ஒரேஆண்டில் 15 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்! மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

டெல்லி: இந்தியாவில் ஒரே ஆண்டில் 15 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தி சாதனை  நடத்தி உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் தெரிவித்துள்ளார். தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO)  தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது. NOTTO என்பது சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதைல் கலந்துகொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நமது நாட்டில் … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு ரகசிய விஜயம்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று உக்ரைனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் அங்கு இன்றுவரை நாள்தோறும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்கின்றது. இந்த நிலையில் போலந்து தலைநகர் வார்சா-வில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து செல்வதாக அறிவிக்கப்பட்டது. போலந்தை ஒட்டிய அண்டை நாடான உக்ரைன் செல்லவிருப்பது வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கூட தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டது. … Read more

பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதல்! ரூ.18 லட்சம் அபராதம் வசூலிப்பு…

சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டியவா்களுக்கும், சுவரொட்டிகளை ஒட்டியவா்களுக்கும் ரூ. 18.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதுபோல, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் 04.02.2023 முதல் 17.02.2023 வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.5,09,500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னையை அழகுபடுத்த பலகோடி ரூபாய்களை தமிழ்நாடு அரசு செலவழித்து வருகிறது. இதன் தொடர் நடவடிக்கையாக, பொதுமக்கள், … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த கோரி எந்தவொரு புகாரும் வரவில்லை! சத்யபிரதா சாகு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்த கோரி எந்தவொரு புகாரும் வரவில்லை. ஆனால்  தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளது என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை 61.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியது தொடர்பாக … Read more

உலக கோடீஸ்வரர் பட்டியலில் 25வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி..!

அகமதாபாத்: உலக கோடீஸ்வரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, ஹிண்டன்பெர்க் அறிக்கையால், தற்போது 25வது இடத்துக்கு  தள்ளப்பட்டார். “மோடி பிரதமராக பதவியேற்ற 2014-ஆம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, 2022-ல் 4வது இடத்திற்கு வந்தார். அவரது திடீர் வளர்ச்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில்,  அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி நிறுவனம் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், … Read more

அதானியின் சகோதரர் வினோத் ரஷ்ய வங்கியில் கடனுக்காக அதானி பங்குகளை வெளிப்படுத்தாமல் அடகு வைத்ததற்கு பின்னணி என்ன! ஃபோர்ப்ஸ் தகவல்..

டெல்லி:  தொழிலதிபர் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரஷ்ய வங்கியில் கடனுக்காக அதானி பங்குகளை வெளிப்படுத்தாமல் அடகு வைத்ததற்கு பின்னணி என்ன என்பது குறித்து பிரபல பத்திரிகையான  ஃபோர்ப்ஸ் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளது. இதை சுட்டிக்காட்டி,  கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் மோசடிகள் செபி விசாரணைக்கு தகுதியற்றதா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இந்தியாவின் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி. இவர் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராவார். இவர் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முறைகேடுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல்…

சென்னை: ஈரோடு கிழக்கில் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கைகள் என்னென்ன?   என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், “ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர்.  எனவே, மத்திய படைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த கோரி தேர்தல் … Read more

சென்னையில் 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள்!

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி மேற்கொண்டு வருவதாக சென்னை  மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் 18 முக்கிய சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மை பணியாளர்கள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தூய்மைப்பணி மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் … Read more

ஜேஎன்யூவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…

டெல்லி: டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். டெல்லி ஜேஎன்யூ  (ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி) பலக்லைக்கழக வளாகத்தில் மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன்,சோலங்கி என்பவர்  கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு  நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணி நடத்தினர். இதற்கு போட்டியாக சத்திரபதி சிவாஜியின் படத்தை வைத்து அவரது பிறந்தநாளான ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பினர் ஏபிவிபி … Read more

”பாகிஸ்தான் திவாலாகிவிட்டது”! பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அசிப்

இஸ்லமாபாத்: பாகிஸ்தான்  திவாலாகிவிட்டது என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அசிப் கூறினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. சென்ற மாத இறுதியில் பாகிஸ்தானில் பணவீக்கம் 24.5% ஆக உயர்ந்தது.வெளிச்சந்தையில் அத்தியாவசிய, உணவுப்பொருட்களின் விலை, முந்தைய மாதத்தை விட 30% முதல் 50% வரை அதிகரித்தது. தற்போது பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் விலை 250 ரூபாய்க்கும், இறைச்சி 750 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதனால், … Read more