உயிரிழந்தவர்களின் குரலை மிமிக் செய்யும் அலெக்சா? – அமேசானின் பலே திட்டம்

வாஷிங்டன்: உயிரிழந்தவர்களின் குரலை அப்படியே அந்தக் குரலின் தொனி மாறாமல் மிமிக் செய்யும் வகையில் அலெக்சாவை வடிவமைக்கும் பலே திட்டம் ஒன்றை அமேசான் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் முன்னணி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டுள்ள இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் சாத்தியம் என்பது பல்வேறு முறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு தென் கொரியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக இறந்துபோன தன் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | “வாய்ச்சொல்லில் மட்டுமே திமுக, விசிக, காங். கட்சிகளின் சமூக நீதி” – அண்ணாமலை

சென்னை: “இந்திய குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினத்தவர் வருவதை எதிர்த்து உயர்சாதி வகுப்பினரை வேட்பாளராக நிறுத்தும் திமுக, திருமா, காங்கிரஸ் கட்சிகளின் சமூக நீதி என்பது வாய்ச்சொல்லில்தான் இருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, “பாஜக சார்பில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒடிசா மாநிலத்தின் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒரு பெண்மணிக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவராக … Read more

புதிய கல்விக் கொள்கையில் பல நன்மைகள்: அனைத்து மாநிலங்களும் பின்பற்ற தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: பல நன்மைகள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் இந்தியாவில் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதனால்தான் பிரதமர் எப்போதும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். புதிய கல்வி கொள்கை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதை வலியுறுத்துகிறது. இதுவே, பிரதமரின் தொலைநோக்கு பார்வை. … Read more

''தீர்மானங்களுக்கு முக்கியத்துவமில்லை'' – மதுரை மேயருக்கு எதிராக திமுக மண்டலத் தலைவர்கள் போர்க்கொடி

மதுரை: மண்டலக் கூட்டங்களில் வார்டுகளுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளுக்காக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மாநகராட்சியும், மேயரும் நிறைவேற்றுவதில்லை என்று மதுரை மேயருக்கு எதிராக திமுக மண்டலத் தலைவர்களே போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ”மூன்று முறை எம்எல்ஏ தேர்தலில் … Read more

“பேராசை, பதவி வெறி, காட்டுமிராண்டித்தன பொதுக்குழு” – வைத்திலிங்கம் ஆவேசம்

சென்னை: “பேராசை, பதவி வெறியில் கட்டுப்பாடு இல்லாத காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பட்டன; அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். மேலும், ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கலில் ஓபிஎஸ், இபிஎஸ் கலந்துகொள்ள பாஜக அழைப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உடன் பாஜக தலைவர்கள் நேரில் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணயின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவர் நாளை நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்வில் … Read more

இந்திய சந்தையில் அறிமுகமானது சாம்சங் F13 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் F13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். போக்கோ, ரெட்மி, ரியல்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விற்பனையில் இந்த போன் கடுமையான சவாலை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது … Read more

‘பன்னீர்’ ரோஜா மாலையால் கொதித்த இபிஎஸ் முதல் வீரமணியின் ‘சாவு மணி’ சிற்றுரை வரை – அதிமுக பொதுக்குழு ‘சம்பவங்கள்’

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதால், வரும் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை நடந்த முக்கிய ‘சம்பவங்கள்’: > அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கோயம்பேட்டை அடுத்துள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. > பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் … Read more

ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்: 69% இறக்குமதி செய்த ரிலையன்ஸ், நயாரா 

மும்பை: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ள நிலையில் இதில் 69 சதவீதத்தை ரிலையன்ஸ் மற்றும் நயாரா ஆகிய இரு நிறுவனங்கள் வாங்கி சுத்திகரித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுககு ஏற்றுமதி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா … Read more

கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலூர் மத்திய சிறை அருகில் எம்.புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள … Read more