இன்று வாஜ்பாய் நினைவு தினம் : பிரதமர், குடியரசுத் தலைவர் மரியாதை

டில்லி இன்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம் என்பதால் அவர் நினைவிடத்தில் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாகத் தனது 93 வயதில் காலமானார். அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே டில்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இன்று  அவரது நினைவிடத்தில் … Read more

இன்று முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை பயணம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ராமநாதபுரம் சுற்றுப்பயணத்துக்காக இன்று மதுரை செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும்  ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  எனவே அவர் இன்று  மாலை சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை செல்கிறார்  அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை முனிச்சாலை பகுதிக்கு வருகிறார். அங்கே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்ட பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ரிங்ரோடு … Read more

சென்னை பல்லாவரத்தில் நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீட்பு…

சென்னை பல்லாவரத்தில் நித்தியானந்தா ஆசிரமம் ஆக்கிரமித்திருந்த அரசு புறம்போக்கு நிலம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று மீட்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் கொட்டகை அமைத்து கடந்த சில ஆண்டுகளாக நித்தியானந்தா ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்புடன் வந்த வருவாய் துறையினர் இங்கு அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்றி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். நாட்டை விட்டு வெளியேறிய குற்றவாளிகளின் பட்டியலில் … Read more

இந்தியாவில் பெண்களுக்குச் சம இடம் கொடுக்க ராகுல் காந்தி வலியுறுத்தல் 

டில்லி இந்தியா வெற்றி பெறப் பெண்களுக்குச் சம இடம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். . மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில் இந்திரா பெல்லோஷிப் என்ற உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை இளைஞர் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஆன்லைனில் இதற்கான விண்ணப்பம் செய்வதற்கான இணைப்பை அவர் பகிர்ந்துள்ளார். ராகுல்காந்தி இது குறித்து, “பெண்கள் நமது சமுதாயத்தில் சம  … Read more

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் இந்திய குடியுரிமை பெறும் கனவு நிறைவேறியது

பாலிவுட் திரையுலகில் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அக்‌ஷய் குமார் தனது கனடிய குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். இந்திய குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்கர்களும் மேலும் பல வெளிநாட்டினர்களும் விண்ணப்பித்துள்ள நிலையில் அக்‌ஷய் குமாருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷய் குமார் சுதந்திர தின வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். Dil aur citizenship, dono Hindustani. Happy Independence Day! Jai Hind! 🇮🇳 pic.twitter.com/DLH0DtbGxk … Read more

தமிழுடன் இந்தியையும் கற்கத் தமிழர்களை வலியுறுத்தும் அமித்ஷா

அகமதாபாத் தமிழுடன் இந்தியையும் தமிழர்கள் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.  மேலும், அவர் இந்த விழாவில் உரையாற்றினார் அமித்ஷா தனது உரையில் ”அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாப்பதும், உயர்த்துவதும் பட்டம் பெறும் உங்கள் அனைவரின் கடமை. காரணம், அவைதான் நமது கலாச்சாரம், வரலாறு, இலக்கியம் மற்றும் இலக்கணத்தை … Read more

ஒவ்வொரு இந்தியனின் உள்ளிருந்தும் ஒலித்த பாரத மாதாவின் குரல் என் ஆணவத்தை அழித்தது : ராகுல் காந்தி

ஒவ்வொரு இந்தியனின் உள்ளிருந்தும் ஒலித்த பாரத மாதாவின் குரல் என் ஆணவத்தை அழித்தது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “கன்னியாகுமரி கடல் முனையில் ஆரம்பித்து காடு, மலை, நகரம் என்று வெயில், மழை, பனி, என அனைத்து பருவநிலையிலும் 145 நாட்கள் தொடர்ந்த பயணம் பனிபொழியும் காஷ்மீரில் நிறைவடைந்தது. தினமும் 8 முதல் 10 கிலோ மீட்டர் ஓடும் எனக்கு தினமும் … Read more

வான்வழித் தாக்குதலால் எத்தியோப்பியாவில் 26 பேர் மரணம்

அம்ஹாரா எத்தியோப்பியா நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியா நாட்டில் உள்ள அம்ஹாரா பகுதியில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  இதை மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவம் எத்தியோப்பியாவில் இராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக நடைபெற்றுள்ளதாகவும் இது டிரோன் தாக்குதல் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். இதையொட்டி மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் அனைத்து மோதல் … Read more

77வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் … Read more

நீட் தேர்வு முறையை அகற்ற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்  -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து … Read more