இவருக்கு இதே வேலையா போச்சு.. காங்கிரஸ் எம்.எல்.ஏவால் கொந்தளித்த எடப்பாடி.. சட்டசபையில் சலசலப்பு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. “இவருக்கு இதே வாடிக்கையா போச்சு. எங்களை குற்றம்சாட்டி பேசுவதுதான் இவருக்கு வேலையா” என்று கோபமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை … Read more

சிறுத்தையை வேட்டையாடிய புலி.. அரிய நிகழ்வை 'கிளிக்' செய்த பெங்களூரு போட்டோகிராபர்.. குவியும் அப்ளாஸ்

India oi-Halley Karthik ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புலி ஒன்று சிறுத்தையை வேட்டையாடி சாப்பிடும் காட்சியை பெங்களூரை சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் போட்டோ எடுத்திருக்கிறார். இந்த படம் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் ராந்தம்பூர் தேசிய பூங்காவில் T-101 எனும் புலி ஒன்று ஆக்டிவாக இயங்கி வந்திருகிறது. இதனை பூங்காவின் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்படி இக்கையில், பெங்களூரை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஹர்ஷா நரசிம்மார்த் இந்த புலியை போட்டோ எடுத்திருக்கிறார். இந்த … Read more

அண்ணாமலை சொல்வதை எல்லாம் எங்களால் ஏற்க முடியாது.. பட்டென சொன்ன ஜெயக்குமார்.. ஆஹா.. இதென்ன?!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : “அதிமுக – பாஜக கூட்டணியை மோடியும், அமித் ஷாவும் உறுதி செய்துவிட்டனர், மாநில தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா … Read more

பாம்பை கடித்து துப்பிய கொடூரம்.. கம்பி என்ணும் இளைஞர்கள்.. ட்ரெண்ட் வீடியோவுக்கு ஆசைப்பட்டதால் வினை!

Tamilnadu oi-Vignesh Selvaraj ராணிப்பேட்டை : சோஷியல் மீடியா ட்ரெண்ட் மோகத்தில் லைக்கிற்கு ஆசைப்பட்டு அரக்கோணம் அருகே தண்ணீர் பாம்பை வாயால் கடித்து துப்பி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட 3 இளைஞர்களை வனத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன் (33) சூர்யா (21) மற்றும் சந்தோஷ் (21). இந்த மூவரும் கடந்த மாதம் 15ஆம் தேதியன்று அவர்களது குடியிருப்பு பகுதிக்கு … Read more

டப்பு டப்புன்னு சத்தம்.. அர்ச்சகரை குளம் அப்டியே இழுத்துருச்சு! நேரில் பார்த்த பெண் திடுக் தகவல்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali இதற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு இருந்த நிலையில், சுமார் 25 அர்ச்சகர்கள் கோயில் தெப்பக்குளத்தின் நீரில் இறங்கி இருக்கின்றனர். கரையை ஒட்டிய பகுதியில் அர்ச்சகர்கள் சடங்குகளை செய்துகொண்டு இருந்தபோது 3 அர்ச்சகர்கள் மட்டும் தவறுதலாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். இதனை கண்ட மேலும் 2 அர்ச்சகர்கள் அவர்களை மீட்க முயற்சித்தனர். செங்கல்பட்டு: நங்கநல்லூர் அருகே கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது இளம் வயது அர்ச்சகர்கள் … Read more

திகில்! 3 அடுக்கு.. 40 அடி ஆழம்.. 5 அர்ச்சகர் உயிரை பறித்த நங்கநல்லூர் கோயில் குளத்தின் பரபர பின்னணி

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali செங்கல்பட்டு: கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதற்கான பின்னணி தகவல்கள் கிடைத்து உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்து அமைந்து உள்ளது மூவரசம்பட்டு கிராமம். இங்குள்ள தர்மலிங்கேசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாட்களாக நடந்து வந்து இருக்கிறது. இந்த நிலையில், இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக காலை 9.30 மணியளவில், கோயில் … Read more

\"முட்டுச்சந்து\".. ஒன்னுமே புரியலயே.. திடீர்னு \"அவங்க\" திமுக பக்கம் சாயறாங்களே.. கவனிக்கும் அதிமுக

Tamilnadu oi-Hemavandhana சென்னை: இத்தனை நாட்கள் இல்லாமல், திடீரென திமுகவின் திராவிட மாடலை ஓபிஎஸ் தரப்பு வரவேற்றிருக்கிறது.. அதுமட்டுமல்ல, மகளிருக்கு அறிவித்த 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தையும் பாராட்டியிருக்கிறது.. என்னவா இருக்கும்? தமிழக மக்களால் கடந்த 2 வருடங்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மிக முக்கிய அறிவிப்பாக மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் … Read more

சர்வதேச அளவில் கவனம் பெற்ற ராணிப்பேட்டை.. ஆஹா.. ஸ்டாலின் முயற்சியால் நடக்கும் மாற்றம்.. குட்நியூஸ்

Tamilnadu oi-Shyamsundar I ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் முதலீடுகள் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மிக முக்கியமான முதலீடு ஒன்று செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி தமிழ்நாட்டில் இந்த வருடம் ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய … Read more

\"டேஞ்சரஸ்\" எடப்பாடி.. கையை பிசையும் ஓபிஎஸ்.. கடைசி நம்பிக்கை பலன்தருமா.. அந்த \"2 கட்சிகள்\" உதவுமா?

Tamilnadu oi-Hemavandhana சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ள நிலையில், அவருக்கு எதிரான ஒரு அணியை கட்டமைப்பதிலும், பலப்படுத்துவதிலும் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாகி உள்ளது.. அந்தவகையில், முதல் அஸ்திரமாக திருச்சி மாநாட்டை கையில் எடுத்துள்ளது ஓபிஎஸ் டீம். சமீபகாலமாகவே, ஓபிஎஸ்ஸின் அரசியல் வேகம் எடுத்து வருகிறது.. மூத்த தலைவர் பண்ருட்டியார் சொல்லியிருந்ததுபோலவே, மக்களை நேரடியாகவே சந்திக்க கிளம்பி விட்டார்கள். எடப்பாடி பழனிசாமியிடம், 90 சதவீத நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதாக சொன்னாலும், கட்சி பெரும்பாலும் அவரிடமே இருப்பதாக சொன்னாலும்கூட, … Read more

”போலி” பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பு- கர்நாடகா சட்டசபை தேர்தலில் சுவாரசியம்!

India oi-Mathivanan Maran பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போலி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநில சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். கர்நாடகா தேர்தல் களம் கடந்த சில மாதங்களாகவே அனலடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஜேடிஎஸ் … Read more