ஜூலை-16: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 56-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 56-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகளவில் 56.61 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 63.84 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 53.75 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற தடை! இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி

கொழும்பு: இலங்கையில் தொடரும் பதற்றத்தால், அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கோத்தபய தம்பிகளான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை  உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூலை 28 வரை நீதிமன்ற அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று கூறி உள்ளது. இலங்கையில் ராஜபக்சேக்களின் தான்தோன்றித்தனமான ஆட்சியின் அவலத்தால், அங்க வரலாறு காணாத வகையில்கடும் பொருளாதார நெருக்கடி … Read more

நாடாளுமன்றத்தில் சில வார்த்தைகள் பேசக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதை விமர்சிக்கும் கார்ட்டூன் – ஆடியோ

நாடாளுமன்றத்தில் சில வார்த்தைகள் பேசக்கூடாது என மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து கார்ட்டூன் விமர்சித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/07/Pari-Audio-2022-07-15-at-2.30.38-PM.ogg

துல்கர் சல்மான் – மிருணாள் தாகூர் நடிக்கும் சீதாராமம் படத்தில் மேஜர் செல்வனாக கௌதம் மேனன்

துல்கர் சல்மான் – மிருணாள் தாகூர் ஜோடியாக நடிக்கும் படம் சீதாராமம். வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் சீதா ராமம் படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 1965 ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காதல் கதையை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். Attention Everyone! 𝐌𝐚𝐣𝐨𝐫 𝐒𝐞𝐥𝐯𝐚𝐧 is here! Here’s the first look … Read more

விலையில்லா மடிக்கணினி திட்டம் ரத்து செய்யப்படவில்லை! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: விலையில்லா மடிக்கணினிகளில் உள்ளமுன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களை நீக்க பள்ளிக் ல்வித்துறை அண்மையில் உத்தரவிட்ட நிலையில், விலையில்லா மடிக்கணினி திட்டம் ரத்து செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்து உள்ளார். இதனால் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் லேப்டாக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது அஇஅதிமுக தனது  தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து … Read more

தேர்வில் சாதி குறித்து சர்ச்சையாக கேள்வி இடம்பெற்ற விவகாரத்தில் விளக்கம் அளிக்க நோட்டீஸ்

சென்னை: பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதி குறித்து சர்ச்சையாக கேள்வி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமத்துவ தலைவரான பெரியார் பெயர் கொண்ட சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், முதுகலை தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி ? என கேள்வி கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மாணவி ஒருவர் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறியது பெரும் … Read more

செஸ் ஒலிம்பியாட் – 2022 : ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரஜினி வெளியிட்ட அசத்தல் டீசர்..

செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டியின் டீசரை வெளியிட்டார் ரஜினிகாந்த். 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் துவக்கவிழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 186 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் இந்த போட்டியின் … Read more

தமிழ்நாட்டில் இன்று 2312 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 618 பேருக்கு பாதிப்பு…

திருவள்ளூரில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,029 ஆக உயர்வு. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 618, செங்கல்பட்டில் 370, திருவள்ளூரில் 168 மற்றும் காஞ்சிபுரத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 153, திருநெல்வேலி 68, தூத்துக்குடி 54, சேலம் 83, கன்னியாகுமரி 50, திருச்சி 51, விழுப்புரம் 51, ஈரோடு 41, ராணிப்பேட்டை 49, … Read more

குழந்தைகள் 7மணிக்கே பள்ளிக்கு செல்லும்போது நீதிபதிகளால் 9மணிக்கு விசாரணையை தொடங்க முடியாதா? உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி

டெல்லி: குழந்தைகள் 7மணிக்கே பள்ளிக்கு செல்லும்போது நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களால் 9மணிக்கு விசாரணையை தொடங்க முடியாதா? உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பி உள்ளார். ‘குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்குச் செல்லலாம் என்றால், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் காலை 9 மணிக்குத் தொடங்க முடியாது?’ என உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். யுயுலலித்,  இவர் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறப்போகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரு வார நாளில் … Read more