தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சுலக்‌ஷன் குல்கர்னி நியமனம்

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சுலக்‌ஷன் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-24, 2024-25 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சுலக்‌ஷன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். சுலக்ஷன் குல்கர்னி மும்பை, விதர்பா அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வார ராசிபலன்: 17.2.2023  முதல்  23.2.2023வரை! வேதாகோபாலன்

மேஷம் ஆபீஸ்லயோ அல்லது பிசினஸ்லயோ முன்னால ஏற்பட்டிருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். நீங்க செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த வாரம் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் … Read more

பிப்ரவரி 17: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 272-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 272-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர்

திரிசக்தி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், பழைய மகாபலிபுரம் ரோடு, தாழம்பூரில் அமைந்துள்ளது. ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, சுவாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய மூன்று தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது. அந்த பக்தர்களுள் ஒருவரின் கனவில், பட்டாடை உடுத்திய மூன்று சிறுமிகளும், கூடவே மூன்று … Read more

ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி ரூ.1கோடி கேட்டார்! ஓபிஎஸ் ஆதரவாளர் ஆடியோ வெளியீடு…

ஈரோடு: ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி ரூ.1கோடி கேட்டார்  என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி  ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த கே.பி.முனுசாமி, நாளடைவில் ஓபிஎஸ்-ன் நடவடிக்கை பிடிக்காமல் எடப்பாடி அணிக்கு மாறினார். தற்போது தீவிர எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக இருந்து வருகிறார். தற்போது ஈரோடு தேர்தலில் எடப்பாடி கை ஒங்கி உள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இதனால், எடப்பாடி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியிட்டு … Read more

அடுத்தடுத்து கொலைகள்: கோவையில் கடந்த இரு நாட்களில் 33 ரவுடிகள் கைது!

கோவை: கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகள் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த இரு நாட்களில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். கோவையில் அடுத்தடுத்த 2 கொலைகள் நடைபெற்றது. கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீதிமன்ற வளாக அருகே கொலை என அடுத்தடுத்து 2 கொலை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இதை ஈரோடு கிழக்கு தொகுதியிலும் பேசி … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில், அதன் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, அங்கு அனல்பறக்கும் பிசாரம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் … Read more

ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை! தேர்தல் அலுவலர் பேட்டி

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை என அம்மாவட்ட தேர்தல் அலுவலர்  தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திமுகவினர் வாக்காளர்களை சிறை வைத்துள்ளதாகவும், பணம் கொடுத்து … Read more

ரூ.6.40 லட்சம் கோடியில் 470 விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா!

டெல்லி: டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், ஏர்பஸ் மற்றும் போயிங்கிலிருந்து மொத்தம் 470 அகலமான மற்றும் குறுகிய  விமானங்களை வாங்குவதாகக் அறிவித்து உள்ளது. மேலும் மொத்த ஒப்பந்த மதிப்பு 80 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6.40 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தது. இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு டாடா நிறுவனம் … Read more

மகா சிவராத்திரி: மதுரை மீனாட்சியை தரிசிக்கும் குடியரசு தலைவர் முர்மு இரவு ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்…

சென்னை: மகா சிவராத்திரியையொட்டி, தமிழ்நாட்டுக்கு வருகை தரும் குடியரசு தலைவர் முதன்முறையாக, மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, கோவை செல்கிறார். அன்று இரவு கோவை  ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரை, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 18ந்தேதி மகா சிவராத்திரியன்று  காலை … Read more