​யுள்​ளனர். இதில், 6 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 12 பேர் படு​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். முதல்​கட்ட தகவலின்​படி 2 தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யுடன் வந்து … Read more

செங்கோட்டையன் – அமித் ஷா சந்திப்பு: மவுனம் கலைப்பது யார்?

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, உடல் நலம் குன்றி, மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் இருந்து, அதிமுகவின் அசைவுகள் அனைத்தும் பாஜகவின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்கியிருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில், அதிமுக எம்.எல்.ஏ.க்களால் முதல்வராக தேர்வு பெற்ற சசிகலாவுக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் எஸ்கேப் ஆனது முதல் தர்மயுத்தம், அணிகள் இணைப்பு, இபிஎஸ்ஸின் நான்கரை ஆண்டு கால ஆட்சிக்கான ஆதாரமாக இருந்தது என ஒவ்வொரு அசைவிலும் பாஜக இருந்து வந்துள்ளது. 2021 சட்டசபைத் தேர்தலில் … Read more