மெட்ரோ ரயிலுக்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி இன்று துவங்கியது…

சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லைட் ஹவுஸ் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – (சிறுசேரி) சிப்காட் இடையே மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தீவிரமாக நடைபெறுவதை அடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளான தி.நகர், நந்தனம், புரசைவாக்கம், ஆற்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாதவரம் – (சிறுசேரி) சிப்காட் வழித்தடத்தில் உள்ள கிரீன்வேஸ் சாலை முதல் … Read more

ரேசன் கடைகள் காலை 9 மணிக்கு திறக்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

சென்னை: ரேசன் கடைகள் காலை 9 மணிக்கு திறக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நியாய விலைக் கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதன்படி, ரேசன் கடைகள் காலை 9 மணிக்கு திறக்க வேண்டும் என்றும், இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது என்று கட்டுப்பாட்டு விதித்துள்ளது. நியாய விலைக் கடைகளில், பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே இலவச வேட்டி, சேலைகளை வழங்க வேண்டும் என்றும், … Read more

ராணுவ வீரர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது

கிருஷ்ணகிரி: ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். வேலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி பிரியா குடிநீர் தொட்டி முன் துணி துவைப்பதை கண்ட நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு திமுக கவுன்சிலரான சின்னசாமி சத்தம் போட்டுள்ளார். அப்போது ராணுவ வீரர் பிரபாகரனுக்கும், கவுன்சிலர் சின்னச்சாமி ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலத்தகாயம் அடைந்த பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் திமுக … Read more

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அமர்ந்து சாப்பிட தனி அறை இனி இல்லை… உணவகங்களுக்கு போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை…

அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயண வழி உணவகங்களில் தனி அறையில் உணவு தரக்கூடாது என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டலில் ஓட்டுநர், நடத்துனர் உணவருந்த தனி அறை ஒதுக்கப்படுகிறது இதனை தடை செய்து பயண வழி உணவக உரிமையாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் “அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் பொது அறையிலேயே வழித்தட போக்குவரத்து பேருந்தின் … Read more

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை : திருமாவளவன்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளவன் : விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் … Read more

ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த காகங்கள்

ஹோன்ஷு: ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திரமான நிகழ்வின் வீடியோக்களை பீதியை கிளப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான காகங்கள் கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஜப்பானிய தீவான ஹோன்ஷுவில் தரை, வானம், கட்டிடங்கள், வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் பறப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியைந்தனர். தீவில் மர்மமான முறையில் காக்கைகள் கூடும் விசித்திரமான வீடியோவை பல பயனர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விலங்குகள் அல்லது … Read more

திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

திரிபுரா: திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி வெளியிட்டார். இதையடுத்து திரிபுரா மாநிலத்திற்கு இன்று தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு கடந்த ஜன.21-ல் வேட்புமனு துவங்கி, வேட்பு மனு தாககல் ஜன.31-ல் முடிவடைந்தது. 28 லட்சத்திற்கு மேற்பட்ட … Read more

பழனியில் வள்ளிக்கு தாய் வீட்டு சீதனத்தை வழங்கிய குறவர் இன மக்கள்

பழனி: தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுசெல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த 7ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது அருள்மிகு முத்துக்குமாரசாமி – வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் … Read more

திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல்

அகர்தாலா: திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி வெளியிட்டார். இதையடுத்து திரிபுரா மாநிலத்திற்கு இன்று தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு கடந்த ஜன.21-ல் வேட்புமனு துவங்கி, வேட்பு மனு தாககல் ஜன.31-ல் முடிவடைந்தது. 28 லட்சத்திற்கு மேற்பட்ட … Read more

உலகளவில் 67.80 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.85 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.05 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.