கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை: இந்தியாவில் முதன்முதலாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு மங்கிபாக்ஸ் உறுதி…

டெல்லி: இந்தியாவில் முதன்முதலாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு மங்கிபாக்ஸ் (குரங்கு அம்மை) தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இறுதியில், உலகில் பேரழிவை ஏற்படுத்தி கொரோனா என்ற பெருந்தொற்று நோய் பாதிப்பும் முதன்முதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் உறுதி செய்யப்பட்டிருந்தது. Sample picture இந்தியாவில் முதல்முறையாக கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைக ளுக்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு … Read more

சாதி ரீதியிலான கேள்வி: பாலியல் சர்ச்சையை தொடர்ந்து மீண்டும் சர்ச்சையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம்!

சேலம்:  சமத்துவ தலைவரான பெரியார் பெயர் கொண்ட சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்,  முதுகலை தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி ? என கேள்வி கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மாணவி ஒருவர் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.  சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தமிழகத்தில் எது தாழ்ந்த … Read more

பிரபல திரைப்பட நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்…

சென்னை: நடிகை ராதிகாவின் முன்னாள் கணவரும், பிரபல திரைப்பட நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் இன்று சென்னையிலுள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது வயது 70. 1952 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் வணிகக் குடும்பத்தில் பிறந்த பிரதாப் போத்தன், ஐந்து வயதில் ஊட்டியில் உள்ள உறைவிடப் பள்ளிக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்தார், அங்கு ஓவியம் வரைந்தார். அவருக்கு 15 வயதாக இருந்தபோது அவரது தந்தை இறந்தார், பின்னர் கல்லூரி கல்வியை சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில்  … Read more

பள்ளி மாணவர்கள் கையில் கையிறு, காப்பு,  கம்மல், செயின் அணியக் கூடாது! சமூக பாதுகாப்புத்துறை அறிவிப்பு..

சென்னை: பள்ளி மாணாக்கர்கள் கையில் கையிறு, காப்பு,  கம்மல், செயின் அணியக் கூடாது என சமூக பாதுகாப்புத்துறை  பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறை மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதில்,  பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகங்களில் எந்த மாதிரி யான பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும்,  குறிப்பாக பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. றந்த … Read more

வார ராசிபலன்: 15.7.2022 முதல் 21.7.2022வரை! வேதா கோபாலன்

மேஷம் மனி மேட்டர்ஸ் எல்லாம் நல்லபடியே காணப்படுதுங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், டிரஸ்களும் நகைங்களும் சேர  வாய்ப்பு இருக்குங்க. ரிலேடிவிஸ்ஸூடன் வீண் மனவருத்தம் வராதபடிக்கு சூப்பரா மேனேஜ் செய்வீங்க. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வாரத் தொடக்கத்தில் செலவுகளில் திட்டமிடல் ரொம்பவும் அவசியம். ஆபீசில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனமா இருந்து ஜமாய்ப்பீங்க. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்காம உங்க டியூட்டியை மட்டும் கரெக்டா செய்துகிட்டு வாங்க. லக்-கை … Read more

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று கனமழை தொடர்ந்து வருகிறது.  இந்நிலையில், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர் கனமழை … Read more

ஜூலை-15: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 55-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 55-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மருதமலை முருகன் கோவில்

மருதமலை முருகன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை என்ற ஊரில் அமைந்துள்ளது. பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, “பாம்பு வைத்தியர்” என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர், நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, “உடலுக்குள் இருக்கும் பாம்பை (குண்டலினி சக்தி) கண்டறிவதுதான் பிறப்பின் பயனாகும். அதைவிடுத்து காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் … Read more

விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வேளாண் கொள்கை! தலைமைச் செயலாளர் இறையன்பு தகவல்

சென்னை: விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வேளாண் கொள்கை உருவாக்கப்படும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்து உள்ளர். சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் (13–ந் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  இயற்கை வேளாண்மை, குறுவை நெல்சாகுபடிக்காக துறை மேற்கொண்டு வரும் பணிகள், எதிர்வரும் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் தோட்டக்கலை விளைபொருட்கள் குறிப்பாக, தக்காளி, வெங்காயம் போன்ற விளைபொருட்கள் அறுவடை மற்றும் வேளாண்மை -உழவர் … Read more

அதிமுக விவகாரத்தில் ஜனநாயக முறைப்படி நடவடிக்கை! சபாநாயகர் அப்பாவு…

சென்னை: அதிமுகவில் தற்போது எழுந்துள்ள பிரச்சினையில், ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை பிரச்சினை காரணமாக, பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்கு ஓபிஎஸ் தடை கேட்டு நீதிமன்றங்களை நாடிய நிலையில், தடை விடைக்கவில்லை. இதையடுத்து கடந்த 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  இதை தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட … Read more