அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து

சென்னை அமைச்சர் துரைமுருகன் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  அதிமுக மற்றும் பாஜக உறவில் விரிசல் ஏற்பட்டு வருவது அனைவரும் அறிந்ததாகும்.  இந்நிலையில் நேற்று அதிமுக அதிகாரபூர்வமாக பாஜகவுடனான கூட்டணி முறிந்தது என அறிவித்தது.  இது அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்த ஒன்று தன என்றாலும் ஒரு சிலர் அதிர்ச்சி அடைந்தனர்   இன்று சென்னையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம்,  ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் காவிரி நீர் விவகாரத்தில் கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். … Read more

ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கிய லிபியா அணை உடைப்பு : 8 பேர் கைது

திரிபோலி லிபியாவில் இரு அணைகள் உடைந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததையொட்டி 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடும் புயலால் லிபியாவில் இரு அணைகள் உடைந்து  அந்த வெள்ள நீரில் சிக்கி 4 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் வரை உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. டெர்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகள் புயல் காரணமாக உடைந்தது தொடர்பாக, நீர்வளத் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக. தெரிவிக்கப்பட்டுள்ளது/ கைதானவர்களில் 7 பேர் முன்னாள் … Read more

பூண்டி ஏரி நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள எச்சரிக்கை

சென்னை பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னைக்குத் தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் … Read more

#SK23 படப்பிடிப்பு துவங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது : சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். முருகதாஸை நேற்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான #SK23யை முருகதாஸ் இயக்கப்போவதாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‛‛எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். உங்கள் கதையைக் … Read more

கிராமபுற மக்களின் குறைகளை போக்க ‘ஊராட்சி மணி’! முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை: கிராமபுற மக்களின் குறைகளை போக்க  ‘ஊராட்சி மணி’ என்ற பெயரில் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. இந்த சேவை மையத்தை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார் கடந்த 2022-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் புகார்களைத் தீர்க்கும் வகையில் உதவி மையம் அமைப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி இயக்ககத்தில் ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மணி என்ற … Read more

வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்குவதில் தனியார் பங்களிப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 18 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பங்களிப்புடன் தானியங்கி வாகன சோதனை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் பேருந்து சேவை உள்பட பல அரசு நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே   தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்களுக்கான சட்ட மசோதா வழியே நீர் நிலைகளை … Read more

ஆசிய விளையாட்டு போட்டி2023: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் தங்கம் வென்று புதிய உலக சாதனை

ஹாங்சோவ்: ஆசிய விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் உள்பட 2 பதக்கம் பெற்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளார். திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆகிய இந்திய மூவரும் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் போட்டியில் முதலிடத்தை முடித்து 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளனர். 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் … Read more

#நன்றி_மீண்டும்வராதீர்கள் : மோடியே வந்தாலும் அண்ணா மலையையே மாற்றினாலும் கூட்டணி இல்லை… பாஜக-வுக்கு டாட்டா காட்டிய அதிமுக…

பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டாக்குடன் அதிமுக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில கட்சிகளை ஸ்வாகா செய்து முன்னணி கட்சிபோல கெத்து காண்பித்து வரும் பாஜக, தமிழ்நாட்டிலும் இதே தந்திரத்தை கையாண்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் … Read more

25 கடைகளுக்கு சீல்: சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு!

சென்னை: சென்னை  கத்திபாரா மேம்பாலம்  அருகே சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து பலர் கடை கட்டி கல்லா கட்டி வந்த நிலையில், அந்த அரசு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டு உள்ளது. அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே  சின்னமலை பகுதியில்அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை ஆக்கிரமித்த  பலர் ஆக்கிரமித்து,  கடைகள், குடோன்கள், … Read more

பாஜக உடனான கூட்டணி முறிந்தது… அதிமுக திட்டவட்ட அறிவிப்பு…

பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழக பாஜக-வைக் கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் கூட்டணி கட்சிகளான அதிமுக -பாஜக ஆகியவை ஆளும் கட்சியான திமுக-வை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத நிலை இருந்துவந்தது. இந்த நிலையில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே உரசல் … Read more