பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பல் : கூடங்குளத்தில் தீவிர மீட்புப்பணி

கூடங்குளம் தொடர்ந்து 2 ஆம் நாளாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பலை மீட்கும் பணி நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து இதில் 3, 4-ம் அணு உலைக்கான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது. மேலும் 4, 5-ம் அணு உலைக்கான … Read more

சனாதனம் குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு : ப சிதம்பரம் விளக்கம்

காரைக்குடி சனாதனம் குறித்த கருத்துக்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ப சிதம்பரம் விளக்கி உள்ளார். காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது  ப சிதம்பரம், ”அனைத்து மொழிகளுக்கும் பேசுதல். மற்றும் புரிதல் என இரு பக்கங்கள் உண்டு.  தமிழகத்தில் சனாதன தர்மம் என்றால் சாதி ஆதிக்கம், பெண் இழிவு என்பதாகவே 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகிறது. வடநாட்டில் சனாதன தர்மம் என்றால் … Read more

இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்

சென்னை இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை என்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பலர் தனிப்பட்ட காரணங்கள், குடும்ப காரணங்கள் என பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர். எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. எந்த பிரச்சினையும் தற்கொலையால் தீரப்போவதில்லை. உலக நாடுகள் தற்கொலையைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  … Read more

விண்வெளியில் இன்னொரு பூமியைக் கண்டுபிடித்த ஜப்பான் விஞ்ஞானிகள்

டோக்கியோ ஜப்பானிய விஞ்ஞானிகள் விண்வெளியில் பூமியைப் போல் மற்றொரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர் இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை ஏராளமான கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். தற்போது பூமியைப் போன்ற கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கிண்டாய் பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் சோபியா லிகாவ்கா மற்றும் டோக்கியோவில் உள்ள ஜப்பானின் தேசிய … Read more

477 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று 477 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 477 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் … Read more

இன்னும் 2 நாட்களுக்குள் டிரெண்டிங் ஆக உள்ள இந்தியா – பாரதம் சர்ச்சை

டில்லி வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஜி 20- மாநாட்டில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் பாரதம் எனப் பெயர் உள்ளதால் சர்ச்சை உண்டாகும் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியின் பெயர் இந்தியா (I.N.D.I.A.) என்று வைக்கப்பட்டுள்ளது.. பாஜக இதனைத் தொடர்ந்து விமர்சித்து வருவதுடன் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கத் தொடங்கியது. இன்று இரவு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து வழங்க உள்ளார். இந்த … Read more

மோடி ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்புக்கு ஊக்குவிப்பு : ஜி 20 சிறப்புச் செயலர்

டில்லி இந்தியாவில் ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என மோடி கூறியதாக ஜி 20 செயலர் முத்தேஷ் பர்தேஷி தெரிவித்துள்ளார்.  இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தவிரப் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இன்று ஜி-20 சிறப்புச் செயலர் முக்தேஷ் பர்தேஷி,. “இந்த ஜி-20 பயணத்தில் ஓர் அத்தியாவசிய பொருளாக, கலைப்பொருட்கள் அங்கம் வகிக்கின்றன. பிரதமர் மோடி நாட்டில், ஒரே மாவட்டம், … Read more

மோடி அறிவித்த உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி

டில்லி இன்றைய ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி குறித்து அறிவித்துள்ளார். இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தவிரப் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர் இந்த ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இந்தியப் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி, ”அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எரிபொருள் கலப்பு விஷயத்தில் செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை … Read more

ஜி 20 மாநாட்டில் உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து தீர்மானம்

டில்லி ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த தீர்மானம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஜி 20 உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இன்றும் நாளையும்  டில்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இத்தீர்மானங்கள் பற்றிய விவரங்கள் இதோ இந்தியா தலைமையின் கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி-20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது திருப்தியளிக்கிறது. உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக ஜி-20 உச்சி … Read more

மொரோகோ நிலநடுக்கம் : 820 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

ரபாட் மொரோகோ நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பலி எண்ணிக்கை 820 ஆகி உள்ளது. மொரோகோ நாடு வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது மொராகோ நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  அதாவது அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவானது.  நிலநடுக்கம் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது. இதில் மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. பல … Read more