“தேர்தல் ஆணைய விதியை கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் சொல்வாரா?” – ஹெச்.ராஜா

சிவகங்கை: “தேர்தல் ஆணைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா?” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றி 150 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, பாஜக சார்பில் சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் தயாராகும் சுதேசிப் பொருட்களை வாங்குவதாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. பாஜக மாவட்டத் தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர் … Read more

பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

மும்பை: பேருந்து மோதி உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​துக்கு ரூ.30 லட்​சம் இழப்​பீடு வழங்க மோட்​டார் விபத்து தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிரா, தானே நகரில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பேருந்து நிறுத்​தத்​தில் ஐ.டி. ஊழியர் தினேஷ் யஷ்வந்த் நின்று கொண்​டிருந்​தார். அங்கு வந்து நின்ற ஒரு பேருந்து வேக​மாக புறப்​பட்​டு பின்​னர் திடீரென பின்​னோக்கி வந்​துள்​ளது. அப்​போது தினேஷ் மீது மோதி​ய​தில் உயி​ரிழந்​தார். தினேஷின் மனை​வி, இது தொடர்​பாக மோட்​டார் விபத்து இழப்​பீடு தீர்ப்​பா​யத்​தில் … Read more

4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல்: தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் … Read more

“பிஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரால் எந்த தாக்கமும் இருக்காது” – தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த கிஷோர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார் என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையின் முதல்கட்டத் தேர்தல் நடந்து முடிந்து இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தேஜஸ்வி யாதவ், பேட்டி அளித்திருந்தார். இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “இந்த கேள்வி, எந்தக் கட்சி எங்களுக்கு செதத்தை … Read more

“சினிமா புகழ் மூலம் மாய பிம்பம்…” – விஜய் மீது அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி தாக்கு

கிருஷ்ணகிரி: “மக்களை சந்திக்காமல் சினிமா புகழை வைத்துக் கொண்டு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல மாய பிம்பம் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்” என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடினார், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள தளிஅள்ளி கிராமத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியது: “2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதுவரையில் நடந்த … Read more

“அரசை மாற்றி, பிஹாரை மாற்றுங்கள்!” – தேர்தல் களத்தில் ராகுல் காந்தி புதிய முழக்கம்

பாகல்பூர் (பிஹார்): “அரசை மாற்றி, பிஹாரை மாற்றுங்கள். இந்த மாற்றம், பிஹாரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்டத் தேர்தலை முன்னிட்டு பாகல்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “நரேந்திர மோடியும் அமித் ஷாவும் பல வருடங்களாக வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்பு அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால், இப்போது அனைத்து ஆதாரங்களும் … Read more

“எஸ்ஐஆர்… ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சி இது!” – கனிமொழி எம்.பி கருத்து

தூத்துக்குடி: “ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்ஐஆர்” என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறியது: “எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கையை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இதனை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால், பிஹாரிலும் நாம் தெளிவாகக் பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற … Read more

ஆர்ஜேடியின் தேர்தல் வாக்குறுதிகள் மீது காங்கிரஸ் கட்சிக்கே நம்பிக்கையில்லை: மோடி

அவுரங்காபாத் (பிஹார்): பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் அளித்துள்ள வாக்குறுதிகள் மீது அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே நம்பிக்கையில்லை என்று பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலை முன்னிட்டு அவுரங்காபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “இதுவரை இல்லாத அளவுக்கு பிஹார் மக்கள் முதற்கட்டத் தேர்தலில் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். முதற்கட்டத் தேர்தலில் கிட்டத்தட்ட 65% வாக்குகள் பதிவாகி உள்ளன. … Read more

தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது!- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: கர்நாடகா, ஹரியானா போல் தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது, வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் பாபுவின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், “எஸ்ஐஆர் எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் நான்காம் தேதியில் … Read more

இந்தியாவில் நடைபெறும் தேர்தலை பார்வையிட தென்னாப்பிரிக்க எம்.பிக்கள் விருப்பம்

புதுடெல்லி: இந்​திய தேர்​தலை பார்​வை​யிட தென்​னாப்​பிரிக்க எம்​.பி.க்​கள் விருப்​பம் தெரி​வித்​துள்​ள​தாக தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளது. இதுகுறித்து தேர்​தல் ஆணைய செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு தென்​னாப்​பிரிக்க தேர்​தல் ஆணை​யத்​தின் தலை​வர் மொசோதோ மோப்​யா​விடம் இருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்​தது. சுமார் 7.5 கோடி வாக்​காளர்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தல் வெற்​றிகர​மாக நடந்​து​முடிய அவர் தனது வாழ்த்​துகளை தெரி​வித்​தார். உலகின் மிக​வும் வெளிப்​படை​யான மற்​றும் திறன் வாய்ந்த … Read more