உக்ரைன் போரில் இதுவரை 2,20,000 பேர்: பிரித்தானியா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,20,000க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ துருப்புகள் மற்றும் கூலிப்படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது காயமடைந்து இருக்கலாம் என்று பிரித்தானியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு பிரித்தானியா உதவி ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட மேற்கத்திய நாடுகள் கூடுதல் ராணுவ உதவியை வழங்க வேண்டும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை முன்வைத்து வருகிறார். அதனடிப்படையில் ஜேர்மனி, போலந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இராணுவ ஆயுத உதவி வழங்கி வருகின்றனர். Twitter … Read more

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி… கணவன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்

கணவனுடன் தேனிலவுக்குச் சென்றிருந்த ஒரு கர்ப்பிணிப்பெண், மலை உச்சியிலிருந்து விழுந்த சம்பவத்தில், அவருடைய கணவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடந்தது என்ன? 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur’s Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31). பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது. இந்நிலையில், ஹவ்ஸியாவின் … Read more

பிரித்தானிய பிரதமர் ரிஷியின் மனைவி தொடர்பில் மீண்டும் ஒரு சர்ச்சை… விசாரணை மேற்கொள்ள கோரிக்கை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி மீண்டும் ஒருமுறை பண விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். அது தொடர்பான விடயம் ஒன்றை மறைத்ததாக ரிஷி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு பணத்தில் நன்மை பெறும் அமைப்புடன் தொடர்பு சமீபத்தில், பிரித்தானிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குழந்தைகள் நலன் அமைப்புகளுக்கான உதவித்தொகை சில நிபந்தனைகளுக்கு உட்படும் நிலையில் இரட்டிப்பாக்கப்படுவதாக அறிவித்திருந்தார் சேன்ஸலர் ஜெரமி ஹண்ட். குழந்தைகள் நல அமைப்பான Koru Kids என்னும் அமைப்பில் பிரதமர் ரிஷியின் மனைவியான … Read more

ஜேர்மனி சென்றுள்ள மன்னர் சார்லசைக் குறித்த பயத்தில் ஜேர்மன் அதிகாரிகள் செய்த செயல்…

மன்னர் சார்லசே, தான் முன்னர் செய்த விடயங்களை மறந்திருந்தாலும், உலகம் அவற்றை மறக்காது போலிருக்கிறது. ஆம், பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஜேர்மனி சென்றுள்ள நிலையில், அவரைக் குறித்த பயத்தில் ஜேர்மன் அதிகாரிகள் சிலர் செய்த ஒரு விடயத்தைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. மன்னரான உடனேயே கோபப்பட்ட சார்லஸ் சார்லஸ் மன்னரானதுமே, அவர் செய்த சில செயல்கள் இணையத்தில் வைரலாகின. குறிப்பாக ஆவணம் ஒன்றைக் கையெழுத்திடுவதற்காக அவர் உதவியாளர் ஒருவரிடம் பேனா கொடுக்குமாறு முகத்தைச் சுளித்த … Read more

ஜேர்மனியின் புதிய குடியேற்றத் திட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத 60,000 தொழிலாளர்களுக்கு வாய்ப்பு

ஜேர்மனியில் குடியேறுபவர்களுக்கு உள்ள முக்கிய தடைகளை தீர்க்கும் புதிய குடியேற்ற திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. புதிய குடியேற்ற வரைவு சட்டம் ஜேர்மனி குடியேற்றம், திறன் பயிற்சி மற்றும் குடியேற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய வரைவு சீர்திருத்தங்களை ஜேர்மனி அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜேர்மனிக்கு குடியேறுபவர்களுக்கு, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு(EU) வெளியே இருந்து வருபவர்களுக்கு இருக்கும் முக்கிய தடைகளை இந்த புதிய வரைவு தீர்க்கும். இது தொடர்பாக ஜேர்மனியின் நிதியமைச்சர் கிறிஸ்டியன் லின்ட்னர் பதிவிட்டுள்ள … Read more

ரஷ்யாவின் நெருங்கிய நண்பரை உக்ரைனுக்கு வருமாறு அழைத்த ஜெலன்ஸ்கி: ரஷ்யா என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா?

1992ஆம் ஆண்டு முதலே, சீனாவும் ரஷ்யாவும் நட்பு பாராட்டி வருவதை வரலாற்றிலிருந்து அறியலாம். அதுவும், இருவருக்கும் அமெரிக்கா பொதுவான எதிரி என்பது அவர்களுடைய நட்பை இன்னும் பலப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் நண்பரை உக்ரைனுக்கு வருமாறு அழைத்த ஜெலன்ஸ்கி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, பல நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தன. ஆனால் சீனா அதற்கு கண்டனம் தெரிவிக்க மறுத்தது. சமீபத்தில் கூட ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார் சீன ஜனாதிபதியான ஜீ ஜின்பிங். இந்நிலையில், உக்ரைனுக்கு வருமாறு சீன ஜனாதிபதிக்கு … Read more

”களத்து மனைவியாக” மாற பெண் ராணுவ மருத்துவர்களுக்கு நிர்பந்தம்: ரஷ்ய அதிகாரிகள் அட்டூழியம்

உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவ பெண் மருத்துவர்கள், வீரர்களுக்கு பாலியல் அடிமைகளாக மாற கட்டாயப்படுத்த படுவதாக தகவல் வெளியாகி வருகிறது. போர் குற்றம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்கிய நாள் முதல் இன்று வரை ரஷ்ய ராணுவம் பல்வேறு போர் குற்றங்களை செய்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகின்றன. போர் களத்தில் டஜன் கணக்கான பொதுமக்களை கொன்று புதைத்தது, உக்ரைனிய பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களை செய்தது, மற்றும் உக்ரைனிய குழந்தைகளை நாடு கடத்தியது … Read more

ரொனால்டோ உடன் விளையாடி இருக்கிறேன்… இப்போது விமான ஊழியர்: மனம் திறந்த பிரபலம்

போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுடன் இணைந்து உலக நாடுகளில் கால்பந்து விளையாடியுள்ள கோஸ்டின்ஹா தமது புதிய வேலை மற்றும் கனவு தொடர்பில் மனம் திறந்துள்ளார். கடந்த 2001 பிப்ரவரி மாதம் கோஸ்டின்ஹா மற்றும் ரொனால்டோ இருவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போர்த்துகல் அணியில் முதன்முறையாக களமிறங்கியுள்ளனர். @getty தென்னாப்பிரிக்கா அணியுடனான அந்த முதல் ஆட்டத்திலேயே ரொனால்டோ தமது முதல் கோலை பதிவு செய்துள்ளார். அத்துடன் தென்னாப்பிரிக்கா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணி வென்றது. … Read more

கல்லறைக்குள் இருந்து கேட்ட பெண்ணின் அழுகுரல்: திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரேசில் நாட்டில் கல்லறை ஒன்றில் இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்ட நிலையில், திறந்து பார்த்த அதிகாரிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர். கல்லறைக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண் இந்த சம்பவத்தில், பொலிசாரால் 36 வயதுடைய பெண் ஒருவர் கல்லறைக்குள் இருந்து மீட்கப்பட்டார். Minas Gerais மாகாணத்தை சேர்ந்த கல்லறை தோண்டும் குழுவினர் சிலர் பொலிசாருக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளனர். Credit: Newsflash அதில், புதிதாக உருவாக்கப்பட்ட கல்லறை ஒன்றில் ரத்தக்கறை காணப்பட்டுள்ளதாகவும், உள்ளே இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து … Read more

குடிபெயரும் மக்களுக்கு வாய்ப்புகளை அள்ளித்தரவிருக்கும் ஜேர்மனி: புதிய சீர்திருத்த திட்டம் அறிவிப்பு

ஜேர்மனியில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், குடிபெயரும் மக்களுக்கான விதிகளில் புதிய சீர்திருத்த திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊழியர்களின் பற்றாக்குறை ஐரோப்பாவிலேயே மிகப்பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனி, தற்போது திறமையான ஊழியர்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. 2022ல் மட்டும் வரலாறு காணாதவகையில் 2 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், ஜேர்மனிக்கு குடிபெயரும் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய … Read more