பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தில் ரூ.4000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல் ’

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி ரூ.4000 கோடி அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி, மத்தியப்பிரதேச மாநிலத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் . அம்மாநிலத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான ரயில்வே மற்றும் சாலை திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார் . பிரதமர் மோடி சுமார் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பிலான கோட்டா – பினா ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். … Read more

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை

சென்னை இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி   காரணமாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. தவிரச் சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான  மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்தது.  … Read more

குடியரசுத் தலைவர் டில்லி நிர்வாக மசோதாவுக்கு ஒப்புதல்

டில்லி குடியரசுத் தலைவர் டில்லி நிர்வாக மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார்.  கடந்த ஏப்ரல் மாதம் டில்லி அரசின் அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்ய டில்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாகக் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மத்திய அரசு அந்த தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் கடந்த மே மாதம் சு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு … Read more

நாள் முழுவதும் வீட்டுக்கு வராத மகளை வெட்டிக் கொன்ற தந்தை

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நாள் முழுவதும் வராத 20 வயதுப் பெண்ணை அவர் தந்தை வெட்டிக் கொலை செய்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்றுள்ளார், பஞ்சாபில் அமிர்தசரஸ் அருகில் உள்ள முச்சல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாவ். இவர் ஒரு  கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி 20 வயதில் மகள் ஒருவர் இருந்தார். அவரது மகள் கடந்த புதன்கிழமை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். பிறகு அவர் வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்தார். … Read more

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த அரங்கம் விரைவில் அமையும்… ஏ.ஆர். ரஹ்மான் கோரிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. தொடர் மழை காரணமாகவும் மோசமான வானிலை காரணமாகவும் இந்த நிகழ்ச்சி வேறு தேதிக்கு மாற்றப்படுவதாக கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து சென்னையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென்று தமிழக அரசு அரங்கம் அமைத்துத் தரவேண்டும் என்று ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். I hope and … Read more

நீட் தேர்வுக்கு ஆதரவு : ஆளுநருக்குத் தமிழக அமைச்சர் கண்டனம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  எனவே தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.   ஆனால் ஆளுநர் இதுவரை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.  இன்று தமிழக ஆளுநர் தாம் எக்காலத்திலும் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒப்புதல் கையெழுத்து … Read more

மெகா விற்பனை : தக்காளி விற்பனையில் கலக்கி வரும் மத்திய அரசு… டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் மக்கள் மகிழ்ச்சி…

பெண்கள் மீதான பாலியல் வன்முறை, இனக்கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க நமக்கு தக்காளி சட்டினியாவது மிஞ்சுமா என்று எண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது நிதர்சனம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 100 முதல் 200 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் தற்போது இதன் விலை 100 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. Deployment of 70 mobile vans in all the legislative constituencies of Delhi … Read more

காங்கிரஸ் கட்சியின் இணையதளத்தை ஹேக் செய்ததாக கர்நாடகாவில் 4 பேர் கைது… பாஜக தேர்தல் வியூக வகுப்பாளரை காவல்துறை தேடிவருகிறது…

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இணையத்தளம் மற்றும் தலைவர்களின் சமூக வலைதள முகவரிகள் ஹேக் செய்யப்பட்டது. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரிடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஹாசன் மற்றும் பெங்களூரில் நடத்திய சோதனையில் வெட் ஃபேப் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர்கள் உள்ளிட்ட நான்கு முக்கிய … Read more

ஜெயலலிதா சேலை இழுப்பு குறித்து நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் பதில்

சென்னை ஜெயலலிதாவின் சேலை இழுப்பு அவரே அரங்கேற்றிய நாடகம் என முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் சேலையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்திய கட்சி திமுக என விமர்சித்துப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  முதல்வர் இது குறித்து ‘இந்துஸ்தான் … Read more

அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூர்: கிருஷ்ணகிரிக்கு செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரிக்கு வரும் வழியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் காரிமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயண இருதயலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.