50 நாட்களாக மவுனம் காக்கும் ஜெகதீப் தன்கர் பேச வேண்டுமென நாடு காத்திருக்கிறது: காங்கிரஸ்

புதுடெல்லி: “முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக வழக்கத்திற்கு மாறான மவுனத்தைக் கடைப்பிடித்து வருகிறார். அவர் பேசுவதற்காக நாடு தொடர்ந்து காத்திருக்கிறது” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அப்பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. மத்தியில் … Read more

தேசத்தின் கவுரவம் காப்பதை மோடியிடம் கற்க வேண்டும்: நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் அறிவுரை

டெல் அவிவ்: இஸ்​ரேலுக்​கும் பாலஸ்​தீனத்​தின் ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் இடை​யில் தொடர்ந்து மோதல் ஏற்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், ‘‘இஸ்​ரேலின் தேசிய பாது​காப்பு மற்​றும் ஜயோனிஸ்ட் ஸ்டிரேட்​டஜி’’க்​கான மிஸ்​காவ் இன்​ஸ்​டிடியூட் மூத்த நிபுணர் ஸாக்கி ஷெலோம் கூறிய கருத்​துகளை ஜெருசலேம் போஸ்ட் பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா – பாகிஸ்​தான் இடையே ஏற்​பட்ட போர் விவ​காரம், இந்​தியா மீது 50% வரியை அமெரிக்கா விதித்த விவ​காரம் ஆகிய​வற்​றில் பிரதமர் மோடி கடுமை​யான நிலைப்​பாட்டை எடுத்​தார். அவரது அந்த … Read more

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்​தில் ஒருசில மாவட்​டங்​களில் இன்​றும் நாளை​யும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது. ஆந்​திர கடலோரப் பகு​தி​களை ஒட்​டிய வங்​கக்​கடல் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (செப்​.9) ஒருசில இடங்​களி​லும், நாளை பெரும்​பாலான இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் லேசான மழை பெய்​யக் கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்​தில் பலத்த காற்​றும் வீசக்​கூடும். குறிப்​பாக கோவை மாவட்ட மலைப் ​பகு​தி​கள், நீல​கிரி, தேனி, திண்​டுக்​கல், மதுரை, … Read more

தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி/ தூத்துக்குடி: தீவிரவாத நெட்வொர்க் மற்றும் தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களில் மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி, ஆள் சேர்ப்பு மற்றும் ஸ்லீப்பர் செல்களுக்கு எதிராக என்ஐஏ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத … Read more

செங்கோட்டையன் டெல்லி பயணம்: அமித்ஷாவுடன் சந்திப்பா?

புதுடெல்லி: டெல்லி புறப்பட்டுச் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கெடு விதித்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை பறித்து பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும், அவருடன் கோபி, நம்பியூரைச் … Read more

திருமணமான மகள்களுக்கும் சொத்தில் சமபங்கு: சட்டம் இயற்ற தயாராகும் உத்தர பிரதேச அரசு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது. உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன் பிரிவு 108 (2)-ன் கீழ், நில உரிமையாளர் இறந்த பிறகு, அந்த நிலம் அவரது மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத மகளின் பெயருக்கு மட்டுமே மாற் றப்படுகிறது. இதில் திருமணமான மகள்களுக்கு உரிமை இல்லை. இந்த விதியை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை … Read more

நயினாரை ‘டார்கெட்’ செய்யும் டிடிவி தினகரன்: பின்னணியில் அண்ணாமலையா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அடுத்த விக்கெட்டாக வெளியேறியிருக்கிறார் டிடிவி தினகரன். தான் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம் என்று அவர் சொன்னதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது. மேலும், அவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இப்போது பாஜகவின் ஒரே இலக்கு. இதன் காரணமாகவே, பல்வேறு வியூகங்கள் மூலமாக அதிமுகவை வளைத்து கூட்டணிக்குள் கொண்டு வந்தார்கள். இதையெல்லாம் விட முக்கியமாக, தங்கள் … Read more

ஜார்க்கண்டில் வறுமை காரணமாக ரூ.50,000-க்கு விற்கப்பட்ட ஒரு மாத குழந்தை மீட்பு 

ராஞ்சி: உத்தர பிரதேசத்​தின் மிர்​சாபூரைச் சேர்ந்த ராமச்​சந்​திர ராம், ஜார்க்​கண்ட் மாநிலம் பலமு மாவட்​டம் லொட்வா கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிங்கி தேவி.சமீபத்​தில் பெய்த கனமழை​யால் இவர்​கள் தங்​கி​யிருந்த குடிசை சேதமடைந்​துள்​ளது. இந்த தம்​ப​திக்கு 4 குழந்​தைகள். ஒரு மாதம் முன்பு 5-வ​தாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதிலிருந்து தேவிக்கு உடல்​நிலை சரி​யில்​லாமல் போய் உள்​ளது. சிகிச்​சைக்கு பணம் இல்​லாத காரணத்​தால், தங்​களு​டைய ஒருமாத ஆண் குழந்​தையை ரூ.50 ஆயிரத்​துக்கு … Read more

“அதிமுக கட்சியே ஆம்புலன்ஸில் செல்லும் நிலைமை விரைவில் வரும்” – உதயநிதி ஸ்டாலின் கருத்து

சென்னை: “அதிமுக கட்சி விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக மருத்துவத் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ரூ.28.75 கோடியில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மக்களை சந்தித்து வருகிறார். அவர் ஒரு … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க பிஜு ஜனதா தளம் முடிவு

புவனேஸ்வர்: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க ஒடிசாவின் முக்கிய எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புவனேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்பி சஸ்மித் பத்ரா, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிஜேடி எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற முடிவை கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் எடுத்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியின் அரசியல் விவகாரக் குழு, எம்பிக்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு இணங்க இந்த … Read more