ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்காக தனியாா் வாகன சேவை தொடக்கம்

சென்னை: ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூா் டி.எல்.எப். சைபா்சிட்டி வரை தனியாா் வாகன இணைப்பு சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாக இயக்குநா் மு.அ.சித்திக் தொடக்கி வைத்தாா். போரூா் டி.எல்.எப். சைபா் சிட்டி பணியாளா்களின் ரயில் போக்குவரத்து நலன் கருதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ‘பாஸ்ட் ட்ராக்’ நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை தொடங்கியுள்ளது.

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,600ஐ தாண்டியது

அங்காரா: துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே நேற்று அதிகாலை  7.8 ரிக்டர் அளவில் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 17.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த … Read more

அதிசய சாஸ்தா திருக்கோயில், சுசீந்திரம்

அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், கேப் ரோடு, ஆசிராமம், சுசீந்திரத்தில் அமைந்துள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவைக் குல தெய்வமாக வணங்கினர். தங்களது இருப்பிடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென எண்ணியவர்கள் ஒரு சாஸ்தா சிலை வடித்தனர். இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய அளவில் கோயில் எழுப்பினர். பிற்காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உணர்ந்தார். … Read more

சாதியை உருவாக்கியது ‘பண்டிதர்கள், கடவுள் அல்ல! ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பரபரப்பு பேச்சு…

மும்பை:  ‘பண்டிதர்கள் சாதியை உருவாக்கினர், கடவுள் அல்ல’ என்று கூறியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,  மதம் என்பது ஒருவரின் வயிற்றை நிரப்புவது அல்ல, எந்த சூழ்நிலையிலும் உங்கள் மதத்தை விட்டு வெளியேறாதீர்கள்  என்று கூறியுள்ளார். மோகன் பவத்தின் இந்த திடீர் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  கடவுளுக்கு முன் அனைவரும் சமம், சாதி பிரிவினைகளை பண்டிதர்கள் தான் உருவாக்கினார்கள், எல்லா வேலையும் சமுதாய நலனுக்காகவே செய்யப்படும்போது … Read more

தெரு பெயர்ப் பலகைகளின்மீது சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை:  சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மீண்டும் அறிவித்து உள்ளது. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மாநகராட்சி, இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வரும் நிலையில், மீண்டும் நடவடிக்கை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள … Read more

எத்தனை பேர் எடப்பாடிக்கு ஆதரவு? தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பித்தார் தமிழ்மகன் உசேன்…

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் உள்ள அகில இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். முன்னதாக, ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்றார். ‘ அதிமுகவில் நிலவி வரும் பிரச்சினை காரணமாக, ஈரோடு இடைத்தேர்தலில் இரு தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி தொடர்ந்த வழக்கில், … Read more

வழக்கறிஞர் கவுரி உள்பட 5 பேரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவு!

சென்னை: வழக்கறிஞர்  விக்டோரியா கவுரி உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.   உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் எட்டு பேரை பரிந்துரை செய்த நிலையில், 5 பேரை மத்தியஅரசு குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூடு தலைமையில்  கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்து … Read more

ரூ.1057 கோடி மதிப்பிட்டில் தமிழ்நாட்டிற்கு 9 புதிய ரயில் பாதைகள்! மத்திய பட்ஜெட்டில் தகவல்…

டெல்லி:  40 ஆண்டுகளுக்குப்பின், தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் வழித்தடம் மற்றும்  ரயில்பாதைகள் விரிவுபடுத்த  2023-24 மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2022) தாக்கல் செய்த பட்ஜெட்டிலும்,  தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்,  46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன கூறியிருந்தது. அதுபோலவே இந்த ஆண்டும், அதே அளவிலான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் … Read more

தமிழக ரயில் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு – போதுமான நிதி ஒதுக்கிடு செய்யவில்லை! மதுரை எம்.பி. குற்றச்சாட்டு

மதுரை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். பிப்ரவரி 1ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், ரூ. 2.40 லட்சம் கோடி  ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதில்,  தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் வழித்தடம் மற்றும்  ரயில்பாதைகள் விரிவுபடுத்த  ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மத்திய … Read more