கொளத்தூர் தொகுதியில் ரூ.17.63 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் அடிக்கல் நாட்டினர்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் ரூ.17.63 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில், ரூ.17.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 130 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ஜமாலியா லேன் பகுதியில் 1976ம் ஆண்டில் 326 சதுர அடியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்ட 128 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற … Read more

ராமர் பாலம் எப்படி, எப்போது, உருவானது? – தேசிய கடல்சார் நிறுவனம் கடலுக்கடியில் விரைவில் ஆய்வு

ராமேசுவரம்: இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ராமர் சேது பாலம் எப்படி, எப்போது, உருவானது என்பது குறித்து தேசிய கடல்சார் நிறுவனம் விரைவில் கடலுக்கடியில் ஆய்வு செய்ய உள்ளது. ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுமான கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவிற்கும், 7-ல் இருந்து 13 வரையிலான தீடைகள் இலங்கைக்கும் சொந்தமானவை. இந்த மணல் தீடைகள் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களின் நம்பிக்கையோடு தொடர்புள்ளவைகளாக இருப்பதினால் … Read more

சாதியை வைத்து மக்களை பிரித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள்: பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

கோவை: தமிழக அரசியல் கட்சிகள் சாதியை வைத்து மக்களை பிரித்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் எல்லாம் சாதி, மதம், இனம், மொழியை வைத்து பிரித்து வருகின்றனர். பாமக மக்களை இணைத்துக் கொண்டிருக்கிறது. சாதி ரீதியாக பாமக மீதான விமர்சனத்தில் உண்மை இல்லை. எங்கள் வளர்ச்சியை பிடிக்காத திராவிடக் கட்சிகள், எங்களை ஒரு வட்டத்துக்குள் அடைக்க திட்டமிடுகின்றனர். அந்த … Read more

சென்னை மாநகராட்சியில் உருவாக்கப்பட்ட சாலையோர விற்பனைக் குழுக்கள் கலைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உருவாக்கப்பட்ட சாலையோர விற்பனைக் குழுக்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு இயற்றியது. இதனைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு 2015-ம் ஆண்டு தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளை உருவாக்கியது. இதன்படி, சென்னை தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது. … Read more

மின்னொளியில் ஜொலிக்கும் யானைக்கல் தரைப்பாலம்: வைகை ஆற்றில் வாகனங்கள் கவிழ்வதை தடுக்க ஏற்பாடு

மதுரை: மதுரை வைகை ஆறு யானைக்கல் தரைப்பாலத்தில் வாகனங்கள் இரவில் வெளிச்சம் இல்லாமல் ஆற்றில் கவிழ்வதை தடுக்கவும், சமூகவிரோத செயல்கள் நடப்பதை தடுக்கவும் மாநகராட்சியில் மின்னொளியில் யானைக்கல் தரைப்பாலத்தை ஜொலிக்க வைத்துள்ளது பார்ப்போரை கவர்ந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் உள்ள தரைப்பாலங்கள் முழுவதும் அகற்றப்பட்டு தற்போது அதற்கு பதிலாக உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், யானைக்கல் மேம்பாலத்திற்கு கீழே தரைப்பாலம் இருப்பதால் இந்த தரைப்பாலம் மட்டும் தற்போதும் செயல்படுகிறது. ஆற்றில் வெள்ளம் வரும்போது இந்த தரைப்பாலத்தில் போக்குவரத்து … Read more

நூபுர் சர்மா சர்ச்சை: மீண்டும் ‘புல்டோசர்’ நடவடிக்கை – வன்முறையைக் கட்டுப்படுத்த யோகி அரசு அதிரடி

சஹரன்பூர்: நூபுர் சர்மா சர்ச்சையின் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறிவரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தை அடக்க, மாநில அரசு தனது சமீபத்திய ‘புல்டோசர்’ நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, உத்தரபிரதேசத்தின் கான்பூர் மற்றும் சஹரன்பூர் என இரண்டு நகரங்களில் கட்டிடங்கள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுவருகின்றன. சஹரன்பூரில் நேற்றுமுதல் கலவரம் அரங்கேறிவருகிறது. வன்முறையை தொடங்க காரணமாக கருதப்படும், முஸம்மில் மற்றும் அப்துல் வக்கீர் என்ற இருவரின் வீடுகளையும் முனிசிபல் … Read more

புதுப்பிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார். பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ் திட்டத்தின், திரு.வி.க.நகர் மண்டலம், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.90.59 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து ஜகன்நாதன் தெருவில் ரூ.49.62 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மின் கோட்ட உதவி பொறியாளர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் … Read more

5,000 ச.கி.மீட்டராக குறைப்பு: 2 மாதங்களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது சென்னை பெருநகர் எல்லை

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பான உத்தரவு 2 மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி திருவள்ளூர், … Read more

இரண்டாவது நாளாக 200+ | தமிழகத்தில் புதிதாக 217  பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 110, பெண்கள் 107 என மொத்தம் 217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 111 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,133 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 17,887 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 145 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,231 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று … Read more

சிவன்மலை கோயிலில் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடுகள் இல்லை – ‘வைரல்’ சர்ச்சைக்குப் பின் உதவி ஆணையர் தகவல்

திருப்பூர்: சிவன்மலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என சிவன்மலை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில், கொங்கு மண்டலத்தில் உள்ள மிக முக்கிய கோயிலாகும். வேறு எந்தக் கோயிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோயிலுக்கு உள்ளது. அது, இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி, அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவது வழக்கம். … Read more