இந்தூர் மைதானத்துக்கு மாற்றப்பட்டது இந்தியா ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி – குனேமேனை இறக்குகிறது ஆஸ்திரேலிய அணி…

டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து, இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியஅணி இளம் பவுலரான குயின்ஸ்லாந்து பவுலர் குனேமேனை இறக்குவதாக அறிவித்து உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கு டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் மோதுகிறது. இரு அணிகளுக்க இடையே நடெபற்ற முதல் டெஸ்ட் போட்டி  நாக்பூரில் நடைபெற்றது. இதில்,  இந்தியா இன்னிங்ஸ் மற்றும் … Read more

எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்! பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்…

தஞ்சாவூர்: விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன்,  தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளும் இடையே நடைபெற்ற போரில், விடுதலை புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.  வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே … Read more

பிப்ரவரி 13: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 268-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 268-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை இன்று தொடக்கம்

பெங்களுரூ: பெங்களூருவில் இன்று நடைபெறும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ஏரோ இந்தியா என்ற பெயரில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறும் என மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சி தொடங்கி நடைபெற … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அபார வெற்றி

கேப்டவுன்: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. 149 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் … Read more

உலகளவில் 67.75 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.82 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.00 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோயில், திருப்புனவாசல்

அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசலில் அமைந்துள்ளது. “ஓம்” என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார். இலிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் “பிரம்ம தீர்த்தம்” என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், இலிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் … Read more

இரட்டை முக பைரவர், பெரிச்சிகோயில்

இரட்டை முக பைரவர், சிவகங்கை மாவட்டம், பெரிச்சிகோயிலில் அமைந்துள்ளது. ஒருமுகம் கொண்ட பைரவரையே தரிசனம் செய்திருப்பீர்கள். பைரவரை மூலவராகக் கொண்ட திருவாரூர் மாவட்டம் தகட்டூர் கோயிலில் கூட பைரவரை ஒருமுகத்துடன்தான் தரிசிக்க முடியும். ஆனால், முன்னும் பின்னுமாக இரண்டு முகங்களுடன் காட்சி தரும் கோயிலை அஷ்ட பைரவத்தலங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோயிலில் காணலாம். இப்பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் … Read more

பிப்ரவரி 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 267-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 267-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி நேற்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, … Read more