மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி நேற்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, … Read more

சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமம்

சென்னை: சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் அதிகாலையில் வாகனத்தை ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு பயணம் செய்கின்றனர். சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.

ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு அபராதம்

புதுடெல்லி: விதிமுறை மீறல் தொடர்பாக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமானகளின் பயிற்சி தொடர்பான விதிமுறைகளை மீறியதாக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ஏர் ஆசிய நிறுவன பயிற்சி தலைவரை மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் 67.73 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.81 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.99 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு!

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி, ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கடற்பாசி பூங்காக்கள் அமைக்க ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையிலும் மூத்த குடிமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் … Read more

106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

சென்னை: நெல்மூட்டைகளை சேமித்து வைக்கும் வகையில், 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின்  இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ரூ. 105.08 கோடி மதிப்பீட்டில் 1,42,450 மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து,  , … Read more

ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்திம் அருகே  ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறாம் தேதி புங்கம்பள்ளி கிராமத்தில் மூன்று மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழி விடாமல், ஆம்புலன்சை முந்திக் கொண்டு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல கிலோ மீட்டர் வரை ஆம்புலன்ஸ்-க்கு வழி விடமால் கார் சென்றுள்ளதை அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள், அந்த காருக்கு அபாரதம் விதித்தனர். … Read more

துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் சிக்கி உள்ளனரா? இந்திய தூதர் தகவல்

அங்காரா: துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் சிக்கி உள்ளனரா? என்று இந்திய தூதர் வீரேந்தர் பால் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், துருக்கியில் 3000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். நில நடுக்கம் பாதித்த பகுதிகளில் இருந்து பெரும்பாலானவர்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். அவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில், இந்தியர்கள் யாரும் சிக்கி கொண்டிருப்பதாக எந்த தகவலும் வெளியாகவிலை என்று கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 5 நாள் பிரசாரம்

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு  தொகுதியில் போட்டியிடும்  அ.தி.மு.க. வேட்பாளர் கேஎஸ் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 5 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல்  முடிவடைந்து, தற்போது 77 வேட்பாளர்கள் களத்தில்  உள்ளனர். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படஉ ள்ளது. இந்த நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி … Read more

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் அஜித்… லாக்கர்பை நினைவிடத்தில் அஞ்சலி…

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் நடிகர் அஜித் குமார் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள லாக்கர்பை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 1988 ம் ஆண்டு 270 பேரை பலி வாங்கிய போயிங் விமான வெடிவிபத்து உலகையே உலுக்கியது. ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பான் ஆம் 103 விமானத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இந்த விமானத்தில் பயணம் செய்த 243 பயணிகள் மற்றும் 16 ஊழியர்கள் பலியாகினர். … Read more