காமவெறினு சொல்றாங்க! எம்பொண்ணுக்கு நீதி வேணும்.. கிருஷ்ணகிரி சம்பவத்தில் கதறும் பெண்ணின் தாய்

Tamilnadu oi-Halley Karthik கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகனை தந்தையே வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மகனை திருமணம் செய்த பெண் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாக பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷ்(25) உடன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெணியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு … Read more

ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்.. சீனா ஊழியருக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் ஓகோன்னு வாழ்க்கை

International oi-Velmurugan P பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர் ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்த பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சீனாவின் குவாண்டன் மாகாணத்தில் டென்ஜன் நகரில் உள்ள நிறுவனம் ஒன்று விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கொரோனா பெருந்தொற்று பரவுலுக்கு பின்னர் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன் லக்கி ஓ … Read more

பட்டா கத்தியுடன் நோட்டமிட்ட அந்த கண்கள்.. சலசலத்த ராமநாதபுரம் ஆர்எஸ்எஸ் பேரணி.. கடைசியில் டிவிஸ்ட்

Tamilnadu oi-Halley Karthik ராமநாதபுரம்: தமிழ்நாடு முழுவதும் நேற்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்திய நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த பேரணியில் பாஜக மாவட்ட தலைவரை தாக்க முயற்சி நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காரணம் காட்டி இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஆனால் காவல்துறையின் அனுமதியை எதிர்த்து ஆர்எஸ்எஸ் … Read more

குஜராத்தில் இன்று முதல் ஏப்.26 வரை செளராஷ்டிரா தமிழ் சங்கமம்!

India oi-Mathivanan Maran அகமதாபாத்: மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து நடத்தும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குஜராத்தில் இன்று தொடங்குகிறது. மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் இணைந்து செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 17,750 பேர் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர். செளராஷ்டிரா தமிழர்களின் வாழ்க்கை வரலாறு, கலைஞர்களின் வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் மேலும் இந்தியக் கலாசார ஒற்றுமையை எடுத்துக்கூறும் வகையில் … Read more

பெண் தேடும் பசங்க தான் டார்கெட்.. கல்யாணம் ஆனதும் நகையோடு எஸ்கேப்.. கரூரில் தரகர்களோடு சிக்கிய லேடி

Tamilnadu oi-Mani Singh S கரூர்: திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து பெண் ஒருவர் தரகர்களோடு சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது புகாரின் பேரில் அந்த கும்பலை கரூரில் போலீசார் கைது செய்துள்ளனர். சமீப காலமாக வித விதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவாங்க என்று நினைத்துப் பார்க்கும் அளவிற்கான மோசடி சம்பவங்களும் கூட அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கின்றன. அந்தவகையில் தான் திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து … Read more

\"ஐயோ பேய் வந்துடுச்சு.. கொரோனாவால் 2 ஆண்டுக்கு முன் பலியானவர்.. மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு

India oi-Vigneshkumar இந்தூர்: கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நபர் ஒருவர், திடீரென மீண்டும் உயிருடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நம்மை 2020இல் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகள் படாய் படுத்திவிட்டது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தியாவிலும் இதுவரை நாம் மூன்று கொரோனா அலைளை எதிர்கொண்டு இருக்கிறோம். அதன் பின்னர் வேக்சின் உள்ளிட்ட பல நடவடிக்கைகளால் நாம் கொரோனாவை கட்டுப்படுத்தினோம். கொரோனா … Read more

பிரியாணி -மீன் -கோழி கிரேவி! வாரத்தின் 7 நாட்களும் அசைவம்! தினமும் 600 பேருக்கு இலவச சஹர் உணவு!

Tamilnadu oi-Arsath Kan ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் செயல்படும் இளைஞர்கள் குழு ஒன்று, வாரத்தின் 7 நாட்களும், இலவசமாக அசைவ சஹர் சாப்பாடு வழங்கி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அதிகாலையில் தொழுகைக்கு பாங்கு சொல்வதற்கு முன்பாக சாப்பிடும் உணவுக்கு பெயர் தான் சஹர். இந்த உணவு தான் சூரிய அஸ்தமனம் ஆகும் வரை, அதாவது நோன்பு திறக்கும் வரை நோன்பு வைப்பவர்களுக்கு தேவையான ஆற்றலை உடலுக்கு தருகிறது. … Read more

ஒரு கிமீ உயர டவர்.. மாஸ் காட்டும் குவைத்! துபாய் புருஜ் கலிபாவைவிட பெருசாம் – அதென்ன புருஜ் முபாரக்?

International oi-Noorul Ahamed Jahaber Ali குவைத்: உலகின் மிக உயரமாக கட்டிடமாக துபாயின் புருஜ் கலிபா உள்ள நிலையில், அதைவிட உயரமான கட்டிடத்தை குவைத் நாடு கட்ட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட உள்ள இந்த கட்டிடத்தை கட்ட 1.2 பில்லியன் டாலரை குவைத் செலவிட இருக்கிறது. உலக நாடுகளிலேயே அதிக மதிப்பு கொண்ட தினாரை பயன்படுத்தி வரும் குவைத்தும் மற்ற அரபு நாடுகளை போன்றே எண்ணெய் வளத்தால் செல்வ … Read more

சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளர்? முத்துராமலிங்க தேவரை முன்வைத்து சீமான்!

Tamilnadu oi-Mathivanan Maran உசிலம்பட்டி: சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளரா? என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்வைத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் முன்னாள் தலைவர் மூக்கையாதேவர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: வெள்ளைக்காரனின் தூக்கு கயிற்றுக்கு துணிந்து கழுத்தை நீட்டிய மறவர்கள் நம் மன்னர்கள். இன்று லண்டனில் அந்த மன்னர்களின் படங்களுக்கு முன்னால் ஆங்கிலேயர்கள் செல்ஃபி எடுத்து … Read more

ஆந்திரா முதல்வர் ஜெகன் சித்தப்பா கொலை வழக்கு- உறவினர் ஒய்எஸ் பாஸ்கர் ரெட்டி சிபிஐயால் திடீர் கைது!

India oi-Mathivanan Maran விசாகப்பட்டினம்: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி படுகொலை வழக்கில் ஜெகனின் மற்றொரு உறவினரான ஒய்.எஸ்.பாஸ்கர ரெட்டி சிபிஐயால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடப்பா லோக்சபா தொகுதி எம்பியான அவினாஷ் ரெட்டியின் தந்தைதான் ஒய்.எஸ். பாஸ்கர ரெட்டி. ஆந்திரா அரசியலில் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு பெற்றது ஒய்.எஸ்.ஆர் எனும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி குடும்பம். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜா … Read more