நாங்குநேரி பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: முதலமைச்சர் போனில் நலம் விசாரிப்பு – அமைச்சர்கள் நேரில் ஆறுதல்…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் ஜாதிய வேறுபாடு காரணமாக  பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் போனில் நலம் விசாரித்தார்.  சபாநாயகர் அப்பாவு உள்பட தமிழ்நாடு  அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். காயமடைந்த மாணவர் சின்னதுரையின் தாயார் அம்பிகாவதியிடம் தொலைபேசி … Read more

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம், சுகாதார முன்மாதிரி கிராம விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த இரு ஆண்டுகளுக்கான  சுகாதார முன்மாதிரி கிராம விருது வழங்கி கவுரவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகள் -ஆறு கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 இலட்சம் மற்றும் கேடயம்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, 2021-22, 2022-23ம் ஆண்டுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருதுகள் வழங்கப்பட்டது.. விருதிற்கு தேர்வான 6 ஊராட்சிகளுக்கு தலா … Read more

ஆகஸ்ட் 15-ஆம் தேதி வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்! ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்!

திருவண்ணாமலை:  ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திருவண்ணாமலை மாவட்டம் சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு கோவிலை சுற்றி கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் குனிகாந்தூரில் செயல்பட்டு வரும்  ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப்பள்ளி  விழாவில்  கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பேசிய … Read more

குருவாயூா் கிருஷ்ணன் கோயிலுக்கு ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்,  குருவாயூா் கோயிலுக்கு ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம் வழங்கி பிராத்தனை செய்தார். முதல்வர் ஸ்டாலின் இந்து மதத்துக்கு எதிராக பேசி வரும் நிலையில், அவரது மனைவி துர்கா, கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் செய்து வருகிறார். திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி இருவருமே எந்த ஒரு பிரச்சாரத்திலும் மதசார்பின்மையை வலியுறுத்துவதுடன் இந்து மதத்துக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வர். ஆனால், … Read more

இன்று ஊட்டியில் பழங்குடியின மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஊட்டிக்கு வந்து பழங்குடியின மக்களை சந்திக்க உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையால்  பறிபோனது. உச்சநீதிமன்றம் இந்த தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆகி நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றினார். இன்றும் நாளையும் அவர் தனது தொகுதியான வயநாட்டைப் பார்வையிட செல்வதற்காகத் திட்டமிட்டு உள்ளார்.  செல்லும் வழியில் ராகுல் … Read more

6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள்: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக, இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை உதகை வருகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை காலை உதகை வருகிறார். நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவு பெறுவதை அடுத்து நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். இந்த நிலையில் நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்திற்கு … Read more

செங்கல்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் திருச்சி சென்னை நெடுஞ்சாலை உள்ளது. இதில், 24மணிநேரம் பேருந்துகள் உள்பட வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். இந்த நிலையில், அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில், இன்று காலை பணி நிமித்தமாக வெறு இடங்களுக்கு செல்லும் வகையில், ஏராளமானோர் நகரப்பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, திடீரென திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில், … Read more

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கடன் அதிகமானது – அமைச்சர்

சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவின் கடன் அதிகமானது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். நாட்டிலேயே தமிழ்நாடுதான் அதிக கடன் சுமை கொண்ட மாநிலம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்த போது இதனை தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தி … Read more

‘சந்திரமுகி 2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘ஸ்வாகதாஞ்சலி’ வெளியானது…

சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியானது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் பி. வாசு இந்தப் படத்தை இயக்குகிறார். ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம். கீரவாணி இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் ‘ஸ்வாகதாஞ்சலி’ இன்று வெளியாகி உள்ளது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ‘ரா ரா’ ஸ்டைலில் சந்திரமுகி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடலும் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.