சூரியனை ஆய்வு செய்ய சென்றுகொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 4வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது!

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய சென்றுகொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 4வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக  சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி விண்ணில் செலுத்தி உள்ளனர்.  இந்த விண்கலமானது   பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு … Read more

தொடர்ந்து 482ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று சென்னையில் 482 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 482 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை … Read more

தொகுதி பங்கீட்டுச் சிக்கலுக்கு புதிய தீர்வு காணும் இந்தியா கூட்டணி

டில்லி தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண இந்தியா கூட்டணி புதிய வழிமுறையைக் கண்டறிந்துள்ளது.   பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவதற்காக, 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.  நேற்று முன் தினம் இந்த கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் நடந்தது. அப்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கி முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ‘இந்தியா’ கூட்டணி ஓருங்கிணைப்பு கூ சார்பில் இது குறித்து கூறியதாவது: ”மாநில அளவில் … Read more

ரூ 1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, : பணம் வரவு வைக்கும் ப்ணி தொடக்கம்

சென்னை வங்கிக் கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக அறிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நாளை ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விடும். இதன் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் … Read more

ஒரே நேரத்தில் 3 பேரிடம் விஜயலட்சுமி புகார் குறித்து விசாரிக்க சீமான் கோரிக்கை

சென்னை நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து ஒரே நேரத்தில் 3 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீமான் கேட்டு கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ளார்.  அதில் சீமான் தன்னிடம் வருடக் கணக்கில் குடும்பம் நடத்திய சீமான் மணம் முடிப்பதாகக் கூறி ஏற்மாற்ரி விட்டதாகவும் இதனால் அவர் கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்தார் நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து சென்னை பெருநகர காவல் … Read more

இந்தியா கூட்டணி புறக்கணிக்கும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

டில்லி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க உள்ளதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது., மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து  ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்ட இக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளன.  கூட்டணியின்  பல்வேறு பிரச்சினைகளை ஆராய 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. நேற்று  இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் டில்லியில் நடந்தது. தேசியவாத காங்கிரஸ் … Read more

நாளை முதல்வர் வருகையால் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் நேரம் மாற்றம்

காஞ்சிபுரம் நாளை முதல்வர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரம் வருவதால் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். காஞ்சிபுரத்திற்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது  காஞ்சிபுரத்தில் நாளை3) அனைத்து பள்ளிகளும் … Read more

தனியார் நிறுவனங்களுக்கு ஆவின் விலை உயர்வு சாதகமாகும் : அண்ணாமலை கருத்து

சென்னை தனியார் நிறுவனங்களுக்கு ஆவின் பொருட்கள் விலை உயர்வு சாதகமாக அமையும் என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இன்று ஆவின் பால் பொருட்களின் விலையைத் தமிழக அரசு உயர்த்தி உள்ளது.  இதற்குப் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் (டிவிட்டர்) வலைத்தளத்தில் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அண்ணாமலை, ”மக்கள் விரோத திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடுமையான விலையுயர்வை மக்கள் … Read more

இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வெவ்வேறு நாட்களில் கூடுதல் நீதிபதிகளாகப் பதவியேற்ற ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர்  உத்தரவிட்டார். இன்று மாலை இந்த 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை … Read more

ஒரே வாரத்தில் தமிழகத்தில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு

சென்னை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 113 பேர்  டெங்குவால் பாதிப்பு அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இதில் மதுரை மாநகராட்சியில் … Read more