ஆயுத சண்டை நிறுத்தத்துக்கு தயார்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

புதுடெல்லி: “ஒரு மாதம் சண்டை நிறுத்​தம் செய்​கிறோம். இந்​தக் கால கட்​டத்​தில் அமைதி பேச்​சு​வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்​திய அரசுக்கு மாவோ​யிஸ்ட்​கள் கடிதம் அனுப்​பிய​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட்​கள் தொடர்ந்து வன்​முறை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நாட்​டில் இருந்து மாவோ​யிஸ்ட்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளார். அதன்​படி, உள்​ளூர் … Read more

போதைப் பொருள் கடத்தலில் இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு: ட்ரம்ப்

வாஷிங்டன்: போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக், ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைதி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகள் … Read more

ராமதாஸ் vs அன்புமணி – பலத்தை நிரூபிக்க 100 கார்கள் புடைசூழ வருகை: விழுப்புரத்தில் நடந்தது என்ன?

விழுப்புரம்: பாமகவில் அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களது பரஸ்பர பலத்தை நிரூபிக்க தலா 100 கார்களில் புடைசூழ பவனி வந்து, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமதாஸும், அன்புமணியும் இன்று (செப்.17) அஞ்சலி செலுத்தினர். அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் … Read more

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இனிமேல் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம்பெறும்

புதுடெல்லி: வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக இம்முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப … Read more

“அதிமுக தலைமை பொறுப்பில் பழனிசாமி இருப்பது வெட்கக்கேடு!” – கரூர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்

கரூர்: “திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறிய பழனிசாமி, அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு. அதிமுக தொடங்கியபோது, தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றார்கள். அதை பழனிசாமி அடிமையிசம்னு மாற்றி, இப்போது அமித் ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டராகிவிட்டார்” என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், “இப்போதும் சிலர் திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என்று பேசுகின்றனர். மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்கள்தான் மாறினார்கள்; மறைந்தும் போனார்கள். ஆனால், திமுக மட்டும் மாறவில்லை. தமிழக … Read more

75-வது பிறந்த நாள் விழா: பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்​வேறு நாடு​களின் அதிபர்​கள், பிரதமர்​கள், ஆன்​மிகத் தலை​வர்​கள் உள்​ளிட்​டோர் வாழ்த்து தெரிவித்​துள்​ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரதமர் மோடி ட்ரம்​புக்கு முன்னதாகவே சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டு​விட்​டார். அதில், “எனக்கு தொலைபேசி​யில் பிறந்த நாள் வாழ்த்து தெரி​வித்த என் நண்​பர், அதிபர் ட்ரம்​புக்கு நன்​றி. உங்​களைப் போல​வே, … Read more

ஒப்போ F31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: ஒப்போ F31 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது … Read more

“திமுகவுக்கு மாற்று…” – தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

கரூர்: “இப்போதும் சில பேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே…‘திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று’ என்று என்ன மாற்றப் போகிறார்கள் ? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னால் இழுத்துச் செல்லப் போகிறார்களா ?” என்று தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடினார் முதல்வர் ஸ்டாலின். அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூர் – கோடங்கிப்பட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “திமுக என்ன … Read more

இந்தியா – பாக். மோதல் யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை: ராஜ்நாத் சிங்

ஹைதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ஹைதராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று மத்திய அரசு ஏற்பாடு செய்த ‘ஹைதராபாத் விடுதலை தின’ கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தின் மீது நடத்தப்பட தாக்குதலாகும். எதிர்காலத்தில் இதுபோல ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை … Read more

“தமிழகத்தில் பாஜகவுக்கு ‘நோ என்ட்ரி’தான்!” – திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

கரூர்: “அந்நாளும் சரி, இந்நாளும் சரி, எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கே நோ என்ட்ரிதான். ஆதிக்கத்துக்கு இங்கே நோ என்ட்ரிதான். திணிப்புக்கு இங்கே நோ என்ட்ரிதான். மொத்தத்தில் இங்கே பாஜகவுக்கு நோ என்ட்ரிதான்” என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபட கூறினார். அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா என முப்பெரும் விழா இன்று கரூர் – கோடங்கிப்பட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “2019-ஆம் ஆண்டு முதல் … Read more