பொறியியல் பணி: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவையில் இரவுப நேரம் மட்டும் சிறு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தாம்பரம் யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரு மார்க்கத்தில் தலா இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன என ரயில்வே … Read more

இந்தியா – கனடா இடையே ஆக்கபூர்வ உரைவ தொடர கனடா பிரதமர் விருப்பம்

டொரோண்டா கனடா பிரதம்ர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் ஆக்க பூர்வ உரைவத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து ஆதாரத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியது.  கனடா எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை வெளியிடவில்லை.  மாறாகக் … Read more

டில்லியில் இன்று பல இடங்களில் 6.2 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு

டில்லி டில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று 6.2 ரிகடர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று  டில்லி மற்றும்சுற்ற்றுப்புறம் உள்ள பல பகுதிகளில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.  மதியம் சுமார் 2.25 மணி அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.   இந்த நில நடுக்கம் டில்லியில் மட்டும் இன்றி வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் … Read more

தமிழகத்தில் 9 வாரங்களாக 100 நாள் வேலைத் திட்ட ஊதியம் வழங்காத மத்திய அரசு : காங்கிரஸ் எம் பி காட்டம்

கரூர் தமிழகத்துக்கு 9 வாரங்களாக 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். இன்று கரூர் எம்.பி. ஜோதிமணி  தனடு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ஜோதிமணி ‘100 நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, (2 மாதத்துக்கு மேலாக) ஊதியம் வழங்கவில்லை. தொழிலாளர்கள் இதனால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். அதில் 91 … Read more

தொழில்முனைவோருக்கு தாராளமாக கடன் வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறுவதை நம்பி ஏமாந்தவரால் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பரபரப்பு…

கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தொழில்முனைவோர் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு வெளியில் இருந்து நிர்மலா சீதாராமானுடன் பேசவேண்டும் என்று நீண்ட நேரமாக குரல் எழுப்பி வந்தார். இதனை அடுத்து அவரைச் சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “தொழில்முனைவோருக்கு மத்திய அரசு தாராளமாக கடன் வழங்குவதாக நிதி அமைச்சர் … Read more

இந்திய அரசு 41 கனடா தூதர்களைத் திரும்பப் பெற 1 வாரம் கெடு

டில்லி இந்திய அரசு நாட்டில் உள்ள 41 கனடா தூதர்களைத் திரும்பப் பெற ஒரு வாரம் கெடு விதித்துள்ளது.  தற்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து ஆதாரத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியது.  கனடா எந்தவொரு ஆதாரத்தையும் … Read more

அண்ணாமலை தலைமையில் நாளை மறுநாள் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்

சென்னை நாளை மறுநாள் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது.   மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது.  இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது அண்ணாமலை டில்லி சென்றுள்ளதால், இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.  இன்று ல் சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் … Read more

திடீரென ராமேஸ்வரத்தில் கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரம் திடீரென ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் 100 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியது. ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ராமேஸ்வரத்துக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இன்று பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. அதிர்ச்சி … Read more

தமிழக அரசு கோவில்களை ஆக்கிரமித்துள்ளது : மோடியின் குற்றச்சாட்டால் பரபரப்பு

நிஜாமாபாத் தமிழக அரசு கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். இன்று தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் தனது உரையில் தமிழ்நாட்டுக் கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாகவும், கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்களைத் தென்னிந்திய மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்து கோவில்கள் மீது … Read more

கழிவறையை சுத்தம் செய்த மருத்துவமனை டீன்… 31 பேர் இறந்த மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஆளும்கட்சி எம்.பி. அடாவடி…

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்-டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் செப். 30 முதல் அக். 2 வரை 31 பேர் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் குழந்தைகள் அதிலும் 24 மணி நேரத்தில் 24 பேர் இறந்தது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்பிற்கு மருத்துவமனையில் போதிய மருந்து கையிருப்பு இல்லாததே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஹிங்கோலி நாடாளுமன்ற உறுப்பினரும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சியைச் … Read more