ரெயில் பயணத்தின்போது பயணிகளின் பிரச்சினைகளுக்கு ‘ரெயில் மதாத்’ செயலி மூலம் தீர்வு

சென்னை: ரெயில் பயணத்தின்போது ரயில் பயணிகளின்  எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ‘ரயில் மதாத்’ செயலி மூலம் தீர்வு காணப்பட்டு வருவதாக தெற்க ரெயில்வே அறிவித்துஉள்ளது. ரெயில் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ‘ரெயில் மதாத்’ செயலியை ரயில்வே ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூல விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துஉள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,  இந்திய ரெயில்வே சமூக பொறுப்பு, பயணிகளுக்கு தடையற்ற சேவை அளிப்பதை குறிக்கோளாகக் கொண்டு பயணிகள் குறைகளை தீர்ப்பதை தலையாய கடமையாக … Read more

ஆதித்யராம் கட்டுமான நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களைச்சேர்ந்த 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: ஆதித்யராம் கட்டுமான நிறுவனம் உள்பட 4 நிறுவனங்களைச்சேர்ந்த நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடை பெற்று வெருகிறது. சென்னையில் 10 இடங்களிலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிரபல கட்டுமான நிறுவனம் ஆதித்யராஜ் உள்பட  அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் உள்ளிட்ட 4 குழுமங் களுக்கு சொந்தமான நாடு முழுவதும் சுமார்  60இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.  … Read more

பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை பிரபாகரன்- சீமான்

சென்னை: பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை பிரபாகரன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள்தான் உள்ளது. தம்பி பாலச்சந்திரனை சாகவிட்டுட்டு தன் உயிரை தப்பி போகிற கோழையில்லை அவர். எக்காரணத்தை கொண்டும் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று கூறியவர், 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்க … Read more

உலகளவில் 67.76 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.83 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.02 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 269-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 269-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில்

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், சக்குளத்துக்காவு-இல் அமைந்துள்ளது. தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன் ஒருவன் தன் மனைவியுடன் காட்டிற்கு விறகு வெட்ட வந்த போது, ஒரு பாம்பு சீறி வந்தது. பயந்து போன வேடன், அதை தன் கோடரியால் வெட்ட முயன்ற போது, அது தப்பி ஓடியது. கொல்லாமல் விட்டதால், பாம்பு தன்னை பழிவாங்கி விடும் என பயந்த … Read more

கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொலை! பொதுமக்கள் ஓட்டம்..

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தின்போது, அங்கிருந்த பொதுமக்கள், பயந்து  அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு ஒன்றின் வாய்தாவுக்கு வந்த நபரை,  கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த … Read more

மாநிலங்களவை மார்ச் 13 வரை ஒத்திவைப்பு!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் மார்ச் 13ந்தேதி வரை ஒத்தி வைப்பதாக ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கர் அறிவித்தார். அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்த இடையூறு காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஒத்திவைக்கப்பட்டது. 2023ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31ந்தேதி குடியரசு தலைவர்  உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 2ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 10 … Read more

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பேருந்து மும்பையில் அறிமுகம்!

மும்பை: இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் பேருந்து மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்து,  BKC – குர்லா வழித்தடத்தில் இன்னும் ஓரிரு நாளில் சேவையை தொடங்கும் என்றும், மும்பையில் உள்ள பிராந்திய போக்குவரத்து நிறுவனம் பேருந்திற்கான பதிவு செயல்முறையை இன்னும் முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் சில நகரங்களில் இப்போதும் இவ்வாறான டபுள்-டக்கர் பேருந்துகள் இயங்கி கொண்டிருக்கின்றன என்றாலும், நமது சென்னை உள்பட … Read more

பிரபாகரன் உயிருடன் இல்லை! பழ.நெடுமாறனுக்கு இலங்கை ராணுவம் பதில்…

கொழும்பு: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என இன்று திடீரென பழ.நெடுமாறன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இலங்கை ராணுவம், அதை மறுத்துள்ளது. இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்க இடையேயான  இறுதிப் போரில் முல்லிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, இலங்கை ராணுவ தாக்குதலில் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களும் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் அவரது இறப்பு தினம், அவரது ஆதரவாளர்களால் … Read more