எம்ஜிஆரும் நான்தான்.. எடப்பாடியாரும் நான்தான்..ராமநாதபுரமே சும்மா அதிருதில்ல..

Tamilnadu oi-Jeyalakshmi C ராமநாதபுரம்: பொதுச்செயலாளர் ஆன பின்னர் எடப்பாடியாருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. எம்ஜிஆரும் நான் தான் எடப்பாடியாரும் நான் தான்; சும்மா அதிருதில்ல’ என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ராமநாதபுரத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ‘சிவாஜியும் நான்தான் எம்ஜிஆரும் நான்தான்’ என்ற ரஜினி நடித்த சிவாஜி படத்தின் வசனத்தை உல்டா செய்து போஸ்டர் ஒட்டி பரபரப்பாக்கியுள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே பிரச்சினை வெடித்தது. எத்தனையோ போராட்டங்கள், தடைகளைத் … Read more

\"தாயம் ஒன்னு\".. பகடைகளை உருட்டி தள்ளினாரே.. இப்ப எடப்பாடிக்கு பெரிய்ய்ய சிக்கலே இதான்.. திமுக அலர்ட்

Tamilnadu oi-Hemavandhana சென்னை: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவில் நிறைய சவால்கள் காத்திருந்தாலும், அந்த ஒரே விஷயத்தில் மட்டுமே அவர் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் திமுகவுக்குதான் பிளஸ் ஆகிவிடும் என்கிறார்கள் விவரமறிந்தோர். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ளார்.. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை தன்கையில் கொண்டு வந்துள்ளார். விஸ்வரூபம் எடுத்துள்ள திமுகவை ஒருபக்கம் சமாளிக்க வேண்டி உள்ளது.. சளைக்காமல் நீதிமன்றத்தை நாடிவரும் ஓபிஎஸ்ஸையும் சமாளிக்க வேண்டி உள்ளது.. மறுபக்கம் பாஜகவையும் அனுசரித்து … Read more

இந்தியாவில் முதல்முறை.. மின் விபத்தை தடுக்க புதிய முறை.. செந்தில் பாலாஜி அறிவிப்பு

Tamilnadu oi-Velmurugan P சென்னை: இந்தியாவில் முதல்முறையாக மின் கம்பி அறுந்து விழுந்தால் உடனடியாக மின்சாரத்தை நிறுத்த மின் மாற்றிகளில் சென்சார் மீட்டர் பொருத்தப்படும் என மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின் கம்பங்கள், கம்பிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. வெளிநாடுகளில் கம்பம், கம்பி இல்லை. அதேபோல் புதைவடம் அமைக்கும் திட்டம் உள்ளதா? என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக மின்வாரியத்தில் முதல்முறையாக, மின்மாற்றிகளில் … Read more

கீழடி அருங்காட்சியகம்.. ஆச்சரியத்தோடு பார்த்த சூர்யா,ஜோதிகா..விளக்கம் அளித்த வெங்கடேசன் எம்.பி

Tamilnadu oi-Jeyalakshmi C மதுரை: கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் குடும்பத்தோடு வந்து பார்வையிட்டனர். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்ததோடு அருங்காட்சியக ஊழியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் 2600 ஆண்டுகள் பழைமையாக பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்தன. கொந்தகையில், 100க்கும் … Read more

\"கரகர குரல்..\" கில்லர் பூஞ்சையின் அறிகுறியாம்.. கழுத்தில் ஆப்ரேஷன் எல்லாம் செய்து.. ஐயோ பாவம்! பகீர்

India oi-Vigneshkumar கொல்கத்தா: பொதுவாகக் கரகர குரல் ஏற்பட்டால் நாம் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால், அதுவே இந்த நபருக்கு மிக மோசமான பாதிப்பின் அறிகுறியாக இருந்துள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் நமக்கு பல்வேறு நோய்ப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் முன்பு அரிதாக ஏற்பட்டு வந்த நோய்கள் கூட இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனிடையே மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஒருவர் கில்லர் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்டார். … Read more

\"எடுங்கடா வண்டிய\"..கோயம்பேட்டில் பைக் டாக்ஸிகார்கள் மீது ஆட்டோகாரர்கள் கற்கள் வீசிதாக்குதல்..பதற்றம்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரேபிட்டோ போன்ற வாடகை வாகன ஓட்டிகள் மீது சில ஆட்டோ ஓட்டுநர்கள் கற்களை வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. ஆட்டோ கட்டணத்தைவிட குறைவான கட்டணம் வசூலிப்பதால் பலர் ரேபிட்டோ போன்ற வாடகை வாகனங்களை விரும்புகிறார்கள். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வாடகை வாகன ஓட்டிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு காணப்படுகிறது. தங்கள் வருமானம் குறைந்து போக வாடகை … Read more

எடப்பாடி பழனிசாமிக்காக நேர்த்திக்கடன்! முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுக பெண் எம்.எல்.ஏ.!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் கோவிலாக கடந்த 2 நாட்களாக செல்லத் தொடங்கியுள்ள அவர்கள் தங்கத்தேர் இழுப்பது, அன்னதானம் வழங்குவது, என நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் திருப்போரூர் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பின் அடிப்படையில் … Read more

'சிறுவர்கள் முதல் கர்ப்பிணி பெண் வரை' வடகொரியாவின் மனித உரிமை மீறல்கள்.. நடுங்க வைக்கும் ரிப்போர்ட்

International oi-Mani Singh S பியாங்யாங்: வடகொரியாவில் தென்கொரிய வீடியோக்களை பார்த்ததற்காக சிறுவர்களுக்கு மரண தண்டனை, நாட்டு தலைவரை படத்தை நோக்கி கை காட்டி இழிவு படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை என பல கொடூரமான மனித உரிமை மீறல்களில் வடகொரியா ஈடுபட்டு இருப்பதாக தென்கொரியா அதிர்ச்சிகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகின் வினோதமான நாடுகளில் ஒன்று வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று வெளிநாடுகளுக்கு எதுவுமே தெரிந்து விடாதபடி … Read more

நள்ளிரவில் அலறல் சத்தம்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் பயங்கரம்.. விரைந்து வந்த போலீஸ்

Tamilnadu oi-Velmurugan P மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். இதையடுத்து நேரில் வந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தினார். தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகள் மகேஸ்வரி (வயது 25). மகேஸ்வரி நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் … Read more

சென்னை ரயில்வே ஸ்டேஷனில் யார் பார்த்த வேலையிது? இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. வலைவீசும் ரயில்வே போலீஸ்

News oi-Halley Karthik சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி வார்த்தைகள் கறுப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. சமீப நாட்களாக இந்தி மொழி தொடர்பான சர்ச்சைகள் ஏதும் இன்றி இருந்தது. ஆனால் உள்ளூர் அளவில் இந்தி பேசும் வட மாநில தொழிலாளர்கள் … Read more