குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் சூழலை உருவாக்க பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் கணேசன் அறிவுறுத்தல்

சென்னை: தொழிலாளர் நலத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது: தமிழகத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் … Read more

மாநிலங்களவைத் தேர்தல்: மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜக அபாரம்; சிவசேனா, காங்கிரஸுக்குப் பின்னடைவு

மும்பை: மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு தாமதமான மகாராஷ்டிராவிலும் ஹரியாணாவிலும் பாஜக பெற்றுள்ள வெற்றிகள், சிவசேனாவுக்கும் காங்கிரஸுக்கும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக சார்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். ஹரியாணாவில் பாஜக வேட்பாளர் ஒருவரும், பாஜக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர். தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 10-ல் தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் … Read more

“ரூ.1 லட்சம் நகைக்கடன் இருந்தால் வசதி படைத்தவரா?” – முதியோர் ஓய்வூதியம் பிரச்சினையில் ஓபிஎஸ் சரமாரி கேள்வி

சென்னை: “முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல நிபந்தனைகளின் மூலம் ஏழை, எளிய முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை கைவிட வேண்டும்” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில், பக்கம் 86, பத்தி 322-ல் முதியோர் நலன்’ என்ற தலைப்பின் கீழ் ‘தகுதியுள்ள முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் வழங்கப்படும் 1000 ரூபாய் … Read more

மீட்கப்பட்ட குழந்தைக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை செய்த ராணுவ வீரர்கள் – சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு கூலித் தொழிலாளி தம்பதியின் 2 வயது மகனான சிவம், அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர், ராணுவத்தினர் போராடி குழந்தையை உயிருடன் மீட்டனர். குழந்தையை மீட்க உதவிய ராணுவ வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனிடையே … Read more

தமிழகத்தில் 2 நாட்கள் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானமழை பெய்யக் கூடும். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 11, 12-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு … Read more

மத்தியபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால் மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை

போபால்: மத்தியபிரதேச மாநிலம், சத்தார்பூர்மாவட்டம், பவுடி கிராமத்தை சேர்ந்தவர் லக்ஷ்மன் அகிர்வார். இவரது 4 வயது மகளுக்கு கடந்த திங்கள்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அருகில் உள்ள பக்ஸ்வாகா சுகாதார மையத்துக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தாமோஹ் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அதே நாளில் சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல அவரது தாத்தா … Read more

தமிழகத்துக்கு 2021-22-ம் ஆண்டில் நபார்டு வங்கி ரூ.32,443 கோடி நிதியுதவி

சென்னை: நபார்டு வங்கி கடந்த 2021-22-ம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.32,443 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். இதுகுறித்து, நபார்டு வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் டி.வெங்கடகிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நபார்டு வங்கி தமிழகத்துக்கு வழங்கும் நிதியுதவி கடந்த 2021-22-ம் ஆண்டில் ரூ.27,135 கோடியிலிருந்து ரூ.32,443 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, 20 சதவீதம் உயர்ந்துள்ளது. குறுகிய, நீண்ட கால விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், முன்னுரிமைத் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி வாய்ப்பு குறைவு என்ற சூழலிலும் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிரம்

புதுடெல்லி: ஜுலை 18-ல் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல், பாஜக தலைமையிலான ஆளும் கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது. இதில் வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 16-வது புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜுலை 18-ல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற இரு அவைகள் மற்றும் இந்திய மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 4,809 … Read more

ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் அருகே மேலும் 2 கப்பல்கள் கண்டுபிடிப்பு

போகோட்டோ: 300 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே 600 பேருடன் கடலில் மூழ்கியது. அண்மையில்தான் இந்தக் கப்பல் மூழ்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தக் கப்பல் யாருக்குச் சொந்தம் என்பதில் பலர் சண்டையிட்டு வருகின்றனர். அந்தக் கப்பலில் உள்ள ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்துக்காக சண்டை நடக்கிறது. சரியாக 1708-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில் … Read more

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ரூ.270.15 கோடி மதிப்பிலான புதிய குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய முதல்வர்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.270.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தாமாக வீடு கட்டும் திட்டத்தில் 23,826 பேருக்கு ரூ.500.34 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும் வழங்கினார். இதுதவிர, 4,880 பயனாளிகளுக்கான குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள், 938 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான கிரையப் பத்திரங்களையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு அனைத்து … Read more