கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்த வேண்டும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி  பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,   இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (7-2-2023) எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத … Read more

துருக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிதைந்து போன 2200ஆண்டு பழமையான காசியான்டெப் கோட்டை…

துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கி தரைமட்டமான நிலையில், பாரம்பரிம் மிக்க  2200 ஆண்டு பழமைவாய்ந்த காசியான்டெப் கோட்டையும் உடைந்து நொறுங்கி சிதைத்துபோனது. இந்த பாரம்பரியமான மற்றும் பழமையான கோட்டை  அண்மையில் புனரமைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில்,  தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பழமையான காசியான்டெப் கோட்டை தரைமட்டமானது. துருக்கியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்தன. அதில், 2200 ஆண்டுகளுக்கு … Read more

திமுகவின் பி-டீமாக செயல்படும் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஐ சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை! ஜெயக்குமார்

சென்னை:  திமுகவின் பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் ஈபிஎஸ் ஐ சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை”  என அதிமுக  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஈரோடு இடைத்தேர்தல் விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இபிஎஸ் அறிவித்த வேட்பாளர் தென்னரசு களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவு கேட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பும் ஆதரவு தரும் என கூறிய நிலையில், வேட்பாளர் பெயரை கூறாமல் … Read more

பத்திரப்பதிவுக்கு ரூ.50ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக பிடிபட்ட சேலம் சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகர்…

சேலம்: பத்திரப்பதிவுக்காக ரூ.50 ஆயிரம்  லஞ்சம் பெற்ற  சேலம் குகைப்பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தின் சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகர்‘ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். . சேலம் மாவட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல் (38). என்பவர்,  தாயின் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்கான  தான செட்டில்மெண்ட் செய்வதற்காக, சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்திற்கு  வந்து விசாரித்துள்ளார். அப்போது இடைத்தரகர் கண்ணன் என்பவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், … Read more

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி மற்றும் 4 பேர் பதவி ஏற்றனர்…

சென்னை: மெட்ரோல் உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி உள்பட 5 பேர் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி பொறுப்பு ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனவரி 17 அன்று எல் விக்டோரியா கௌரியை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்ததையடுத்து, அவரை குடியரசு தலைவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி அவரது பதவி ஏற்பு விழா இன்று காலை … Read more

15ந்தேதிக்குள் ஆதார் எண் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த இயலாது! அதிகாரிகள் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் எண் இணைக்காதவர்கள் பிப்ரவரி 15ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் கட்ட இயலாது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.   தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் தொடங்கப்பட்ட இந்த மின் இணைப்பு … Read more

உயர்நீதிமன்றத்தில் இன்று 5 நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்காக தனியாா் வாகன சேவை தொடக்கம்

சென்னை: ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூா் டி.எல்.எப். சைபா்சிட்டி வரை தனியாா் வாகன இணைப்பு சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாக இயக்குநா் மு.அ.சித்திக் தொடக்கி வைத்தாா். போரூா் டி.எல்.எப். சைபா் சிட்டி பணியாளா்களின் ரயில் போக்குவரத்து நலன் கருதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ‘பாஸ்ட் ட்ராக்’ நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை தொடங்கியுள்ளது.

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,600ஐ தாண்டியது

அங்காரா: துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே நேற்று அதிகாலை  7.8 ரிக்டர் அளவில் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 17.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த … Read more