காய்கறி விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: காய்கறி விலை தீடீர் என்று உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 30ம் தேதி ரூ.6க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.15க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் விலை இருமடங்காக உயர்வு-ரூ.40க்கு விற்பனையான பீன்ஸ் தற்போது ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.7-12 வரை விற்பனையான வெண்டைக்காய் தற்போது ரூ.30-35க்கு விற்பனையாகிறது. திடீரென காய்கறி விலை உயர்ந்துள்ளதால். பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்ற செய்தி நேற்று வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்த கல்வித்துறை, தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்றும், பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பிற கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பிரதமரானார். இந்த நிலையில், பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று இம்ரான் … Read more

இலங்கையில் சமூக வலைதள சேவைகள் முடக்கம்

கொழும்பு: இலங்கையில் சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறிக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோட்டபய … Read more

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளளது. Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், … Read more

அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருகை தந்த தலைவர்களுக்கு ஸ்டாலின் நன்றி

Anna – Stalin thanks the leaders who attended the opening ceremony of the Artist Academy புதுடெல்லி: டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருகை தந்த தலைவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், டெல்லியில் அண்ணா … Read more

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி துரைமுருகன் கண்டனம்

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தாலும், வன்னியர் ஒதுக்கீட்டை நிலைநிறுத்த தமிழ்நாடு அரசு அனைத்து வாதங்களையும் முன்வைத்தது என்றும், உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது திமுக அரசு தான் எந்த எந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினர்கள் என்பது தீர்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது … Read more

ஐபிஎல் 2022: ராஜஸ்தான், குஜராத் அணிகள் வெற்றி

மும்பை:  ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் – மும்பை அணிகள் இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 100 ரன்கள் அடித்தார். மும்பை பந்து வீச்சாளர்களில் பும்ப்ரா, மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், … Read more

நாளை முதல் ரமலான் நோன்பு – தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளது. இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஆங்கில நாள்காட்டிக்கும், இஸ்லாமிய நாள்காட்டிக்கும் வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ரமலான் மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாள்காட்டியில் 11 நாட்கள் குறைந்து தொடங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி ரமலான் மாதம் தொடங்கியது. இந்நிலையில்,வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய … Read more

1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்றும் 6-9ஆம் வகுப்புகளுக்குமே 5 முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.