இன்று முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் தடை அமல்

பழனி’ இன்று முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் எடுத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடாகும்.  இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், ஆடிக் கிருத்திகை போன்ற நாட்களில் மேலும் பக்தர்கள் வருவது வழக்கமாகும். . இந்த கோவிலின் பாதுகாப்பை முன்னிட்டு அரசு … Read more

பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா பிரச்சாரம்

டில்லி நாடெங்கும் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த பிரசாரம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   ஏற்கனவே தூய்மை இந்தியா குறித்த பிரச்சாரம் தொலைபேசி உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது.  இது குறித்து மத்திய ஜவுளி அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சக உதவி இயக்குநர் பூர்ணிமா அந்த அறிக்கையில், ”கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி … Read more

ரூ. 2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடுவை நீட்டித்த ரிசர்வ் வங்கி

டில்லி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.  ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30-தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2000  ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். … Read more

கல்வி மனசாட்சி அற்றவர்களால் வணிக மயமானது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கல்வி மனசாட்சி அற்றவர்களால் வணிக மயமாகி உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் புதுச்சேரியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.  அவருக்குப் புதுவை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது.  மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அந்த மாணவரை சேர்க்க நிறுவனம் மறுப்பு தெரிவித்தது மிகவும் அதிர்ச்சியை அளித்தது. மாணவர் சித்தார்த்தன் கட்டணத்தை ஒழுங்காகச் செலுத்தவில்லை என் நிறுவனம் தரப்பில் காரணம் கூறப்பட்டது.  பிறகு … Read more

பிரேமலதா விஜயகாந்த் – தமிழக ஆளுநர் சந்திப்பு

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது.  இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளது.  கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் இதுவரை தங்கள் நிலை குறித்து ஏதும் கருத்து கூறாமல் உள்ளன. இந்நிலையில் இன்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆளுநர் … Read more

இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நீதிமன்றம் அமைச்சரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி  செய்ததால் அவர இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால் அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி … Read more

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் நாளை முதல் மாற்றம்… சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகாரப்பூர்வமாக அதிகரிப்பு…

அக்டோபர் 1 (நாளை) முதல் சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணை மூலம் தெரியவந்துள்ளது. நாளை முதல் சென்னை – மதுரை மார்கத்தில் செல்லும் ரயில்களின் நேரம் தவிர மதுரையில் இருந்து கோவை உள்ளிட்ட பிற வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வைகை … Read more

நெல்லை வந்தேபாரத் ரயில்… மதுரை மக்களுக்கு அல்வா… ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…

மதுரையில் இருந்து சென்னை வரும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் நாளை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து புதிதாக வந்தேபாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மதுரை மக்களுக்கு அல்வா வழங்குவதாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் “குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று … Read more

விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை… உலக கோப்பை தொடருக்கு லீவு போடுவாரா கோலி ?

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு மகப்பேறு கிளினிக்கில் இந்த தம்பதியினர் காணப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் அனுஷ்கா சர்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2017ல் திருமணம் செய்துகொண்ட விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2021 ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அப்போது இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணம் சென்ற கோலி … Read more

பாகிஸ்தானில் டிவி நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் கைகலப்பு

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி சேனல் சார்பிலொரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வழக்கறிஞர் ஷேர் அப்துல் கான் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் அப்சான் உல்லா கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். நேரலையில் ஒளிபரப்பான இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் யூதர்களின் முதல்வர் என அப்சான் உல்லாகான் விமர்சித்ததால் … Read more