தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 9 ஆம் தேதி கூடுகிறது

சென்னை வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளதாக சபாநாயக்ர் அறிவித்துள்ளார். இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை கூடுவதாக அறிவித்துள்ளார். அப்பாவு, ‘ஆளுநரின் பணி சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆகும்.  நாடாளுமன்றக் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது மரபு எனினும் அவர் அழைக்கப்படவில்லை. அவரஒ புதிய நாடாளுமன்றமே கட்டிடத் திறப்பு விழாவிற்கும் … Read more

எதற்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா? : ராகுல் கேள்வி

டில்லி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்படுவது எதற்கு என ராகுல் காந்தி வினா எழுப்பியுள்ளார். நேற்று மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மசோதாவின் மீதான விவாதம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற ஒத்துழைக்க வெண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார்.  இன்றைய விவாதத்தில் காங்கிரஸ் தலைவ ராகுல் காந்தி, ”இந்த மகளிர் இட ஒதுக்கீடு … Read more

மீண்டும் ஐ நா சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய துருக்கி அதிபர்

நியூயார்க் துருக்கி அதிபர் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை ஐ நா சபையில் எழுப்பி உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 78-வது அமர்வு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற துருக்கி அதிபர் எர்ட்கன் பேசும்போது, காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார். அவர்,  “பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் துருக்கி வழங்கத் தயாராக உள்ளது,  ஐ.நா. … Read more

ரஜினிக்கு உலகக் கோப்பை கிரிக்கெட்டைக் காண கோல்டன் டிக்கெட்

சென்னை நடிகர் ரஜினிகாந்த்துக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதுவரை பிற நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பை தொடர்களை நடத்திய இந்தியா முதல் முறையாகத் தனியாக நடத்துகிறது. மும்பை, ஆமதாபாத், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முடிவடைந்துள்ளது. … Read more

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்… 2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்…

மகளிர் மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி “ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவேண்டும்” என்று வலியுறுத்தினார். இதுகுறித்து ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு குறித்து இந்த மசோதாவில் குறிப்பிடப்படாதது மிகவும் கவலையளிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பணியாற்றுவதாகக் கூறிக்கொள்ளும் மோடி தனது கீழ் செயல்படும் இந்திய அரசின் 90 செயலாளர்களில் எத்தனை பேர் … Read more

2024 டி20 உலகக் கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை போட்டியை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவு நாடுகளில் நடத்த 2021 ம் ஆண்டே ஐசிசி அனுமதி வழங்கியது. இதற்காக அமெரிக்காவின் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய மூன்று நகரங்களில் டி-20 போட்டிகளை நடத்தபடுவதை ஐசிசி இன்று உறுதிப்படுத்தியது. … Read more

பூஜ்யம் ஆனது நீட் : நீட் தேர்வில் ‘0’ வாங்கினாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர அனுமதி…

மருத்துவ மேல் படிப்பு சேர்வதற்கு நீட் தகுதித் (NEET-PG) தேர்வில் 0 மதிப்பெண் வாங்கினாலும் அவர்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டில் 4400 முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாக இருந்தது தவிர கடந்த மூன்று ஆண்டுகளில் முதுநிலை மருத்துவ இடங்களில் 12758 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவ மற்றும் துணை மருத்துவ படிப்புகளில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளதைச் சுட்டிக்காட்டி நீட் பிஜி 2023 (NEET-PG 2023) கட்- … Read more

கர்நாடகா எப்போதும் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதில்லை : துரைமுருகன்

சென்னை கர்நாடகா எப்போதுமே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.   கர்நாடகா தமிழகத்துக்குக் காவிரி தண்ணீரை முறையாகத் திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மத்திய அமைச்சர் தமிழகத்துக்குத் திருப்தி அளிக்கும் வகையில் … Read more

சனாதனம்? அமைச்சர் உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின் மயிலாடுதுறை கோவில்களில் சிறப்பு வழிபாடு!

சென்னை: தமிழ்நாட்டில் இந்து மதத்தின் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அவரது கருத்துக்கு மாறாக, அவரது தாயாரும், முதலமைச்சர் ஸ்டாலின் மனைவியுமான  துர்கா ஸ்டாலின் மயிலாடுதுறை ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் செய்து வருகிறார். திமுக ஆட்சி பதவி ஏற்றதும், தனது வேண்டுகோளை நிறைவேற்றிய இறைவனை கோவில் கோவிலாக சென்று தரிசித்து வருவதுடன், காணிக்கைகளையும் செலுத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். ஆனால், திமுக தலைவரும் … Read more

பருவமழை முடியும்வரை சென்னையில் புதிதாக பள்ளம் தோண்டக்கூடாது! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னையில் பருவமழை முடியும்வரை புதிதாக பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்திவைக்க முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள் மற்றும் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி உள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் 74 காம்பாக்டர் வாகனங்கள் மற்றும் நிர்பயா திட்ட நிதியின் கீழ், ரூ.4.37 கோடி … Read more