பிப்ரவரி 19: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 274-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 274-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகளவில் 67.85 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.11 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. மயில்சாமி தமிழ் திரைப்பட நடிகர். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார். நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ் பெற்றார் … Read more

குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு- சென்னை

குறுங்காலீஸ்வரர் கோவில், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. கோவிலுக்கு முன்னால் திருக்குளத்தையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம். ஒரு தூணுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா வெளிச்சம் போட்டுக் குட்டியா ஒரு சந்நிதி. தூணில் இருக்கார் … Read more

ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது ஜனநாயக படுகொலை! உத்தவ் தாக்கரே

மும்பை: ஷிண்டே அணியை சிவசேனா என  தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது ஜனநாயகத்துக்கு ஆபத்தான செயல் என சிவசேனா கட்சி தலைவரான  உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தவ்தாக்கரே தனது கொள்கைளுக்கு முரணாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை நடத்தியதால், சொந்த கட்சி எம்எல்ஏக்களால், ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைத்தனர். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வழக்குகள் உள்ளன. சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் … Read more

வேலுர் மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு அடிக்கல், ஓசூர் சிப்காட்டில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வேலூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஓசூர் சிப்காட்டில் உள்ள ஐநாக்ஸ் ஏர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறந்து வைத்தார். தொடர்ந்து, சென்னையில் உள்ள ஜி.எக்ஸ். குழுமத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்தையும் திறந்து வைத்தார். வேலூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் … Read more

மதுரை மீனாட்சியை தரிசித்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

மதுரை:  குடியரசு தலைவராக பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக தமிழகம் வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று மதியம் மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தார். இதற்காக இரண்டு பயணமாக  மகா சிவராத்திரியை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு, இரவு கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்கிறார்.  இதையொட்டி, மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில்  அடுக்கு … Read more

வன்னியர் இடஒதுக்கீடு பிரச்சினை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று  தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்து பேசியதாக செய்தியயாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறினார். இன்றுகாலை சென்னை தலைமைச்செயலகம் வந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. என்.எல்.சி விவகாரம், வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் ஆகியவை குறித்து இந்த … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓலா – தமிழ்நாடு அரசு இடையே புதிய ஒப்பந்தம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓலா – தமிழ்நாடு அரசு இடையே புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன்மூலம்; 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசிற்கும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு  கிழக்கு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.  திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்  தென்னரசு, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.  இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் … Read more