டெங்கு பரவல் எதிரொலி: சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் என மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவத்தொடங்கி உள்ள நிலையில்,  சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு ரூ 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான நிலையில், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களை தடுக்கும் பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலையொட்டி, அதை கட்டுப்படுத்த சென்னை  மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், மாநகராட்சி … Read more

சனாதனம் சர்ச்சை: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: சனாதனம்  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம், அவர்கள் பதவி விலகக்கோரி சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை உள்பட  800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதத்தின் சிறப்பான சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதயநிதி பேசியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. … Read more

சென்னை – திருப்பதி நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படுகிறது.

சென்னை: சென்னை – மும்பை மற்றும் திருப்பதிக்குச் சாலை மார்க்கமாகச் செல்லும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்க சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை  அகலப்படுத்தப்பட உள்ளது. சென்னையிலிருந்து மும்பை மற்றும் திருப்பதி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் 144 கி.மீ. தொலைவு என்பது சென்னை-சூரத் எக்ஸ்பிரஸ் விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சாலையானது இது ரேனிகுண்டா, மகபூப்நகர், அக்கல்கோட், சோலாப்பூர் மற்றும் நாசிக் வழியாகச் சென்று, சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான தூரத்தைக் குறைந்தது 120-130 கி.மீ. … Read more

மறக்குமா நெஞ்சம்: ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியே சென்னையில் ஏற்பட்டபோக்குவரத்து நெரிசலுக்கு காரணம்! காவல்துறை விளக்கம்…

சென்னை:  ஞாயிறன்று சென்னையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல், அப்போது முதலமைச்சரின் வாகனம் நெரிசலில் சிக்கியது போன்றவற்றுக்கு எ ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிதான் காரணம் என தாம்பரம் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஈசிஆரில்,  மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில், நேற்று (ஞாயிறு) ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி  நடைபெற்ற நிலையில், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், நேற்று ஈசிஆர் உள்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடுமையான வாகன நெரில் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் பல்வேறு விமர்சனங்களை கூறிய … Read more

எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில், பல்வேறு அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை சென்னை உயர்நீதிமன்றமே பலரது வழக்குகளை தானானகவே முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இது பரபரப்பையும், திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்து அணி வீரர்கள் விவரத்தை அறிவித்த அவர்களது குடும்ப உறுப்பினர்கள்

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ள நியூஸிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியானது. அணியில் தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்த விவரங்களை அந்தந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. Our 2023 @cricketworldcup squad introduced by their number 1 fans! #BACKTHEBLACKCAPS #CWC23 pic.twitter.com/e7rgAD21mH — BLACKCAPS (@BLACKCAPS) September 11, 2023 வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம் … Read more

ரணத்தை ஏற்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: காவல்துறை விளக்கத்தை தொடர்ந்து மன்னிப்பு கோரியது ஈவன்ட் நிறுவனம்….

சென்னை:  பணம் வருவாய் ஒன்றையே நோக்கமாக கொண்டு நேற்று சென்னை ஈசிஆரில் நடத்தப்பட்ட பிரபல இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தாம்பரம்  காவல்துறை, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது நேரடியாக குற்றம் சாட்டியது. இதையடுத்து, நிகழ்ச்சியை நடத்திய,  ஈவன்ட் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் சென்னை முழுவதுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் முதலமைச்சர் … Read more

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லதீப்-க்கு 12 ஆண்டு சிறை… நெதர்லாந்து அரசியல் தலைவரின் தலைக்கு விலை நிர்ணயித்த விவகாரம்…

நெதர்லாந்து இடதுசாரி கட்சித் தலைவர் கிரீட் வில்டர்ஸ் தலைக்கு விலை நிர்ணயித்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லதீப்-க்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் குறித்த கேலிச்சித்திர போட்டிக்கு வில்டர்ஸ் அழைப்பு விடுத்ததை அடுத்து அவரது தலைக்கு பாகிஸ்தான் ரூபாய் 30 லட்சம் வழங்குவதாக கடந்த 2018 ம் ஆண்டு காலித் லதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து காலித் லதீப் மீது நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது இந்த … Read more

பவர் பாயிண்ட் மென்பொருளை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் காலமானார்…

உலகின் முன்னணி படவிளக்க மென்பொருளான பவர் பாயிண்ட்-டை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் காலமானார். அவருக்கு வயது 76. 1985 முதல் 1996 வரை பவர் பாயிண்ட்-டின் முதன்மை மேம்பாட்டு அதிகாரியாக பதவி வகித்த ஆஸ்டின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பவர் பாயிண்ட்-டை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குவதற்கு முன்பே அதன் உருவாக்கிய குழுவில் இடம்பெற்ற ஆஸ்டின் 1996 ம் ஆண்டு உடல்நிலை காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஆல்டோஸ் நகரில் வசித்து வந்த அவர் … Read more

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீமை இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Hari ini saya menerima kunjungan bintang filem India, Rajinikanth yakni satu nama yang tidak asing lagi di pentas dunia seni asia dan antarabangsa. Saya hargai penghormatan yang diberikan beliau terhadap perjuangan saya khasnya terkait isu … Read more