நூபுர் சர்மா கருத்துக்கு எதிர்ப்பு: டெல்லி, உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்கள் போராட்டம்

புதுடெல்லி: பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர்சர்மா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நூபுர் சர்மாவின் கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்தியப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து, நூபுர் சர்மாவின் கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. இந்நிலையில் நூபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்த பாஜக, நவீன் ஜிண்டாலை … Read more

காரைக்குடியில் செயல்படாத சோதனைச்சாவடிகள்: குற்றங்களை தடுக்க முடியாமல் போலீஸார் திணறல்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் செயல்படாமல் உள்ளன. மேலும் நகரில் 30 சதவீதம் கண்காணிப்பு கேமராக்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் குற்றங்களை தடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். காரைக்குடி நகரில் குற்றங்களை தடுக்கவும், கடத்தல்களை கட்டுப்படுத்தவும் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓ.சிறுவயல் சாலை, ரயில்வே ரோடு பழனியப்பா ஆர்ச் அருகில், கற்பக விநாயகர் நகர் அறிவியல் பல்கலைக்கழகம் அருகில், கோவிலூர், தேவகோட்டை ரஸ்தா, லீடர் ஸ்கூல் அருகில், … Read more

நூபுர் சர்மா சர்ச்சை | “ஹவுரா கலவரங்களுக்குப் பின்னால் பாஜக” – மேற்கு வங்க முதல்வர் மம்தா காட்டம்

கொல்கத்தா: நூபுர் சர்மா சர்ச்சை எதிரொலியாக ஹவுராவில் நடந்த கலவர சம்பவங்களுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். முகமது நபிகள் குறித்து பாஜகவின் நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்தியப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து, நூபுர் சர்மாவின் கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்று மத்திய … Read more

கோவையில் ரூ.230 கோடியில் 2 மேம்பாலங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கோவையில் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 மேம்பாலங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோயம்புத்தூரில் ரூ.230 கோடி செலவில் ராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கியச் சந்திப்புகளில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணோலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்பில் ரூ.230 கோடி செலவில் 3.15 கி.மீ. நீளத்திற்கு 4 வழித்தட மேம்பாலம் … Read more

லடாக்கில் மணல் திட்டு மீது கார் ஓட்டியவருக்கு ரூ.50,000 அபராதம்

லே: லடாக்கில் சுற்றுலா சென்ற போது மணல் திட்டு மீது கார் ஓட்டியவருக்கு போலீஸார் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். லடாக்கின் லே மாவட்டம் நுப்ரா பள்ளத்தாக்கில் ஹண்டர் என்ற இடம் உள்ளது. லடாக்கில் அதிக உயரத்தில் உள்ள குளிர் பாலைவனம் இங்குள்ளது. லே நகரில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்டர் கிராமம், அழகான மணல் திட்டுகள் மற்றும் மணல் குன்றுகளுக்கு புகழ் பெற்றது. இங்கு இயற்கையான நிலப்பரப்பு பாதிக்கப்படும் என்பதால் மணல் திட்டுகள் … Read more

மரண தண்டனையை ஒழித்தது மலேசியா; மாற்று தண்டனைக்கு ஆலோசனை

கோலா லம்பூர்: மரண தண்டனைகள் ரத்து செய்யப்படுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. இனி மரண தண்டனைகளுக்கு பதிலாக மாற்று தண்டனைகள் வழங்கப்படும் என்றும் மலேசிய அரசின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மலேசிய சட்டத் துறை அமைச்சர் வான் ஜுனைதி ஜாஃபர் கூறும்போது, ”தூக்குத் தண்டனைக்கு எதிரான மசோதாவை அமைச்சரவை ஒப்புக்கொண்டது. மரண தண்டனைக்கு பதிலாக என்னென்ன தண்டனைகளை வழங்கலாம் என்பது குறித்து மேலும் ஆய்வு நடத்தப்படும். மரண தண்டனை விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அனைத்துத் தரப்பினரின் … Read more

அதிகரிக்கும் கரோனா தொற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று அதிகரித்துக் கொண்ட வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் கடந்த வாரம் … Read more

இந்தியாவில் 8000-ஐ கடந்தது தினசரி கரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 8,000-ஐ இன்று கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 7,584 என்பது கவனிக்கத்தக்கது. கரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்கள்: இந்தியாவில் இதுவரை 194.92 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. > இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40,370 ஆக உள்ளது. கரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.09 % உள்ளது. குணமடைந்தோர் … Read more

குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: புன்னகைப் பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினச் செய்தியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த இந்த தினம் கடைபிடிக்கபடுவதை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், புன்னகை பூத்துக் குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் … Read more

சோழர், பாண்டியர், பல்லவர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்? – அமைச்சர் அமித் ஷா கேள்வி

புதுடெல்லி: சோழர், பாண்டியர், பல்லவர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது: இந்தியாவில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்து உள்ளனர். ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் முகலாயர்கள் குறித்து மட்டுமே அதிக புத்தகங்களை எழுதியுள்ளனர். பாண்டிய மன்னர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளனர். அசாமை சேர்ந்த அகோம் பேரரசு 650 ஆண்டு, … Read more