வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா: சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறைமானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏ-க்களின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து மாற்றுத் திறனாளிகள் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 24 பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் கட்டிடங்கள் ரூ.2 கோடிசெலவில் மறுசீரமைப்பு செய்யப்படும். தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடு உடைய 60 மாணவர்கள் உயர்கல்வி பெற வசதியாக, கணினி அறிவியல், வணிகவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் … Read more

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வருகை – தொழிலதிபர் கவுதம் அதானியுடன் சந்திப்பு

அகமதாபாத்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக நேற்று குஜராத் வந்தடைந்தார். அங்குள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை அவர் பார்வையிட்டார். இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று வந்தார். 2 நாள் பயணமாக அகமதாபாத் விமான நிலையம் வந்த அவரை மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் பூபேந்திர படேல் … Read more

பிரச்சினைகளுக்கு மத்தியில் கடிதங்களை பரிமாறிக் கொண்ட கொரிய அதிபர்கள்

பியாங்யாங்: வட கொரியா, தென் கொரியா இடையேயான பிரச்சினைகளுக்கு இடையே இருநாட்டுத் தலைவர்களும் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அரிய அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் பதவிக்காலம் முடிகிறது. இதனையொட்டி அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் அவர் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதனை வட கொரிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது. தென் கொரிய அதிபர் மூன் ஜே … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – சசிகலாவிடம் ஐந்தரை மணி நேரம் தனிப்படை போலீஸார் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை தொடர்கிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ல் காலமானார். அவருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்தனர். இதை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு … Read more

டெல்லி, ஹரியாணாவை தொடர்ந்து பஞ்சாபில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாகிறது

லூதியானா: டெல்லி, ஹரியாணாவைத் தொடர்ந்து பஞ்சாபிலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டெல்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கடந்த 18-ம் தேதி அறிவித்தன. இந்நிலையில், பஞ்சாப் மாநில முதன்மைச் செயலாளர் அனுராக் வர்மா நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு … Read more

பிரம்மாண்ட விளையாட்டு நகரம் சென்னை அருகே உருவாக்கப்படும் – சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் வெற்றிவாகை சூடுவதற்காக உலகத் தரத்திலான கட்டமைப்புகளுடன் சென்னை அருகே பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: மனித சக்தி என்பது உடல் வலிமையும், உள்ளத்தின் வலிமையும் இணைந்தது. இரண்டு ஆற்றலும் ஒருசேர இருக்கும் மனிதர்களால்தான் அனைத்துத் துறைகளிலும் … Read more

அதிகரிக்கும் மின்வெட்டும், நிலக்கரி பற்றாக்குறையும்: மின்சார நெருக்கடி நிலையில் இந்தியா?

”நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றுப் பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் நாட்டில் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண வீக்கம் அதிகரித்து வருகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் மி்ன்வெட்டு ஏற்பட்டால் சிறுதொழில்களை அழித்துவிடும். இதனால், அதிக அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்” என ராகுல் காந்தி நேற்றுமுன்தினம் நிலக்கரி பற்றாக்குறை குறித்து மத்திய அரசை சாடினார். ராகுல் குற்றம் … Read more

இனி ஒரு ஈ கூட தப்பி செல்ல முடியாது – உக்ரைன் வீரர்கள் சரணடைய அதிபர் புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் ராணுவ தரப்பில் 4,000 பேர் உயிரிழந்தனர். 1,478 பேர் சரண் அடைந்தனர். தீவிர போருக்குப் பிறகு மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் நேற்று கைப்பற்றியது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அந்த … Read more

காலநிலை மாற்ற பாதிப்பு தணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: தமிழகத்தில் அனைத்து துறை திட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தணிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். ஐபிசிசி என்ற காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு நிறுவனம் கடந்த 6 மாதங்களில் உலக அளவில் உயர்ந்து வரும் வெப்பநிலை குறித்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை விவரங்கள் மற்றும் தமிழகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநில திட்டக் குழுவினருக்கு விளக்கும் நிகழ்ச்சி, ‘பூவுலகின் நண்பர்கள்’ … Read more

தமிழ்நாடு, குஜராத் உட்பட மூன்று மாநிலங்கள் 10.5 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி

புதுடெல்லி: இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள் மொத்தமாக 10.5 மில்லியன் டன் அளவில் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளன. இதனால் உலக அளவில் நிலக்கரி விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலம் அதிக பட்சமாக 8 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளது. தமிழ்நாடு 1.5 மில்லியன் டன்னும், குஜராத் 1 மில்லியன் டன் நிலக்கரியும் … Read more