ரிஷப் பண்ட்? தினேஷ் கார்த்திக்? யாரை களமிறக்கலாம்.. ரோஹித் ஷர்மாவுக்கு உதவிய ஐபிஎல் அனுபவம்!

India oi-Yogeshwaran Moorthi நாக்பூர்: ஆஸி. அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கடைசி ஓவரை சந்திக்க ரிஷப் பண்ட்டை களமிறக்காதது ஏன் என்று இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக பெய்த மழைக் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், டாஸ் போடுவதற்கு 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமானது. இதனால் ஆட்டம் 8 ஓவர்களாக … Read more

பஞ்சாப்பில் ஆளுநரை விமர்சிக்கும் ஆம் ஆத்மி.. 75 ஆண்டுகளில் இப்படி யாரும் கேட்டதில்லை என சாடல்!

India oi-Mani Singh S அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் சட்ட சபை அமர்வு கூடுவதற்கு முன்பாக அதன் அலுவல்கள் என்ன என்பது குறித்து 75 ஆண்டுகளில் எந்த ஜனாதிபதியும்.. கவர்னரும் கேட்டதில்லை.. என்று ஆம் ஆத்மி கட்சி அம்மாநில கவர்னரை விமர்சித்துள்ளது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், விரைவில் குஜராத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற தற்போதே தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி … Read more

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் கொலை! பாஜக தலைவரின் மகன் அட்டூழியம்.. \"ரிசார்டை\" இடித்த அரசு!

India oi-Halley Karthik டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாஜக தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் இந்த பிரச்னைக்கு ‘புல்டோசர் நீதி’ வேண்டும் என வலியுறுத்திய நிலையில் இளம் பணியாற்றிய பாஜக தலைவரின் மகனுக்கு சொந்தமான ரிசார்ட் இரவோடு இரவாக புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் குற்றங்கள் நடைபெறும்போது அம்மாநில அரசு குற்றவாளிகளின் குடியிருப்புக்களை புல்டோசர் கொண்டு இடிப்பதை வழக்கமாக … Read more

19 வயசுதான்.. இளம்பெண்ணை கடத்தி கொன்ற பாஜக மூத்த தலைவரின் மகன்.. நீடிக்கும் \"அந்த\" மர்மம்!

India oi-Shyamsundar I ரிஷிகேஷ்: உத்தரகாண்டில் 19 வயது இளம்பெண் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உட்பட 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. ரிஷிகேஷில் உள்ள வனந்தரா பகுதியில் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் புல்கித் ஆர்யா ரிசார்ட் ஒன்றை நடத்தி … Read more

‛‛நகர்ப்புற நக்சல்கள்’’.. அரசியல் பின்புலத்தோடு திட்டங்கள் முடக்கம்.. ஆக்ரோஷமான பிரதமர் மோடி

India oi-Nantha Kumar R காந்தி நகர்: அரசியல் பின்புலம் கொண்ட நகர்புற நக்சல்களால் அரசு திட்டங்கள் முடங்குகின்றன. இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என குஜராத்தில் நடந்த அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களின் தேசிய அளவிலான மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த … Read more

ஃப்ளூ காய்ச்சல் பரவலைத் தடுக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

India bbc-BBC Tamil Getty Images ஃப்ளூ காய்ச்சல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு தொடர்ந்து இருக்கும் நிலையில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், என்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் புஷ்கலா அவர்கள் பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம். குழந்தைகளுக்கு இப்போது காய்ச்சல் மற்றும் சளித்தொந்தரவு அதிகமாக இருக்கிறதே ? இது இயல்பு தானா ? இப்போது பருவகாலம் மாறத் தொடங்கியிருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு … Read more

கோவை, திருப்பூர், ஈரோட்டில் குவிக்கப்படும் அதிரடிப்படை – பதற்றத்தில் மாவட்டங்கள்

India bbc-BBC Tamil BBC கோவை திருப்பூர் அதிரடிப்படை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் வசிக்கும் வீடுகள், அலுவலகங்களை நோக்கி இன்று தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டாவது நாளாக பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்களால் அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அதிரடிப்படை குவிக்கப்பட்டு வருகிறது. என்ன நடக்கிறது? தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, … Read more

பர்கூரில் கழிவறையை பெருக்கிய மாணவர்கள் – நடிக்க வைத்த ஆசிரியர் இடைநீக்கம்

India bbc-BBC Tamil BBC பர்கூர் அரசு பள்ளி கழிவறை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியை அடுத்த பர்கூரில் உள்ள கழிவறைகளை பெருக்க வைத்த சர்ச்சையில் சிக்கிய ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் 284 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ் அப் குழுக்களில் ஒரு காணொளி பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்தூர் மாவட்ட … Read more

செம! திருப்பத்தூர் டூ மொரப்பூர் வரை.. 120 கிமீ வேகத்தில் பறந்த ரயில்! டம்ளர் தண்ணீர் கூட கொட்டவில்லை

Tamilnadu oi-Halley Karthik திருப்பத்தூர்: தெற்கு ரயில் நேற்று முன்தினம் திருப்பத்தூர்-மொரப்பூர் வரையிலான பாதையில் ரயிலை சோதனை ஓட்டம் நடத்தியது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஆய்வுக்காக புதன்கிழமை சென்னையில் இருந்து தனி ரயில் மூலம் சேலம் வந்தார். வரும் வழியில் அவர் திருப்பத்தூர் முதல் மொரப்பூர் வரை 48 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றதை ஆய்வு மேற்கொண்டார். சோதனை தெற்கு ரயில்வே … Read more

ஐயோ.. அம்மா.. இதுக்கு \"எண்டே\" கிடையாதா? ராட்சத பலூனில் 3 நாட்களாக பறந்த நபர்! கடைசியில் செம ட்விஸ்ட்

International oi-Jackson Singh பெய்ஜிங்: சீனாவில் டிக் டாக் மோகத்தால் ராட்சத பலூனில் சிக்கிக் கொண்ட இளைஞர் ஒருவர் மூன்று நாட்களாக சுமார் 400 கி.மீ. தூரம் அதில் தொங்கியபடியே பறந்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீனாவின் வடகிழக்கில் அமைந்துள்ள ஹெய்லாங்ஜோங் மாகாணத்தின் முடன்ஜியாங் நகரைச் சேர்ந்தவர் சென்ஜிங் ஹு (25). இவரது நண்பர் ஜியாங் வேய் (26). கல்லூரி கால நண்பர்களான இவர்கள், பட்டப்படிப்பை முடித்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலைக்கு எங்கும் … Read more