நுகர்வோர் கண்ணாடி பாட்டிலில் பால் விற்பதை விரும்பவில்லை : ஆவின்

சென்னை நுகர்வோர் கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை விரும்பவில்லை என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் ”ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்குப் பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும். எனவே ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து … Read more

காவிரி நீர் வழக்கு : உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

டில்லி கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்குக் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசு “கர்நாடகா 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடி வரை தொடர்ந்து … Read more

நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலை 24ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! கோவில்பட்டியில் நிறுத்த கோரிக்கை…

டெல்லி: நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என அம்மாவட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 3வது ரயிலாக நெல்லை சென்னை இடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை வரும் 24ந்தேதி  பிரதமர் மோடி … Read more

அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது! இபிஎஸ் வழக்கு இன்று விசாரணை…

சென்னை: இபிஎஸ் வழக்கு இன்று விசாரணை அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், இன்னும் அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக,  அதிமுகவில் ஒற்றைtஹ் தலைமை பிரச்சினை ஏற்பட்ட நிலையில், எடப்பாடி தலைமையில் அதிமுக … Read more

இந்தியா – கனடா ராஜ்ஜிய உறவில் சிக்கல்… அனைத்து விசா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு…

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில் கனடா விசா நடைமுறையில் சிக்கல் எழுந்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது. இதனையடுத்து விசா நடைமுறையை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. கனடாவில் இருந்து இயங்கி வரும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குற்றம்சாட்டினார். மேலும், இந்திய தூதரக அதிகாரி ஒருவரையும் கனடாவில் இருந்து வெளியேற்றியது. இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்தியா … Read more

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு…

சென்னை: வரி முறைகேடு மற்றும் மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு தொடர்பாக, வருமான வரித்துறை சென்னை உள்பட 40 இடங்களில் நேற்று முதல் ரெய்டு நடத்தி வருகிறது. இந்த ரெய்டு இன்று 2வது நாளாகவும் தொடர்கிறது. வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சென்னை, செங்கல்பட்டு, சேலம், தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில்  40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மத்தியஅரசின் அமைப்புகளான  அமலாக்கத்துறை, என்ஐஏ, … Read more

சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வையுங்கள்! ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்,  சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், புதிதாக சாலையை தொண்ட தடை விதிக்க அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னையில், சாலைகளை தோண்டும் பணிக்கு தடை விதித்துள்ள சென்னை மாநகராட்சி,  மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சாலை தோண்டுவதை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. முன்னதாக பெருநகர சென்னை … Read more

உக்ரைன் மற்றும் பிரேசில் அதிபர்கள் முதல் முறையாகச் சந்திப்பு

நியூயார்க் முதல் முறையாக பிரேசில் மற்றும் உக்ரைன் அதிபர்கள் சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றிப் பேசி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த 78-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசும்போது, உக்ரைனில் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு கூறினார். அவர், ”ரஷ்யா பல விசயங்களை ஆயுதங்களாக மாற்றி, தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அவை எங்களுடைய நாட்டுக்கு எதிராக … Read more

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்,  திருவலஞ்சுழி,  தஞ்சாவூர் மாவட்டம்.

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்,  திருவலஞ்சுழி,  தஞ்சாவூர் மாவட்டம். மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பார்கடலில் அமுதம் கடைந்தனர். வாசுகியானது மந்திர மலையின் பாரம் தாங்காமல், தனது கொடிய விஷத்தைப் பாற்கடலில் கக்கியது. அதன்படி கக்கப்பட்ட ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காது தேவர்களும் அசுரர்களும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். ஈசன் அவர்களிடம், எந்த செயல் செய்யும் முன்பு விநாயகரை வழிபட வேண்டும். எனவே நீங்கள் விநாயகப் பெருமானை வழிபட்டால் தடையின்றி அமுதம் … Read more

ஆளுநர் அமைத்த துணைவேந்தர் நியமனக் குழுவை மாற்றிய தமிழக அரசு

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்காகத் தமிழக ஆளுநர் ரவி அமைத்த குழுவை தமிழக அரசு மாற்றி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் பல்வேறு விவகாரத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்றுக்கொள்ளாதது இரண்டு தரப்பு மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுவரை 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதும் கடுமையான விமர்சனங்களைச் … Read more